ஒரே பெயரில் இரண்டு திரை படங்கள்.. பிக் பாஸ் தர்சன் நடித்த படத்தின் திரைப்பட குழுவினரின் வீண் வம்பு


தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 ஆனது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்சன். இவர் பிக் பாஸ் இல்லத்திற்கு வருவதற்க்கு முன்னதாக பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பாராத விதமாக இறுதிக்கட்ட பணிகள் தொடக்கம் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில்., இயக்குனர் கார்த்திகேயன் ஜெகதீஷ் இயக்கத்தில்., இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன் இசையமைப்பில்., இன்னும் பல திரையுலக பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மேகி (MAGGY).. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் இசைசேர்ப்பு போன்று அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவு பெற்று., தணிக்கைக்குழு ஒப்புதல் அளித்து திரைக்கு வரவுள்ளது.

இந்த சமயத்தில்., பிக்பாஸ் தர்சன் நடித்துள்ள MAGIE (மேகி) என்ற திரைப்படம் விரைவில் வெளியாகப்போவதாக தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதால்., மேற்க்கூறிய படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தர்சன் நடித்துள்ள MAGIE திரைப்படத்தை ஜி.இராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள நிலையில்., இசையமைப்பு பணியை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.

இந்த இரண்டு திரைப்படங்களின் பெயர்களும் மேகி என்று உள்ளது.. ஆங்கிலத்தில் மட்டும் இரண்டு படத்தின் தலைப்புகள் வெவ்வேறாக உள்ளது. தணிக்கை பெற்று திரைக்கு வரவுள்ள திரைப்படத்தின் அதே பெயரை மற்றொரு திரைப்படத்திற்கு சூட்டுவதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. இந்த இரண்டு படக்குழுவின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இந்த பிரச்சனை முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களுக்கான கருத்துக்கள் வேறு வேறாக இருப்பினும்., திரைத்துறையை பொறுத்த வரையில் இயக்குனர்கள் தங்களின் கதையை முதலில் பதிவு செய்து., திரைப்படத்திற்கான பணிகளை துவக்கிவிட்டு., பின்னர் இறுதியாக திரைப்படத்தின் தலைப்பை தயார் செய்வார்கள். அந்த வகையில்., ஒரு திரைப்படத்தின் பெயர் முடிவு செய்யப்பட்டு., தணிக்கைக்கு சென்று வந்துவிட்டால் அது பிற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தெரியாமல் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Pageviews