சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், நயன்தாரா, அனிருத், லைகா பிரம்மாண்ட கூட்டணியில் “தர்பார்”
‘2.0’ எனும் பிரமாண்ட படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்௸ன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. 2.0 படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினியோடு லைகா நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது.
பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கபடும் நயன்தாரா நடிக்கும் புதிய படம் இது . சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நயன்தாரா மூன்று படங்களில் நடித்து 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார். கோ கோ படத்தை அடுத்து நயன்தாரா லைகா நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது .
மேலும் இப்படத்தில் அனி௫த் இசையமைக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அனி௫த் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். தளபதி விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி லைகா புரொடக்௸ன்ஸ் தயாரித்த கத்தி படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸுடன் அனி௫த் இரண்டாவது முறையாக இணைத்துள்ளார்.
இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “தர்பார்” படத்தில் சேர்ந்து பணியாற்றுவது இரண்டாவது முறையாகும். அதே போல் ஏ.ஆர் முருகதாஸுடன் இரண்டு படங்களில் கூட்டணி அமைத்த சந்தோஷ் சிவன் மூன்றாவது முறையாக ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுடன் இப்போது இணைத்துள்ளார்.
“தர்பார்” படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்கி தொடர்ந்து நடக்க உள்ளது. வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .
0 comments:
Post a Comment