சென்னையில் நடைபெற்ற டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுக விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். டெகா இத்தாலி (DEKA Italy) நிறுவனத்தின் மேம்பட்ட Motus AZ+ லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை, டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டரின் நிறுவனர் மற்றும் சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில் அறிமுகப்படுத்தினார். சருமப் பராமரிப்பில் பயாலஜி அடிப்படையிலான தனது அணுகுமுறையுடன், சர்வதேச அளவிலான லேசர் தொழில்நுட்பத்தை இணைத்து, தனிநபரின் தேவைக்கேற்ற சிகிச்சை முறையை இந்தத் திட்டம் வழங்குகிறது.


இந்த நிகழ்ச்சியில், ‘ஜமா’ திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், ஏஞ்சலின், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு மற்றும் சுமித்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் மூலம் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த நடிகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் டிஜிட்டல் படைப்பாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.


நடிகர், இயக்குநர் பாரி இளவழகன் பகிர்ந்து கொண்டதாவது, ”இந்த நிகழ்வு தனிப்பட்ட முறையிலும் எனக்கு முக்கியமானது. டாக்டர் பைரவி செந்திலிடம் சருமப் பராமரிப்பு சிகிச்சை பெற்று வருகிறேன். டாக்டர் பைரவியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். சரும மருத்துவத் துறையில் எனக்கு இன்ஸ்பயரிங் அவர்தான். அவரது அணுகுமுறை, நோயாளிகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் டாக்டர். பி 360-ஐ அவர் உருவாக்கிய விதம் அனைத்தும் பாராட்டுக்குரியவை” என்றார்.


இந்த நிகழ்வில் இத்தாலியைச் சேர்ந்த DEKA நிறுவனத்தின் ஃபிரான்சிஸ்கோ பாடியும் கலந்துகொண்டார். டாக்டர் பைரவி செந்திலின் பணிகள் குறித்தும், சரும மருத்துவத் துறையில் அவர் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்தும் அவர் பேசினார். மேலும், DEKA-வின் தொழில்நுட்பத்தை டாக்டர் பைரவியின் மருத்துவ அணுகுமுறையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இதன் மூலம் இந்த அறிமுக நிகழ்வுக்கு சர்வதேச அளவிலான சிறப்பும் கிடைத்தது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் புரோகிராமின் முக்கிய அம்சமாக DEKA நிறுவனத்தின் Motus AZ+ மேம்பட்ட லேசர் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. அழகியல் மற்றும் சரும மருத்துவப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்பட்ட லேசர் தளத்தை, டாக்டர் பி 360 தனித்துவமான சிகிச்சை அணுகுமுறையுடன் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு நபரின் சருமத்தின் பயாலஜி, சிகிச்சையின்போது வசதி மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொண்ட பின்னரே, அவர்களுக்கு ஏற்ற சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பு முறையைத் தீர்மானிப்பதே இதன் நோக்கம்.


“தொழில்நுட்பம் மட்டுமே முக்கியமானது அல்ல. ஒரு நபரின் தனிப்பட்ட தேவைகளுக்கும், அவரது ஸ்கின் பயாலஜிக்கும் ஏற்ப சரியான அனுபவத்தையும் சிகிச்சை முறையையும் உருவாக்கும்போதுதான் தொழில்நுட்பத்தின் உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது. டாக்டர் பி 360-ல் எங்களது அணுகுமுறை எப்போதும் முதலில் தோலைப் புரிந்துகொள்வது. அதன் பின்னர் சரியான தொழில்நுட்பம், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பது. ‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ என்பது முன்பு நான் குறிப்பிட்டதன் தொடர்ச்சி" என்று டாக்டர் பைரவி செந்தில் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் அழகுப் பராமரிப்பு குறித்த சுவாரஸ்யமான கருத்துகளும் இடம்பெற்றன. நடிகர் கிஷன் தாஸ், தோல் பராமரிப்பு குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதுடன், டாக்டர் பி நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதில் தனக்கு உள்ள ஆர்வத்தையும் தெரிவித்தார்.


அவருடன் தமிழ் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல இளம் மற்றும் பிரபலமான முகங்கள் பங்கேற்றது, இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.


டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் 2025 ஜனவரி 19 அன்று தொடங்கப்பட்ட தி டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரிமெண்டல் செண்டர் தோல், முடி, நலவாழ்வு மற்றும் நீண்ட நாள் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாது 360 டிகிரி ஒருங்கிணைந்த சுகாதாரச் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


மேலும் இந்த அமைப்பில், இந்தியாவின் முதல் மெடிக்கல் கிரேடு சலூன் எனக் குறிப்பிடப்படும் பீவெல் மெடி சலூன் (BeWell Medi Salon) மற்றும் டாக்டர் பைரவியால் உருவாக்கப்பட்ட தோல் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலான AAVÉDERM ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் பிராண்டும் இடம்பெற்றுள்ளன.


பீவெல் மெடி சலூன் தொழில்முறை சலூன் பராமரிப்பை இந்த ஒருங்கிணைந்த அமைப்புடன் இணைக்கிறது. அதேபோல், AAVÉDERM மூலம் தோல் மருத்துவ நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஸ்கின்கேர் மற்றும் நியூட்ராசூட்டிக்கல் தயாரிப்புகள் அன்றாட சுய பராமரிப்புக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் டாக்டர் பி 360-ன் நோக்கம் மருத்துவச் சிகிச்சைகளைக் கடந்தும் விரிவடைகிறது.


