தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.


இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.


சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம்.


அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும்.


அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு. கமல்ஹாசன் அவர்கள். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர். 

 

1997 ஆம் ஆண்டு, 29 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் திரு.வைரவன், தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். செம்மண் தரை வளாகம், எளிமையை பறைசாற்றும் கதவுகள், ஜன்னல்கள், அவர் வாசிப்பதற்கு ஒளி தந்த மின் விளக்குகள், புண்ணியம் செய்த காற்றாடிகள், பழங்கால, அவர் கைபட்ட மின் ஸ்விட்சுகள். 


அவர் ஏதோ ஓர் அறையில் இருப்பாரோ என்று மனம் ஏங்கும்...


இன்று இந்த எதுவும் அங்கு இல்லை. இன்று அவர் வீட்டுக்குள் நுழையும் மாணவர்கள் இது ஒரு ஆடம்பர ஜமீன்தார் வீடு என்றுதான் நினைப்பார்கள்.


புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் அனைத்து அடையாளங்களும் சிதைக்கப்பட்டு, ரேசன் அரிசி உண்ட ஒரு முதல்வரின் வீடு வெள்ளை மாளிகை போல் காட்சி தருகிறது.


அமெரிக்க அதிபர் கென்னடியைக் கொன்ற கொலைகாரன் உபயோகித்த ஆறாவது மாடி அறையைக் கூட, டல்லஸ் மாகாணத்தில் பழைமை மாறாமல் செப்பனிட்டு பாதுகாத்து வருகிறார்கள்.


5 லட்ச ரூபாய் பெருமானம் உள்ள பழையக் கார்களை கூட இயல்பு கெடாமல் கவனமுடன் சீர் செய்கிறார்கள்.


விலைமதிப்பில்லா ஒரு தேசத்தலைவரின் வீடு, அதன் அடையாளத்தை முற்றிலும் இழந்து விட்டது. அதற்குப் பதிலாக அந்த வீட்டை இடித்து விடலாம். மக்கள் மனதில் அவர் பிம்பம் ஆடம்பரம் இன்றி நிலைத்திருக்கும்.


நாங்கள் காமராஜ் படப்பிடிப்பை அந்த வீட்டில் நடத்தியபோது தொழிலாளர்கள் வீட்டின் வளாகத்தில் வாய் கொப்பளித்துக்கூட அசுத்தம் செய்யக்கூடாதென கட்டுப்பாடு விதித்திருந்தோம்.


பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் 1997ல்  15 முதல் 20 பேர் வரை வந்தார்கள். இல்லத்தில் குடிதண்ணீர் கூட கிடையாது. 1998 முதல் தொடர்ந்து குடிதண்ணீரும், சர்க்கரைப் பொங்கலும், வழங்க ஆரம்பித்தோம். சமீப காலங்களில் அவர் பிறந்தநாளில் அவர் வீட்டின் வளாகத்தினுள் கால்வைக்கக் கூட இடமில்லை. எனக்கும் அந்த வீட்டிற்கும் ஆன தொடர்பை குறிப்பிட மட்டுமே இதைச் சொல்கிறேன். தற்பெருமை கொள்ள அல்ல.


ஒரு தலைவரின் அறத்தை அவரது வாழ்விடம், உபயோகித்த பொருள்களின் எளிமை பறைசாற்றும். வரலாற்றுச் சான்றுகளாகத் திகழும்.


தினமும் பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரிக்கும்.     தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு பெருந்தலைவர் காமராசர் நினைவு இல்லத்தின் மாண்பை மீட்டெடுக்க வேண்டும்.


பழுதுபட்ட மின் சாதனைகளை சீர் செய்து, தொங்க விடப்பட்டுள்ள அலங்கார விளக்குகளை அகற்றி, செயற்கை புல்வெளிகளை நீக்கி, அந்த புனிதத் தலத்தில் இயல்புத்தன்மையை திரும்பக் கொணரும்படி வேண்டுகிறேன்.


இந்த வீட்டை மக்கள் திலகம் முதல்வராக இருந்தபோது இந்த வீட்டின் உரிமையாளர் திரு கோவிந்தராஜுவிடமிருந்து விலைக்கு வாங்கி நினைவுச் சின்னமாக மாற்றினார். வீட்டில் எந்த மாறுதலும் செய்யவில்லை.


