மோன்ஸ் செல்வின் என்ற 22வயது மாணவியின் உலகின் மிக நீளமான சித்திரம் வரையும் சாதனை முயற்சி


இத்தாலீயை சார்ந்த  கிளாடியோ ஸ்கியரோன் என்னும் ஓவிய கலைஞரால் 2018ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மிக நீளமான சித்திரம் வரைதல் உலக  சாதனை 297 புள்ளி 50 மீட்டர். இதனை முறியடிக்கும் விதமாக இன்று மோனிஷ்  என்கிற  மோன்ஸ் செல்வம் என்ற மாணவி  351 புள்ளி 70 மீட்டர் நீளமான சித்திரத்தை வரையும் கின்னஸ் உலக சாதனை முயற்சியை  சென்னை செம்மொழிப் பூங்காவில் நிகழ்த்தினார். இது நடிகர் சிவகுமார் மற்றும் அரசு கவின் கலைக் கல்லூரியை சேர்ந்த முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு அங்கீகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தேசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழை அவர்களின் இந்திய பிரதிநிதியான திரு விவேக் நாயர் மற்றும் நடிகர் திரு சிவக்குமார் அவர்களுடன் இணைந்து  மோன்ஸ் செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 மேலும் கின்னஸ் உலக சாதனை கழகத்திற்கு அனைத்து ஆவணங்களும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது ஊக்கமும் ஆதரவும் அளித்து தனது பெற்றோர் நண்பர்கள் மற்றும் ஊடக தொலைக்காட்சி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் மோன்ஸ் செல்வம்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார்
இந்திய புத்தகத்திலும் ,ஏசியா புத்தகத்திலும் சாதித்த மோனிஷா என்கின்ற மோன்ஸ் செல்வம்  உலக கின்னஸ் புத்தகத்திகலும் இடம் பெற வேண்டும் என்று கூறினார். தான் ஆறு ஆண்டுகள் ஓவியக் கல்லூரி படிக்கும் போது தான் தெரிந்தது ஓவியத்திற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றும் . ஆனால் நான் ஓவியன் என்று சொல்லிக்கொள்ளவே  பெருமைக் கொள்கிறேன்என்றவர்  மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் நடிகனாய் அல்லாமல்  ஓவியனாய் பிறவி எடுக்கவே விரும்புகிறேன் என்றும் கூறினார்.

0 comments:

Pageviews