அம்முச்சி 2 விமர்சனம்

 


மித்ராவும், அருணும் காதலர்கள். மித்ரா வுக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது ஆசை. அதை அவரது தந்தை ஏற்க மறுக்கிறார். எப்படியாவது மித்ராவின் ஆசையை நிறைவேற்ற எண்ணும் அருண் ஊரிலிருந்து கிராமத் துக்கு வந்து மித்ராவின் தந்தையிடம் பேசுகிறார். அதை ஏற்காத தந்தை, காதலன் அருணை அடித்துவிரட்டுகிறார். அதே சமயம் மித்ராவை ரவுடி ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கி றார். ஊர்பஞ்சாயத்தில் அருணுக்கும், ரவுடி மசநாய் மணிக்கும் பந்தயம் ஏற்பட யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு மித்ராவை திருமணம் செய்து வைப்பதாக ஒப்புதல் ஆகிறது. இதற்காக ஊர் திருவிழாவில் இரண்டு கோஷ்டிக்கும் 5 போட்டி நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்கள். மித்ரா எடுத்த முடிவு என்ன என்பது தான் மீதி கதை? 

அம்முச்சி என்று டைட்டில் வைக்கப்பட்ட. தால் அம்முச்சியாக நடிக்கும் பாட்டி சின்னமணி மீது எப்போதும் ஒரு கவனம் இருந்துக்கொண்டே இருக்கிறது. ஊரிலிருந்து வரும் அருணை செல்லமாக வரவேற்று வேண்டியதெல்லாம் செய்து கொடுக்கும் அம்முச்சி , மித்ராவை அருண் காதலிப்பது தெரிந்ததும் ஒரு வில்லியா காவே மாறுவது எதிர்பாராத திருப்பம். பெருசுகளின் சண்டையெல்லாம் சிறுவயதில் போட்டுக்கொண்ட சிறு சிறு சண்டையின் எதிரொலி என்பது கிராமத்து மனிதர்களின் இயல்பு என்பதை மறுபதற்கில்லை. மித்ராவை பெண்கேட்டு வரும் மசநாய் மணி, பெண் தன்னை கட்டிக்கொள்ள மறுத்தும் அவரது வீட்டு மீது ஏறி வீட்டை நொறுக்குவதும், கடைக்காரர் கடன் கொடுக்கவில்லை என்பதற்காக அந்த கடையையே மொத்தமாக சாய்ப்பதுமாக கரடு முரடாக நடித்து யார் இந்த ரவுடி என கேட்க வைக்கிறார். இந்த பாத்திரத்தில் ராஜேஷ் பாலசந்திரன் நடித்துள்ளார். உடல் பலமில்லாவிட்டாலும் மனபலத்தால் ஹீரோ அருண் போட்டி களில் கலந்துகொண்டு பரபரக்க வைக்கிறார்.

அருண் நண்பராக வரும் சசி திடீரென்று அம்முச்சி பாட்டி பேச்சை கேட்டு நண்பன் அருணை போட்டிகளில் நம்பவைத்து கைவிடுவது வில்லத்தனமாக இருந்தாலும் கதைக்கு சூடு ஏற்றுகிறது. அருண் தோற்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சசி போட்டிகளில் தோற்று கடுப்பேற்றுகிறார் மைலார்ட்.

மல்யுத்த போட்டியும், ரேக்ளா பந்தயமும், சிலம்ப சண்டையும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது. அருண் கோஷ்டி ஜெயிக்  குமா,  தோற்குமா ? என்ற சஸ்பென்ஸ் கிளைமாக்சில் விறுவிறுப்பை கூட்டுகிறது. நாயகியாக நடித்திருக்கும் மித்ரா அசல் கிராமத்து பெண்ணாக நடிப்பில் அசர வைக்கிறார். சசியின் தந்தையாக வருபவரும், மித்ராவின் தந்தையாக வருபவரும் முறைப்பு காட்டி நினைவில் நிற்கின்றனர் நக்கலைட்ஸ், ஆஹா தமிழ் ஒரிஜனல் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி ரசிகர்களை கிராமத்து மண்ணுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ்குமார் எஸ். ஜே. மண்ணின் மணத்தை படம் முழுவதும் நிரப்பி இருக்கிறார்.


0 comments:

Pageviews