இப்பணிக்கென தாங்கள் நினைவிடங்களைப் பாதுகாக்கும் வல்லுனர்களின் துணைகொண்டு  செப்பனிட்டு, சீரமைத்து, தமிழகம் உள்ளவரை நினைவிடம் அவர் புகழைத் தாங்கி நிற்கும் வகையில் ஆவன செய்திட வேண்டுகிறேன்.


பெருந்தலைவருக்கு நீண்ட புகழைச் சேர்த்த அடையாளம் தங்களுக்கும் கிட்டும்.

 

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.


ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான  உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக  உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.


இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.


ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.

 

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி' எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி. 


'வதந்தி சீசன் 2' இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி தன் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிடும் போஸ்ட்டிற்கு லைக்கும், ஷேரும் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அவரை சந்தித்தோம்.  


கலைத்துறை அறிமுகத்திற்கான பிளாஷ்பேக்..?


சின்ன வயதில் இருந்தே டிவியில் ஒரு படம் ஓடினால்.. அது தொடர்பான சம்பவங்களை அப்பா சொல்வார். சில நேரங்களில் ஒவ்வொரு காட்சியைப் பற்றி சொல்லும்போது... அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவங்களை சுவாரசியமாக விவரிப்பார். அதை கேட்டு கேட்டு படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினருடன் பழக வேண்டும்... திரை துறையில் பணியாற்ற வேண்டும்... என்ற ஆசை எழுந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் அப்பா பணியாற்றும் படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் நான் திரையில் பார்த்தது வேறு. நிஜத்தில் பார்ப்பது வேறாக இருந்தது. கேமராமேன் - லைட் மேன்-  புரொடக்ஷன்- என ஒவ்வொருவரும் தங்களுடைய கடுமையான உழைப்பை அளித்துக் கொண்டிருந்தனர்.

இதற்காகவே விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் போது படப்பிடிப்புக்கு செல்ல முடியாது. இது அப்பாவின் கடுமையான உத்தரவு. அதன் பிறகு 12 வது படிப்பு முடித்தவுடன் அப்பாவிடம் 'விஸ்காம் படிக்கிறேன்' என்று சொன்னேன். 'அது வேண்டாம் உனக்கு பொருத்தமாக இருக்காது. நீ சட்டம் படி' என்றார். அதற்காக தற்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன். 


நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நிறைய கம்பெனிகளில் ஆடிசனுக்கு சென்றேன். அதன் பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சியை பயின்றேன். சினிமா சண்டை பயிற்சி இயக்குநரான டேஞ்சர் மணியிடம் சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி பெற்றேன். 


என்னுடைய உருவத்தை வைத்தும்... நிறத்தை வைத்தும்... நிறைய பேர் கேலி செய்தனர் 'கருப்பா இருக்கியே.. உன் மூஞ்சியெல்லாம் கேமராவுல தெரியுமா..? 'என பேசினர். இதனால் என் மனதிற்குள் ஏன் நம்மால் நடிக்க முடியாதா? நான் நடிகனாகக் கூடாதா? என்ற வெறித்தனமான எண்ணம் ஏற்பட்டது. முதலில் நடிகனாவதற்கான தகுதி என்னவோ... அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். 


நடிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினேன். ஜிம்முக்கு சென்றேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடை நாடகங்களிலும் நடித்தேன். சினிமா சம்பந்தமான ஒர்க்ஷாப் நடந்தால்... அதில் கலந்து கொள்வேன். மைம் என்ற கலையையும் கற்று வருகிறேன். சண்டைக் காட்சிகளை நடிப்பது தொடர்பான பயிற்சியையும் பெற்று வருகிறேன். நடனமும் கற்று வருகிறேன். 


என்ன மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை?


ஆக்சன் ஹீரோ என்பதை விட நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதைத்தான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு பசுபதி அவர்கள்.. எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பார்.‌ இந்த கேரக்டர் என்று எந்த வரையறையும் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பொருந்தி என் சிறந்த நடிப்பை வழங்குவேன். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் இதுதான் என் ஆசை. இதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். 


வதந்தி சீசன் 2 வாய்ப்பு...? 


வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் அப்பா பணியாற்றுவதால்.. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருமுறை அலுவலகத்தில் இருந்தபோது புஷ்கர் - காயத்ரி அவர்கள் என்னை பார்த்தார்கள். என் தந்தையிடம், 'நன்றாக இருக்கிறானே..! ஆடிசன் வைக்கலாமா? அனுப்புவீர்களா?' என கேட்டனர். அதன் பிறகு எனக்கு ஆடிசன் டெஸ்ட் வைத்தனர். முதலில் புஷ்கர் - காயத்ரி மேடம் வைத்த டெஸ்டில் பாஸ் செய்தேன். அதன் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் ஆடிஷன் வைத்தார். அப்போது இயக்குநர், 'எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பியாப்பா?' என கேட்டார். 'வதந்தி சீசன் 1 சூப்பர் ஹிட் சார். அந்த சூப்பர் ஹிட்டான தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றாலே.. அதை விட்டு விட மனமில்லை...'என்று சொன்னேன். அதன் பிறகு செலக்ட் ஆனேன். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். 


உங்கள் பார்வையில் வதந்தி சீசன் 2...?


வதந்தி சீசன் 1 போல்..  சீசன் 2 வரும் சூப்பர் ஹிட். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு புது அனுபவமாகவே இருந்தது. வதந்தி சீசன் 2 வை பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்கள். 


ஃப்யூச்சர் ஐடியா..? 


இந்த வெப்சீரிஸிற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என் நூறு சதவீத உழைப்பை கொடுப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர்களின் பெயரை காப்பாற்றும் வகையில் நடிக்க வேண்டும்.


திரைத் துறையிலும், மக்கள் மனதிலும் எனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. 'தெய்வத்தால் ஆகாது எனினும்..' என்ற திருக்குறளை போல் கடுமையாக முயற்சித்தால்... அந்த நம்பிக்கை என்னை கைவிடாது என்று நம்புகிறேன். 


சினிமாவில் தான் என் வாழ்க்கை. நடிகராக இல்லை என்றால்.. சினிமாவில் ஏதேனும் ஒரு துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். 


உங்கள் சமூக ஊடக பக்கம்..? 


சோசியல் மீடியாவில் நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் arjun_chakkaravarthy என்ற ஐடியை வைத்திருக்கிறேன். அதிலும் இந்த ஐடியை இதுவரை பிரைவேட்டாகத்தான் வைத்திருந்தேன். வதந்தி சீசன் 2 வெளியான பிறகு தான் அதனை பப்ளிக் ஆக்கினேன். இதில் இனிமேல் என் படம் சம்பந்தமான விசயங்கள்... என்னுடைய எண்ணங்கள் ஆகியவற்றை போஸ்ட் செய்வேன்.


அவெர்னஸ் தொடர்பான போஸ்ட்களை ரீபோஸ்ட் செய்திருக்கிறேன். சில விசயங்களில் என்னுடைய கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்கிறேன்.‌


விஜய் Vs வதந்தி சீசன் 2..?


முதலில் நான் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் பக்கா விஜய் ரசிகன். விஜய் சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.‌ வதந்தி சீசன் 2 வை விஜய் பார்த்துவிட்டு என்ன சொல்வார் ? என்ற பதட்டம் நிறையவே இருக்கிறது. 


அதர்ஸ் வெப் சீரிஸ் - வதந்தி சீசன் 2 வெப் சீரிஸ் என்ன டிஃபரன்ஸ்?


டைரக்டர் ஆண்ட்ரூ சார் இதற்காக மூன்று ஆண்டு காலம் கடினமாக உழைத்து எழுதி, இயக்கி இருக்கிறார். நாங்கள் அனைவரும் இரண்டு ஆண்டு காலம் கஷ்டப்பட்டும்... இஷ்டப்பட்டும்... உழைத்திருக்கிறோம். இது அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொல்வதை விட நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதற்காக காத்திருக்கிறேன். 


* உங்களுடைய முதல் ரசிகரை பற்றி...? 


வதந்தி சீசன் 2 வை பார்த்துவிட்டு, அதில் சுந்தரேசனை ரசித்து என்னுடைய ரசிகராக அதிலும் முதல் ரசிகராக யாராக இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான்.  மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். அதனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டால் சந்தோஷம்தான். 


சினிமா இல்லாமல் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி இருக்கிறீர்களே.. இது குறித்து எப்பவாவது கவலைப்பட்டதுண்டா...  ? 


இந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் இங்கு கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எனக்கு எதில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருந்தாலும் வாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ.. அதில் நூறு சதவீதம் உழைத்து என் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.


