வெந்து தணிந்தது காடு விமர்சனம்

 


நாயகன் சிம்பு தனது அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். சிம்பு காட்டில் வேலை செய்யும் போது திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அந்தக் காட்டின் உரிமையாளருக்கும் சிம்புவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் சிம்புவின் தாய் ராதிகா அவரை மும்பைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். தன்னை மும்பைக்கு அனுப்பி வைப்பதாக கூறிய சிம்புவின் மாமா திடீரென தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போகிறார். மும்பைக்கு செல்லும் சிம்பு அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சேர்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.


முத்து என்கிற முத்துவீரன் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொண்டு, முற்றிலுமாக பொருந்தியிருப்பதுடன், ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பை சிலம்பரசன் கொடுத்துள்ளார். கதாநாயகியாக வரும் சித்தி இத்தானி முதல் படத்திலேயே அழகான நடிப்பை கொடுத்துள்ளார். சிம்புவின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா தனது அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார். கௌதம் மேனனின் திரைக்கதை மற்றும் இயக்கம் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சி இரண்டையும் தரமான முறையில் கொடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை கூடுதல் பலம். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வரிசையில் வெந்து தணிந்தது காடு படமும் வெற்றியை தட்டி பறித்துள்ளது.

0 comments:

Pageviews