விருமன் விமர்சனம்
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் விருமன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரசு அதிகாரியாக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள். இவர்களில் கடைசி மகன் தான் கார்த்தி. தன்னுடைய அம்மா சரண்யா பொன் மன்னனின் மரணத்திற்கு அப்பா பிரகாஷ் தான் காரணம் என்பதால் தனது தந்தையை கொலை செய்யவேண்டும் என துடிக்கிறார் கார்த்தி. இதனையடுத்து தாய் மாமன் ராஜ்கிரண் கார்த்தியை அவருடைய தந்தையிடம் இருந்து தனியாக அழைத்து செல்கிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையை சந்திக்கும் கார்த்தி அதே கோபத்துடன் இருக்கிறார். இறுதியில் என்ன நடந்தது? என்பதே மீதி கதை.
நாயகன் கார்த்தி வழக்கம் போல வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அறிமுக நாயகி அதிதி சங்கர் கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுத்துள்ளார். பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பின் மூலம் அசத்துகிறார். ராஜ்கிரண். சரண்யா பொன்வண்ணன், வடிவுகரசியின் அனுபவ நடிப்பு கச்சிதம். சூரியின் நகைச்சுவை திரையரங்கில் சிரிப்பு அலை. தேனி மாவட்டத்தின் அழகைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம்.
மொத்தத்தில் விருமன் விறுவிறுப்பாக செல்கிறது .
0 comments:
Post a Comment