வதந்தி சீசன் 2 - மறக்க முடியாதது எது? 


இந்த வெப்சீரிஸில் சுந்தரேசன் அதிகமாக யாரிடம் பேச மாட்டான். அதில் அவனை ஒரு காட்சியில் தலை கீழாக கட்டி போட்டு தொங்க விட்டு இருப்பார்கள். அந்த காட்சியை பற்றி இயக்குநர் சொன்னவுடன் தலைகீழாக நாம் தொங்க வேண்டும் என்பதற்காக சாப்பிட வேண்டாம் என நினைத்து காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அந்த காட்சிக்காக காத்திருந்தேன். காலையில் எட்டு மணிக்கு வந்த என்னை இரவு எட்டு மணிக்கு கட்டித் தொங்க விட்டார்கள். படப்பிடிப்பு விடிகாலை ஐந்து மணி வரை சென்றது. எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. நான் அழத் தொடங்கி விட்டேன். வலி பின்னி எடுத்தது. அதன் பிறகு என்னை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தூக்கி, காரில் உட்கார வைத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுத்தேன்.  வலி இருந்தாலும் அதனையும் சுகமாகவே அனுபவித்தேன். இதுவும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது. 


ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் நான் நடித்த போது அங்கு கூடியிருந்த படக் குழுவினர் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறாய் என கைத்தட்டி பாராட்டினார்.  


சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை படித்து வரும் நீங்கள் இந்த இணைய தொடரில் சுந்தரேசன் எனும் பள்ளி மாணவனாக சீருடை அணிந்து நடித்த போது என்ன நினைத்தீர்கள்..? 


பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்ததுண்டு. ஆனால் சுந்தரேசனை போல் எந்த பெண்ணையும் ஃபாலோ  செய்யவில்லை. அதே சமயத்தில் பள்ளியில் படிக்கும் போது நான் சுந்தரேசன் கேரக்டருக்கு நேர் ஆப்போசிட்.  எப்போதும் பிரண்ட்ஸ்களுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துக் கொண்டே இருப்பேன். அதனால் சுந்தரேசனாக ஸ்கூல் யூனிபார்மை அணிந்து நடித்த போது மகிழ்ச்சியாகவே இருந்தது. 


-----------


அர்ஜூன் சக்கரவர்த்தியின் ராபிட் ஃபயர் 

மொமண்ட்ஸ் 



பெற்றோர்கள் ...


அவர்கள் தான் என்னுடைய முதல் கடவுள் 


நம்பிக்கை ....


எத்தனை தோல்விகள் வந்தாலும் நம்பிக்கை மட்டும் தான் நம்மை கடைசி வரை காப்பாற்றும் ஆயுதம். இந்த நம்பிக்கையை யாரும் ஒருபோதும் கைவிடாதீர்கள். 


ஆக்சன் ஹீரோ ....


அர்ஜூன் சார் இருக்கிறாரே..!  சினிமாவில் ஆக்சன் ஹீரோக்கள் அடியாட்களை தூக்கி அடித்து பறக்க விடும்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதை இங்கு நானே செய்ய வேண்டும் என்ற போது இரட்டிப்பு சந்தோஷம் வரும். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. 


பிடித்த நடிகர்.... 


விஜய் சார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டே இருக்கலாம்.  


பிடிச்ச ஹீரோயின்.... 


எல்லாரையும் பிடிக்கும். 


பிடிச்ச செலிபிரிட்டி....


'வதந்தி சீசன் 2'வில் முடக்கத்தான் மணியாக நடித்திருக்கும் யஷ்வந்த்- ஒரு சோசியல் மீடியா செலிபிரிட்டி தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். 


எந்த போஸ்ட்டை லைக் செய்திருக்கிறீர்கள். ஷேர் செய்திருக்கிறீர்கள்? 


இப்போ வதந்தி சீசன் 2 தொடர்பான போஸ்ட்களை மட்டும் தான் லைக் செய்கிறேன். ஷேர் செய்கிறேன். அதில் என்னுடைய போஸ்ட் ஏதேனும் வருகிறதா? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு  அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் (Deepfake), உருமாற்றப்பட்ட (Morphed) புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.


இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பிட்ட போலிப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஆணையிட்டுள்ள நீதிமன்றம், இவை தொடர்ந்து இணையத்தில் உலாவுவது அவரது நற்பெயருக்கும், சமூக மதிப்பிற்கும், வர்த்தக ரீதியான வாய்ப்புகளுக்கும் மீட்க முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த விவகாரம் ஸ்ருதி ஹாசன் என்ற தனிநபரோடு முடிந்துபோவதல்ல. பல காலமாகவே நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்களின் புகைப்படங்களை உருமாற்றுவதும், அவர்களின் பெயரில் போலி விளம்பரங்களை வெளியிடுவதும் சமூக ஊடகங்களில் தொடர்கதையாக உள்ளது. தற்போது 'ஜெனரேட்டிவ் AI' தொழில்நுட்பத்தின் வருகையால், இதுபோன்ற போலி உள்ளடக்கங்களை மிக எளிதாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது; அதேவேளையில் எது உண்மை, எது போலி என்று கண்டறிவது சாமானிய மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.


ஒருவரின் ஒப்புதல் இன்றி அவரது முகம், குரல் அல்லது தோற்றத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. ஒருவர் திரைத் துறையிலோ அல்லது பொதுவெளியிலோ பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக, அவரது அனுமதியின்றி அவரது தோற்றத்தை டிஜிட்டல் முறையில் மாற்றவோ, தயாரிப்புகளுக்குப் போலியாகப் பயன்படுத்தவோ, தவறான சூழல்களில் சித்தரிக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.


அந்த வகையில், ஸ்ருதி ஹாசன் மேற்கொண்டுள்ள இந்தச் சட்ட நடவடிக்கை மிகவும் அவசியமான, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். தனது சுயமரியாதைக்காகவும் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்துள்ளதன் மூலம், கலைத் துறையில் 'தனிநபர் சம்மதம்' (Consent), பொறுப்புடைமை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த முக்கியமான உரையாடலைத் தொடங்கி வைத்துள்ளார்.


பிரபலமாக இருப்பதால் இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்து, தங்கள் அடையாளம் திருடப்படும்போது அதைச் சட்டப்படி எதிர்கொள்ள பிற கலைஞர்களுக்கும் இது பெரும் துணிச்சலைத் தரும். அதேபோல, "தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அது ஒருவரின் சம்மதத்திற்கு மேலானது அல்ல" என்ற உறுதியான எச்சரிக்கையை AI நிறுவனங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும், டிஜிட்டல் படைப்பாளிகளுக்கும் இது உணர்த்துகிறது.


நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவு ஒரு தொடக்கப் புள்ளிதான் என்றாலும், அசுர வேகத்தில் வளரும் AI காலத்தில் இந்தியக் குடிமக்களின் டிஜிட்டல் அடையாளங்களை எவ்வாறு சட்டப்படி பாதுகாப்பது என்பது குறித்த பரந்த விவாதத்திற்கு இது வித்திட்டுள்ளது. இப்போராட்டத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் முன்மாதிரியாக நின்று, கலைஞர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைப் பதித்துள்ளார்.

 

இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.


இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.


பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறது


இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியது, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. உலகநாயகன் பாராட்டும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரின் இந்த சந்திப்பு, திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது

 

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 


தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன், "பல சிறிய விஷயங்களுக்கு இந்த படம் முன்னுதாரணமாக இருக்கும். படக்குழுவினரோடு ராமேஸ்வரம் மக்களும் கடுமையான உழைப்பு இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பலனை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்".


நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம், "ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நடிகர் கருணாஸ் பெரிய நடிகர் என்ற அலட்டல் இல்லாமல் எங்களிடம் இயல்பாக பழகினார். படம் நன்றாக வந்திருக்கிறது".


நடிகர் பிரதீப், "இது ஒரு அருமையான படம். இதில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர், அண்ணன் கருணாஸூக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டி கொள்கிறேன்".


நடிகர் தர்ஷன், "இந்தப் படத்தில் எனக்கு ரைட்டர் கேரக்டர். அனுப்பி வைத்த எல்லா விருது விழாக்களிலும் இந்தப் படம் விருது வென்றது. மிகச்சிறந்த வெற்றி படமாக இது மாற வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


நடிகை நிரோஷா, "இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பு என்று தெரியாமல் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.  உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை". 


நடிகர் கவி, "பல நாடுகளின் விருது விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது. எப்போது நம் நாட்டு மக்களுடன் இந்த படத்தை பார்க்க இருக்கிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம். மக்களுடன் இணைந்து இந்த படத்தை கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி".


