சீதாராமம் விமர்சனம்

 


இந்திய ராணுவத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றுகிறார் ராம் எனும் துல்கர் சல்மான். ஹைதராபாத் ராஜ வம்சத்து இளவரசி நூர்ஜஹானாக மிருணாள் தாக்கூர் இருக்கிறார். 1964 ஆம் ஆண்டில் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் போது சாமர்த்தியமாகவும், புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்ட ராம் மற்றும் அவரது குழுவினரை தேசம் முழுவதும் கதாநாயகர்களாகக் கொண்டாடுகிறது.  இந்த கொண்டாட்டம், வானொலி மூலமாக தேச முழுவதும் பிரபலமாகிறது. இந்த தருணத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ராஜ வம்சத்து இளவரசியான நூர்ஜஹான், ‘சீதா மகாலட்சுமி’ என்ற பெயரில் அன்றைய தேசத்து நாயகனான காஷ்மீர் ராணுவத்தில் பணியாற்றும் ராமிற்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்.  இந்த கடிதம் வாயிலாக காதல் அரும்புகிறது. இந்த காதலை ராம் எப்படி வளர்த்தெடுத்தார். தன் காதலியை தேடி கண்டறிந்து கை பிடித்தாரா? இல்லையா?  என்பதை ஒரு காலகட்டத்திய கதையாகவும்,  சூழ்நிலை கைதியாக பாகிஸ்தான் சிறையில் வாடும் ராம், தன் காதல் மனைவிக்காக எழுதிய காதல் கடிதத்தை கொண்டு சேர்க்குமாறு ,அந்நாட்டு ராணுவ தளபதியிடம் கேட்டுக்கொள்கிறார். அந்த கடிதம் அவரது பேத்தியான ரஷ்மிகா மந்தானா, சீதா மகாலட்சுமிடம் கொண்டு சேர்த்தாரா? இல்லையா? என்பதை 1985 ஆம் ஆண்டிற்கானக் காலகட்டத்திய கதையாகவும் ‘சீதா ராமம்’ உருவாகி இருக்கிறது.


ராமாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் தூள் கிளப்பி இருக்கிறார். இளம் இராணுவ வீரனுக்கான துடிப்பும், மிடுக்கும் நிறைந்திருக்கும் அவர், சீதாவை கடிதத்தின் மூலம் கண்டு அவரைத் தேடிப் பிடிக்கும்  காட்சி பரவசமானது என்றால், கடைசி வரை சீதாவைப் பற்றிய உண்மை அவருக்குத் தெரியாமலேயே போவது பரிதாபகரமானது. சீதா மகாலஷ்மியாக புதுமுகம் மிருணாள் தாகூர். ஆரம்பத்தில் இயல்பாக அறிமுகமாகி, போகப்போக மறக்க முடியாத அழகியாகப் பதிகிறார். பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் இருவரும் இந்திய ராணுவ அதிகாரிகளாக மிடுக்காக இருக்கிறார்கள். வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா இருவரும் திரைக்கதை தொய்வில்ல்லாமல் இருக்க  உதவியிருக்கிறார்கள். வசனம், பாடல்களை எழுதிய மதன் கார்க்கி தமிழுடன் விளையாடி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் எங்கோ கேட்டது போல இருந்தாலும் காதுகளையும், உள்ளத்தையும் ஆக்கிரமிக்கிறது.

0 comments:

Pageviews