எமோஜி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்



கதையின் நாயகன்(மகத்) ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிறான் , எதார்த்தமாக(மானசா ) ஒரு பெண்ணை பார்க்கிரான், காதலிக்கிறான் சில நாட்கள் கழித்து இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிடுகிறது அதற்கான காரணம் அவர்களுக்குள் இருந்த ஒரு ஒப்பந்தம் தான் என்பது தெரிய வருகிறது பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் நாயகன் தவிக்கிறான் அப்போது தேவிகாவை பார்க்கிரார் அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை வெளிப்படுத்துகிறான் பிறகு இருவருக்கும் திருமணமும் நடக்கிறது மிகவும் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருந்த திருமண வாழ்க்கைக்குள் திடீரென்று இருவரும் டைவர்ஸ் செய்ய முயற்சிக்கின்றனர், இவர்கள் டைவர்ஸ் செய்ய காரணம் என்ன என்பதும் கடைசியில் இவர்கள் டைவர்ஸ் செய்தார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…


இயக்குனர் ரங்கசாமி தற்போது உள்ள இளைஞர்களை மனதில் வைத்து இதை இயக்கியுள்ளார். இது 18+ கதைக்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டம் இல்லாத நடிப்பால் மனதில் நிற்கிறார் மகத்.தேவிகா, மானசா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படிப்பு வருமானம் சுதந்திரம் என்பதை இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தத் தொடர்.எவ்வளவு சீக்கிரம் ஆண் பெண் நட்பைக் காதலாக்கிக் கொள்வதற்கு அவசரப்படுகிறார்கள் என்பதையும் அவ்வளவு விரைவாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதையும் அழகாகக் காட்சிகளின் மூலம் காட்டியுள்ளார்கள்.



 

0 comments:

Pageviews