நடிகர் பாண்டி, "ரொம்ப நாள் இந்தப் படத்திற்காக காத்திருந்தோம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. 'பசங்க', 'கோலி சோடா' படங்களை தாண்டி பெயர் எடுக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்த படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை". 


நடிகை சாஷா, "இயக்குநர் சஜீவ் சார், தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். 13 விருது விழாக்களில் இந்த படம் விருது வென்று இருக்கிறது. எல்லோரும் திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்".


இயக்குநர் சஜீவ் பழூர், " 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்', 'பண்ணையாரும் பத்மினியும்' போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து கதையானது. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் 'என்ன விலை' படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ".


நடிகர் கருணாஸ், "கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். அதனால் மலையாள ரைட்டர், இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த படம் சாமானியர்களை பற்றியது. அதனால் தான் இயல்பான நடிகர்களை தேர்வு செய்துள்ளார். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி ஏழு கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதை மீது நம்பிக்கை. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்த படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார். எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது. 


அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா அற்புதமாக நடித்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாக தேர்வு செய்து இருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி. 'நந்தா' படத்திற்கு பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என் மனைவி முதன் முதலாக இந்த படத்தில் தான் பாராட்டி இருக்கிறார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்த படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

 

ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மொத ராத்திரி'. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. 


தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி, "இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜா, ஹீரோ ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.  ராஜா கதை சொன்ன உடனே மிகவும் பிடித்து விட்டது. ஹவுஸ்ஃபுல்லாக எல்லா திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது. 'குட் பேட் அக்லி', 'டியூட்' படங்களை தொடர்ந்து தமிழில் இது எங்களுக்கு மூன்றாவது வெற்றி படம். இதோடு 'இருமுடி கட்டு' படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.


ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி,"நல்ல படத்தில் வேலை செய்து இருக்கிறோம் என்று திருப்தி உள்ளது. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி".


படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன், "என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன். என் முதல் படத்திலேயே எனக்கு பாராட்டுகள் கிடைத்து வருவது மகிழ்ச்சி".


பப்ளிசிட்டி டிசைனர் வியாகி, "ராஜா கதை சொன்னதிலிருந்து இது எங்களுடைய படமாகிவிட்டது. படத்தில் எல்லோருமே பாசிட்டிவாக இருந்தார்கள். அதனுடைய ரிசல்ட் பிரம்மாண்ட வெற்றியாக மாறியிருக்கிறது".


நடிகை சுமித்ரா தேவி, " இந்த படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். எங்கள் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இயக்குநருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி". 


நடிகை வர்ஷினி கார்மேகம், "தயாரிப்பாளர்கள், இயக்குநர் ராஜா, ரிஷிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது". 


நடிகர் திலீப், " படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பல நாட்கள் கழித்து திரையரங்குகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியுடன் செல்வதை பார்த்தேன். நன்றி"


நடிகை இனியா ராம், " அறிமுக இயக்குநர் ராஜாவின் கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. படம் பார்த்த பலரும் என்னிடம் பாக்யராஜ் படம் பார்த்தது போல உள்ளது என்றார்கள். நிச்சயம் அடுத்த ஐந்து வருடத்திற்குள் இயக்குநர் ராஜா முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருப்பார். ரிஷிகாந்தும் திறமையான நடிகர். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நன்றி".


நடிகை தீபிகா, "கதையை நம்பி வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்த படம் மூலம் எங்கள் எல்லோருக்கும் அடையாளம் கிடைத்துள்ளது".


நடிகர் கார்த்திகேயன் டிகே, ", எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் நன்றி.  படத்தில் நடித்தவர்களுக்கும் பணிபுரிந்தவர்களுக்கும் இந்த படம் ரொம்பவே முக்கியமானது. நீண்ட பயணத்தின் முதல் படியாக இந்த வெற்றியை பார்க்கிறேன். நன்றி".


நடிகர் அப்துல் லீ, " வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்தில் நடித்த நடிகர்களையும் தொழில்நுட்ப குழுவினரையும் அடுத்த நிலைக்கு இந்த படம் எடுத்து சென்றுள்ளது. பல வருட உழைப்பிற்கு பிறகு என்னுடைய முகமும் இந்த படத்தின் போஸ்டரில் வந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி". 


