முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் "பாதுகாப்பான தீபாவளி" விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

 


முகப்பேர் வேலம்மாள் பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையுடன் இணைந்து நடத்திய பாதுகாப்பான தீபாவளி    பற்றிய விழிப்புணர்வு  நிகழ்வு 26.10.21 அன்று வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீப ஒளித்திருநாளாம் தீபாவளிஅன்று பட்டாசு வெடி விபத்துகளைத் தவிர்த்து தீபாவளிக் கொண்டாட்டங்களை மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாட மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று  நடத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குனர் திருமதி.N.பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும்   மாவட்ட அலுவலர் திரு.சரவணன் அவர்கள்,  கூடுதல் மாவட்ட அலுவலர்கள் திரு.கார்த்திகேயன்  மற்றும் சூர்யபிரகாஷ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

 விழா நிகழ்வினை தனது உரையுடன் இனிதே  துவங்கிய சிறப்பு விருந்தினர் திருமதி.என் பிரியா ரவிச்சந்திரன் அவர்கள், மாணவர் மனம் கவரும் வகையில் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவது பற்றிய அறிவுரைகளை எடுத்துரைத்து அவர்களை ஊக்குவித்தார். அதன்பின் தொடர்ச்சியாக தீயணைப்பு வீரர்கள், பட்டாசுகளை அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றி  பாதுகாப்புடன் வெடிப்பது எவ்வாறு என்பதைத் தாமே முன்னின்று பட்டாசுகளை வெடித்து ஒத்திகை செய்து காண்பித்தனர்

.பல்வேறு உத்திகளை அறிமுகப்படுத்திய வீரர்கள் முதன்மையாக தீயணைப்பான்களின் செயல்முறை விளக்கம், எண்ணெய்த் தீ விபத்தினை இருசக்கர வாகனத்தின் உதவியுடன் அணைக்கும் புதிய யுத்தி, குடிசைத் தீ மற்றும் மனிதனின் மீதான தீ இவற்றை அணைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றைசெய்து காண்பித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள்கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண நீர்க் கண்காட்சியுடன் நிறைவுசெய்தனர்.

இந்தச் செயல்முறைகள் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள்  பற்றிய ஒரு பரந்த வழிகாட்டலை வழங்கின.

  இறுதியாகத் தமிழ்நாடு தீயணைப்புக் குழுவினரின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு பட்டாசுகள் வெடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரம் மாணவர்கள் கண்டுகளித்தனர். வேலம்மாள் பள்ளி முன்னெடுத்த இந்த உன்னதமான, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்ற நிகழ்வு சமூக அக்கறையுடன் கூடியதாகஅமைந்திருந்தது.


0 comments:

Pageviews