பாட்டாம்பூச்சி விமர்சனம்

 


தூக்கு கைதியான ஜெய்யிடம் கடைசி ஆசை என்ன என்று கேக்க, என்னைப் பற்றி எழுதிய ரிப்போர்டரை சந்திக்க வேண்டும் என்கிறார். ரிப்போர்டரிடம் செய்யாத கொலைகளுக்காக என்னை தூக்கில் போட போகிறார்கள், இந்த கொலையை தான் நான் செய்யவில்லை. ஆனால் பல கொலைகளை செய்த பட்டாம்பூச்சி நான் தான் என கூறி ட்விஸ்ட் கொடுக்கிறார். கொலைகளை செய்துவிட்டு பட்டாம்பூச்சி ஓவியத்தை வரைந்துவிட்டு வந்ததால் அப்படி ஒரு பெயர். ஜெய் சொன்னதை வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த வழக்கை காவல்துறை அதிகாரியான சுந்தர்.சி மேற்கொள்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.


இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் சுந்தர்.சி அசத்தியிருக்கிறார்.  சைக்கோ கொலைகாரனாக ஜெய் நன்றாகவே நடித்திருக்கிறார். படத்தில் கேமரா மேன் நன்றாக உழைத்துள்ளார். பின்னணி இசை அடிக்கும் அடியால் காது ஜிவ் என்கிறது. எடிட்டரின் கட்ஸ் ஒருசில இடங்களில் மட்டும் கட்ஸாக இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் 1980-களை கண்களில் காட்ட போராடியிருக்கிறார். பட்டாம்பூச்சி கொலைகள் பற்றிய செய்திகளை எழுதும் பத்திரிகையாளராக ஹனி ரோஸ் நடித்துள்ளார் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சைக்கோ த்ரில்லர் படத்தை மிக விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் பத்ரி நாராயணன். மொத்தத்தில் சைக்கோ த்ரில்லர் பட பிரியர்கள் பார்க்க வேண்டிய படம்  இந்த பட்டாம்பூச்சி.


0 comments:

Pageviews