இசையமைப்பாளர் பரத் சங்கர், "என்னுடைய இசை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான மைல்கல். சின்ன படம், பெரிய படம் என்று கிடையாது. நல்ல படம், சுமாரான படம் என்று வேண்டுமானால் பிரிக்கலாம். ஓடக்கூடிய படத்தின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ராஜா அடிக்கடி சொல்வார். அவருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை தயாரிக்க முன்வந்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி".


நடிகர் சேத்தன், "புதிய திறமையானவர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இயக்குநர் ராஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ரொம்பவே என்ஜாய் செய்து நடித்தோம். இந்தப் படத்தில் இருந்து பல சூப்பர் ஸ்டார்களும், லேடி சூப்பர் ஸ்டார்களும் உருவாக இருக்கிறார்கள். ரிஷியை திரையில் பார்க்கும்பொழுது இளவயது அமிதாப்பச்சனை பார்ப்பது போல இருந்தது. ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி".


இயக்குநர் ராஜா கருப்பசாமி, "என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை. ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. சின்ன படங்களுக்கு எப்போதுமே உங்கள் ஆதரவு தேவை. அது மட்டும் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்".


நடிகர் பகவதி பெருமாள், "சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்த கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்த படம் ஒளி ஏற்றி இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்".


நடிகர் ரிஷிகாந்த், " உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி".


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த வாழ்வியலுடன் நெருக்கமான கதையை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவு செய்துவரும் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ திரைப்படத்திலும் மண்ணின் மணம் வீசும் கதைக்களத்தை கையாள்கிறார் 

இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை” விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி (இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்) உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு துவக்க விழாவில் ‘மஞ்சணத்தி’ படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பாக இப்படத்தின் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா விழாவில் குத்துவிளக்கேற்றி படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

இப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்
கூறியதாவது.., 

“என்னுடைய திரைப்படங்களை இதுவரை இவ்வளவு விமரிசையாகவும், கோலாகலமாகவும் பூஜையுடன் தொடங்கியதில்லை. ஆனால் இந்தப் படத்தை அப்படித்தான் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் இளையராஜா சார் இருப்பது என்னுடைய வாழ்நாள் சாதனை. அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட காலங்கள் உண்டு. இன்று அவர் என்னுடைய திரைப்படத்திற்கு பணியாற்றுகிறார் என்பது என் வாழ்நாளில் நான் சாதித்த மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன். என் மனைவி திவ்யா செல்வராஜுக்கும் இளையராஜா சாரை நேரில் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தது. அவர் தயாரிக்கும் திரைப்படத்தில் இளையராஜா பணியாற்றுவது எங்களால் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

நான் என் உழைப்பு, வாசிப்பு, அரசியல் என அனைத்திலும் கர்வமாக இருந்திருக்கிறேன். ஆனால், எனக்காக அதிகாலையிலேயே எழுந்து இசையமைத்து, ‘உனக்காகத்தான் எழுதிக்கிட்டு இருக்கேன், வா’ என்று இளையராஜா சார் அழைத்த அந்த நிமிடத்தில், நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்” என்றார். பல தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து பணியாற்றி வரும் அவரது உழைப்பும், எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தக்கூடிய எங்கள் ராஜாவின் கர்வமும், திமிரும் என்றுமே அழகானது, உயர்வானது, மகத்துவமானது.  

இந்தத் திரைப்படம் கண்டிப்பாக வெற்றிப் படமாக இருக்கும். திரைக்கதை எழுதும்போது நடிகர்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள் என பல விஷயங்களை யோசிப்பேன். ஆனால் இந்தப் படத்தை எழுதும்போது, ‘இந்த இடத்தில் ராஜா சார் எப்படி இசையமைப்பார்?’ என்றுதான் அதிகம் யோசித்தேன். இந்தப் படம் திரைக்கு வரும் நாள் என் வாழ்நாளின் முக்கியமான நாளாக இருக்கும். கதிர் இந்தப் படத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் உண்டு. நான் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பதற்கும் அவரும் ஒரு முக்கிய காரணம். கதையை கூறுவதற்கு முன்பே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்ட நடிகர்களுக்கும் படத்தில் சிறப்பான பங்கு உள்ளது. படம் பார்க்கும்போது அது அனைவருக்கும் தெரியும். இந்தத் திரைப்படம் என் வாழ்க்கைக் கதையையும் தழுவியதாக இருக்கும். அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.”

