இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலைதளமான ‘ஹூட்’

 


திரைப்பட இயக்குனரும் தொழில்முனைவோருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV. தொழில்நுட்ப வல்லுநர், தொழில்முனைவோர் மற்றும் உலகளாவிய வணிகத் தலைவரான  சன்னி போகலாவுடன் இணைந்து உலகிற்கு இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தும் முதல் குரல்அடிப்படையிலான சமூக வலைதளமான 'ஹுட்' இன்று வெளியிட டப்பட்டுள்ளது. 15 இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளிலும் ஹுட் செயலி கிடைக்கப்பெறும். இதனால் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தங்கள் தனித்துவமான சொந்தக் குரலின் மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஹுட் அனுமதிக்கிறது, ஹுட் செயலியைப் பயன்படுத்த, 60 வினாடிகள் வரை ஆடியோ செய்தியைப் பதிவு செய்து, உலகிற்குப் பகிர வேண்டும். மேலும், Custom Library-யில் உள்ள ஒரு பின்னணி -இசையைச் சேர்த்து பயனர்களின் குரலுக்கு திரைப்படம் போன்ற அனுபவத்தைக் கூட்ட ஹுட் அனுமதிப்பது அதன் தனித்துவ அம்சமாகும். ஒரு செய்தியின் காட்சி நுணுக்கங்களை முழுமையாக வெளிப்படுத்த பயனர்கள்தங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை இணைப்பதற்கும் எங்கள் தளம் உதவுகிறது, கலைப் பின்னணியில் இருந்து, திரைக்கு முன்னும் பின்னும் மிகவும் சக்திவாய்ந்த அர்த்தமுள்ள குரல்களைக் கேட்டு வளர்ந்த தனக்கு, ஒருவரின் கருத்துக்களை உண்மையாகவும், தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் பகிர்ந்து கொள்வதற்கு குரலே பிரதான கருவியாக இருக்க முடியும் என நம்பிக்கை இருப்பதாக, ஹுட்டின் இணை நிறுவனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறுகிறார். முக்கியமான தகவல்களை தன் தந்தை ஆடியோவாக பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதும்,அது உணர்த்திய மாற்றமே ஹுட் தளம் உருவாவதற்கான சிந்தனை தோன்றிய இடமாக அவர் குறிப்பிடுகிறார். உலகின் புகழ்பெற்ற குரல்களையும் சாதாரண மக்களின்குரல்களையும் இணைத்து, வலிமை மிக்க மனித உறவுகளை உருவாக்கும் தளமாக ஹுட் இருக்கும் என அவர் நம்புகிறார்.


ஹுட் டின் இணை நிறுவனரான சன்னி போகலா, கோடிக்கணக்கான பயனர்களுக்கு சேவையளிக்கும் தொழில்நுட்பத்தயாரிப்புகளை மேம்படுத்துவதில் விரிவான அனுபவம் பெற்றவராவார். இந்தியாவில் பொதுமக்கள் பாதுகாப்பு செயலியான "காவலன்", நியூயார்க்கில்சுகாதாரப் பாதுகாப்புத் தளமான “Securra' ஆகியவை அவரின் குறிப்பிடத்தக்க தயாரிப்புகளாகும். அவரின் பரந்த அனுபவமும் சாதனைகளும் சர்வதேசத் தரத்தில் ஹுட் செயலியை உருவாக்குவதற்கு உதவியுள்ளன.

ஹுட் தளத்தின் முக்கியத்துவம் குறித்து மேலும் விவரிக்கும் சன்னி போகலா, நெருக்கமான வட்டாரத்தோடு மட்டுமில்லாது உலகத்தோடும் சமூக இணைப்பில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொரோனா பெருந்தொற்று நம்மைத் தள்ளியிருப்பதாகக் கூறுகிறார். இது, ஒரு விதமான திரைச் சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அவர், தகவல் பரிமாற்றத்தைஎளிதாக்குவதன் மூலம் இந்த சோர்வை ஹுட் போக்கும் என நம்புகிறார். மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், மொழித் தடைகளை உடைத்தெறியும் திறன் ஆகியவற்றால், பிரபலங்கள், புகழ்பெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும் குரல்களை உலகறியச் செய்யவும் விருப்பமான தளமாக ஹுட் உருவாகும் எனவும் அவர் கூறுகிறார்.

ஹுட் என்பது Cloud-native தொழில்நுட்பத்தினாலான, மொபைலில் பயன்படுத்தத்தகுந்த, பிராந்திய மொழிகளுக்கான ஒரு தளமாகும். இது, உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் குரல்களைப் பயன்படுத்தவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கும் வகையில்நவீன சமூக ஊடக அனுபவத்தை வழங்குகிறது, தாங்கள் தவறாக மதிப்பிடப்படுவோம் என்ற எந்த பயமும் இன்றி, ஒரு ஆரோக்கியமான சமூகக் குழுவாக பயனர்கள் இயங்க ஹுட் ஊக்குவிக்கிறது.

உலகம் முழுவதும் டிஜிட்டல் மற்றும் சமூக தளங்களில் குரல் அடிப்படையிலான மற்றும் ஆடியோ தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஹுட், AI-ஆல் இயக்கப்படும் முதல் பன்மொழி ஆடியோ தளமாக இருக்கும். அதிகளவு மக்கள் தங்களின் தகவல்தொடர்புக்கான ஊடகமாக குரலைப் பயன்படுத்துவதால், மக்களை மீண்டும் இணைக்கும் பாலமாக குரல் மாறும்,

0 comments:

Pageviews