பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

 


சக்திவேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக்.


விதார்த் மற்றும் லட்சுமி காது கேட்காத மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளியாக உள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம் துபாயில் வேலை பார்க்கும் கருணாகரன் திருமணத்துக்காக சென்னை வருகிறார்.அப்போது மெட்ரோ ரயிலில் விதார்த் தூங்குவதை குடிபோதையில் தூங்குகிறார் என்று நினைத்து கருணாகரன் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்கில் பதிவிட அது வைரல் ஆகி விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவதற்கு சட்டத்தின் உதவியை நாடுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.


விதார்த் எப்போதும்போல தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் கருணாகரன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் காவல் அதிகாரி பாத்திரத்தில் முத்திரை பதித்திருக்கிறார் பிரேம். லட்சுமி ப்ரியா, மாசூம் சங்கர், மூணார் ரமேஷ், ராமச்சந்திரன் அனைவரும் இயல்பான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.


பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு பலம். இந்தப் படம் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

0 comments:

Pageviews