படம் குறித்து இசைஞானி இளையராஜா கூறியதாவது.., 

“நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் இப்படியே கொஞ்சம் தூரம் சென்றால் என்னுடைய வீடு வந்துவிடும். நானும் இங்குதான் பிறந்தவன். காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.


“உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”

ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரியவந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம்.

அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. நான் இசையமைப்பது என் வேலை. கடவுள் எனக்கு அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறார்; நான் அதைச் செய்கிறேன். என் வேலை என்னவோ, அதுதான் சரஸ்வதி எனக்குக் கொடுத்தது. அப்படிப்பட்ட இசையை இன்று மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்குகிறேன். அவர் என் இசையை கொண்டாடக்கூடிய ஒருவர்.

இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். இதில் பங்குபெற்ற அனைவரும் நல்ல பெயரும் புகழும் பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

படத்திற்கு எழில் அரசு K ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியாளராகவும், சாண்டி நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார். சுரேன்.G, அழகியகூத்தன்.S ஆகியோர் ஒலி வடிவமைப்பையும், ரஞ்சித் அம்பாடி மேக்கப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

VFX பணிகளை ஹரிஹரசுதன் R கவனிக்கிறார். பப்ளிசிட்டி டிசைனை கபிலன் மேற்கொள்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக வெங்கட் ஆறுமுகம் பணியாற்றுகிறார்.

திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் மற்றும் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷ் லால்வானி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்ச்சூன் எண்டஎடெயின்மெண்ட் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ‘மஞ்சணத்தி’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Having lost his mother at a young age and grown up in isolation without his father's affection, Hero T.Antony, turns to alcohol as a young man to escape his loneliness. Averse to romantic relationships or marriage, he makes it a habit to invite a sex worker to his home daily, simply to have heart-to-heart conversations. One night, Madhumita Das, a sex worker, visits his home and captivates him. Antony enjoys her company and conversation so much that he begins calling her over every day; touched by his genuine care, Madhumita Das eventually falls in love with him.

Madhumita Das’s arrival brings new enthusiasm and a renewed sense of hope to Antony’s lonely life. However, as they begin living together, Antony’s alcoholism creates a major rift in their relationship, leading to their separation. Thrust back into solitude, does Antony reunite with Madhumita Das? The film *Yen Ennai Edho Seidhai* tells this emotional story.

Both T. Antony and Madhumita Das deliver strong performances in their debut film. Their screen presence significantly bolsters a screenplay where the narrative is driven primarily by the dialogue between the two leads.

Since the film utilizes live sound recording, the director cleverly cast Madhumita Das—who does not speak Tamil—as a Bengali woman. Although she speaks English throughout the movie, her charming attempts to utter the occasional Tamil word captivate the audience. The protagonist, T. Antony—constantly seen with a cigarette and a drink—scores with his performance, executing even the subtlest reactions with great care.

Jeeva Ravi, Regin Rose, and Navya Suji have effectively contributed to the flow of the screenplay.

Although cinematographer Pietro Villani has kept the visuals simple, he has presented them naturally. By relying on natural light rather than excessive artificial lighting, he allows the audience to become truly immersed in the story.

Although the songs composed by Jaikar Harinath and Ashok Sridharan are primarily montage sequences, they breathe life into the screenplay's flow. Joey Reda’s background score articulates emotions that dialogue alone could not convey.

T. Antony—who wrote, directed, edited, and starred in the film—narrates a simple love story in an uncomplicated manner while powerfully capturing the essence of romance and the lovers' emotions. While the film relies heavily on conversations between the lovers and their friends, and the director keeps the narrative engaging, the runtime could have been trimmed.

While the premise—that the heroine cannot speak Tamil because she is Bengali, forcing the hero to communicate with her in English—is logical, the excessive use of English throughout the film feels jarring and occasionally difficult to follow (even the subtitles are in English).

Opting for live sound recording, Director T. Antony filmed scenes in secluded locations and at quiet times; by treating the beach as a character that journeys through the entire film, he effectively demonstrates the inseparable bond between love and the seaside.

Director T. Antony approaches the unconventional theme of a romance involving a sex worker with a fresh perspective, presenting the story in a simple yet enjoyable way.

- NithyaSana

Pageviews