Hogenakkal Movie Stills
சீட்டுகம்பெனி மோசடி பற்றிய படம்
“ஒகேனக்கல்”
எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, P.T.S.திருப்பதி மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ஒகேனக்கல்”
இந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக முன்பையை சேர்ந்த ஜோதிதத்தா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் P.T.S.திருப்பதி நடிக்கிறார். மற்றும் உமாபத்மநாபன், நளினி, லதாராவ், நிழல்கள்ரவி,டெல்லிகணேஷ்,காதல்தண்டபாணி,கராத்தே ராஜா, ஆனந்த், அருண்மணி முத்துகாளை,கிரேன் மனோகர்,பிளாக்பாண்டி,காந்தராஜ், தீப்பெட்டி கணேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பி.ஜி.வெற்றி
இசை - சரண்பிரகாஷ்
பாடல்கள் - விவேகா, எழில்வாணன், தென்றல்செந்தில்
எடிட்டிங் - பி.மோகன்ராஜ்
கலை - துரைவர்மன்
நடனம் - தினா, நசீர்பாபு, ரமேஷ் ரெட்டி
ஸ்டன்ட் - இந்தியன் பாஸ்கர்
தயாரிப்பு மேற்பார்வை - சிவா
தயாரிப்பு - எ .தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, P.T.S.திருப்பதி
கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் - எம்.ஆர்.மூர்த்தி. இயக்குனரிடம் ஒகேனக்கல் என்ன மாதிரியான படம் என்று கேட்டோம்...
ஒகேனக்கல்லில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. சீட்டுகம்பெனி மோசடியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறேன். நாட்டில் இன்று அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் சீட்டுகம்பெனி மோசடியால் எத்தனையோ குடும்பங்கள் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது தான் கதை. இந்த கதையுடன் காதலை சேர்த்து கமர்ஷியலாகப் படமாக்கி இருக்கிறோம்.
நான் ஏற்கனேவே கன்னடத்தில் மூன்று படங்களை இயக்கி இருக்கிறேன்.படத்தின் பெரும் பகுதி ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டுள்ளது என்றார் இயக்குனர் எம்.ஆர்.மூர்த்தி.
0 comments:
Post a Comment