ஜீவி திரைப்படம் பற்றி இயக்குனர் வி.ஜே.கோபிநாத்


எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவது என்பது அரிதான விஷயம். அப்படியே அது நடந்தாலும், திரைப்படத்தில் இயக்குனரின் பெயருடன் சேர்ந்து தான் எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இருப்பினும், தமிழ் சினிமா ஜீவி படக்குழுவினரின் உண்மையான தன்மையைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக ஜீவி படத்தின் அற்புதமான டிரைலருக்கு கிடைத்த பாராட்டுகளை திரைக்கதை எழுத்தாளர் பாபு தமிழுக்கு வழங்கியிருக்கிறார் இயக்குனர் வி.ஜே.கோபிநாத்.

‘ஜீவி’ படம் தொடங்கியதன் ஆரம்ப புள்ளியை பற்றி இயக்குனர் வி.ஜே. கோபிநாத் கூறும்போது, “2015 ஆம் ஆண்டில், எனது நெருங்கிய நண்பர் பாபு தமிழ் என்னை ஒரு ஸ்கிரிப்டுடன் அணுகி, அதை என்னை இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இது ஒரு அற்புதமான படம், இதற்கு முன் பார்த்திராத அல்லது கேள்விப்படாத கான்செப்டை கொண்டிருந்தது. உண்மையில், திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் அவ்வாறே உணர்வார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். விரைவில், நாங்கள் பல நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் அணுகத் தொடங்கினோம். தாமதமானாலும், இந்த படம் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்டிருந்ததால் 3, 4 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டாலும் நிச்சயமாக நல்ல வரவேற்பைப் பெறும் என்று நாங்கள் நம்பினோம். பல நடிகர்களை சந்தித்த பிறகு, நாங்கள் இறுதியாக வெற்றியை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை விவரித்தோம். அவரும் தனித்துவமான ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் இருந்ததால், அதிர்ஷ்டவசமாக எங்கள் கதை அதற்கு தகுதியான ஒன்று என்பதை கண்டு கொண்டார்.

“ஜீவி” படத்தை ஏற்கனவே பார்த்த சிலர் இதை ‘மிகவும் அசாதரணமான சிந்தனை’ என்று புகழ்ந்தனர். டிரைலரை பார்த்தவர்களும் இதேபோன்ற கணிப்புகளை செய்திருக்கிறார்கள். இத்தகைய பாராட்டுக்களை இயக்குனர் வி.ஜே.கோபிநாத் எவ்வாறு பார்க்கிறார்? என அவரிடம் கேட்டால், "நிச்சயமாக, எல்லா பாராட்டுகளும் எனது நண்பர் பாபு தமிழையே சாரும். அவரின் இணையற்ற சிந்தனையே இப்போது சாதகமான முடிவுகளை பெற்று தந்துள்ளது" என்றார்.

நண்பர் பாபு தமிழுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த இயக்குனர், ஸ்கிரிப்டை செயல்படுத்துவதில் அடைந்த சவால்களை பற்றி கூறும்போது, “ஆம், ஸ்கிரிப்ட்டில் 'மனித இணைப்பு ’என்ற தனித்துவமான கருத்து இருந்தது. பாபு முதல்முறையாக கதையை விவரித்தபோது, படப்பிடிப்பில் கடும் சவால்கள் இருக்கப்போகிறது என்பதை என்னால் உணர முடிந்தது. வெளிப்படையாக, 2 முதல் 3 மாத காலத்தை முன் தயாரிப்புக்காக நான் எடுத்துக்கொண்டேன், இது எங்கள் செயல்முறையை எளிதாக்கியது" என்றார்.

ரசிகர்களை ஈர்க்கும் முதல் அம்சமே ஒரு திரைப்படத்தின் தலைப்பு தான். அந்த வகையில் ஜீவி மிகச்சிறந்த முறையில் சென்று சேர்ந்திருக்கிறது. நடிகர் சிபிராஜ் தான் இந்த தலைப்பை பரிந்துரைத்தார் என்ற சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் கோபிநாத் பகிர்ந்து கொள்கிறார். அவர் கூறும்போது, "உண்மையில், இந்த படத்தின் தலைப்பை இறுதி செய்ய நாங்கள் நிறைய விவாதித்தோம். அது நாயகனின் புத்திசாலி என்ற குணாதிசயத்தை பிரதிபலிக்க வேண்டும் என நினைத்தோம். சிபிராஜ் சாரிடம் கதையை விவரித்தபோது அவர் தான் இந்த தலைப்பை சொன்னார், மிகவும் பொருத்தமாக இருந்தது. எனினும் அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட திரைப்படங்களால், அந்த நேரத்தில் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது" என்றார்.

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன், வி சுடலைக்கண் வெள்ளபாண்டியன், வி சுப்ரமணியன் வெள்ளபாண்டியன்  தயாரிக்க, '8 தோட்டாக்கள்' புகழ் வெற்றி நாயகனாக நடித்திருக்கிறார். மோனிகா சின்னகோட்ளா, அஷ்வின் சந்திரசேகர், ரோகிணி, கருணாகரன், ரமா, மைம் கோபி, தங்கதுரை மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை பெரும் அளவில் தூண்டியிருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

0 comments:

Pageviews