வேழம் விமர்சனம்

 


ஊட்டிக்கு தனது காதலியுடன் பைக்கில் டிராவல் செய்து கொண்டிருக்கும் ஹீரோ அசோக்கை (அசோக் செல்வன்) ஒரு இரும்பு ராடால் தாக்கி விட்டு அவரது காதலி லீனாவை (ஐஸ்வர்யா மேனன்) மர்ம நபர் கொன்று விடுகிறார். 7 ஆண்டுகள் கழித்து என அதன் பிறகு படம் ஆரம்பிக்க தாடி லுக்கில் படம் முழுக்க கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு ஹீரோ அசோக் தேடுவதும், கடைசியில் கண்டுபிடித்தாரா? எதற்காக அந்த கொலை நடந்தது? என்பதும் தான் வேழம் படத்தின் கதை.


ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் அசோக் செல்வன். தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால் படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் அசோக் செல்வனின் காதலியாக நடித்துள்ளார். தெகிடி படத்தில் இணைந்து நடித்த அசோக் செல்வன் - ஜனனி வேழம் படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். காதலியின் பிரிவால் உடைந்து கிடக்கும் அசோக்கிற்கு ஒரு தோழியாக ஆதரவு கொடுத்து அவரை ஒரு தலையாக காதலிக்கும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார். த்ரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை நிஜமாகவே முதல் பாதி ரசிகர்களுக்கு கொடுத்தது. ஊட்டி அழகை மறைத்து படத்திற்கு தேவையான சோக ஒளிப்பதிவை ஒளிப்பதிவாளரும் துக்க பின்னணி இசையை இசையமைப்பாளரும் கொடுத்துள்ளனர். 

0 comments:

Pageviews