‘டாக்டர் பி பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்' அறிமுகத்தின் மூலம், மேம்பட்ட தொழில்நுட்பம், தனிப்பட்ட தோல் மருத்துவப் பராமரிப்பு மற்றும் நீண்டகால சரும நலவாழ்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனது பயணத்தில் டாக்டர் பி 360 மேலும் ஒரு முக்கியமான அடியை எடுத்துள்ளது.


தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்களின் பங்கேற்பு, இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடுதல் கவனத்தையும் சிறப்பையும் கொடுத்தது.

 

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’.


இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா,நடிகை நந்திதா ஸ்வேதா, மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.


வெளியான முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.


இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


MAGIZH Productions சார்பில் C. Beaula Magizh தயாரிக்கும் இப்படம், இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.


துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது.


“சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…”


என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள ‘துரோகம் பழகு’ முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.


புதுமுகம் பாலா மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள்.இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.


தக்க்ஷன் விஜய் இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன், கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளையும் ஆக்‌ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்,அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் கவரும் படமாக ‘துரோகம் பழகு’ உருவாகியுள்ளது.

 

கருவுறுதல் சிகிச்சையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னையின் முன்னணி கருவுறுதல் சிகிச்சை மையங்களில் ஒன்றான பிரசாந்த் பெர்ட்டிலிட்டி மருத்துவமனை, 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' என்ற புதிய சேவையை இன்று அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே அவர்களுக்கு தேவையான ஐவிஎப் ஆதரவு சேவைகளை வழங்க உள்ளது. 


சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறப்பு விருந்தினர் நடிகை குஷ்பு சுந்தர் முன்னிலையில் இந்தச் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். கீதா ஹரிப்ரியா மற்றும் இயக்குனர் டாக்டர். சம்ஹிதா மோடூரி ஆகியோர் பங்கேற்றனர். ஐவிஎப் சிகிச்சையை எவ்விதத் தடங்கலுமின்றித் தொடர்வதில் உள்ள முக்கிய சவால்களைத் தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வேலைக்குச் செல்லும் தம்பதிகள் தங்களின் ஐவிஎப் சிகிச்சை பயணத்தில், மருத்துவமனைக்குச் செல்ல முடியாததாலோ அல்லது குறித்த நேரத்தில் ஊசி போட முடியாததாலோ சிகிச்சை தடைபடுவதை எதிர்கொள்கின்றனர். இதனால் சிகிச்சையை மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து, நோயாளிகள் தங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே வசதியாகச் சிகிச்சையைத் தொடர இந்த 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' சேவை உதவும்.


குழந்தை இன்மை: ஒரு முக்கிய சவால்: இந்தியாவில் குழந்தையின்மை என்பது ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கணிசமான அளவிலான தம்பதிகள் இதனால் பாதிக்கப்படுவதாக இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, ஆறு பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான சவால்களைத் தாண்டி, குழந்தையின்மை தம்பதிகள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான உணர்வுபூர்வமான, சமூக மற்றும் நிதி சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஏனெனில், கருவுறுதல் சிகிச்சைக்கு நீண்ட காலம் மருத்துவர் ஆலோசனைகள், பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.


இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறப்பு மருத்துவக் குழு மற்றும் சென்னை முழுவதும் பயணிக்கக்கூடிய பிரத்யேக வாகனத்தையும் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தம்பதிகள் தங்கள் சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை. ஊசி போடுதல், மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தொடர் பரிசோதனைகள் போன்ற சேவைகளை அவர்கள் வீட்டிலேயே எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.


நோயாளிகள் தங்கள் வீட்டில் பெறும் சேவைகளை எளிதாக முன்பதிவு செய்து நிர்வகிக்க, 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி'  என்ற பிரத்யேக மொபைல் செயலியையும் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம், நோயாளிகள் தங்கள் சிகிச்சைக்குத் தேவையான சேவைகளை முன்பதிவு செய்யலாம். அதன் பிறகு, மருத்துவக் குழுவினர் சென்னை முழுவதும் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவைகளை வழங்குவார்கள்.


தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்த முயற்சியின் மூலம், நோயாளிகள் தங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வீடுகளிலேயே சிறந்த சேவைகளைப் பெற முடியும். இந்தச் செயலியும், சிறப்பு மருத்துவக் குழுவும் இணைந்து, தம்பதிகளின் ஐவிஎப் சிகிச்சை பயணத்தை மிகவும் எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.


இது குறித்துப் பேசிய பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். கீதா ஹரிப்ரியா கூறுகையில், "கருவுறுதல் சிகிச்சையில் நாங்கள் எங்கள் பயணத்தை முதன்முதலில் தொடங்கியபோது, எங்கள் நோக்கம் எளிமையானதாக இருந்தது - பல தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதே அது. கடந்த பல ஆண்டுகளில், கருவுறுதல் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சைப் பயணத்தின் ஒவ்வொரு படியையும் எளிதாக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை.


'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' மூலம், மருத்துவமனையின் சுவர்களைத் தாண்டி, நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே கருவுறுதல் சிகிச்சையைக் கொண்டு செல்கிறோம். இது வெறும் வசதிக்காக மட்டுமல்ல; இது சிகிச்சையின் தொடர்ச்சி, நம்பிக்கை மற்றும் அன்பான கவனிப்பு பற்றியது. எதிர்காலத்தில் கருவுறுதல் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் மாற வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான படியாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது" என்றார்.


இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர். சம்ஹிதா மோடூரி கூறுகையில், “கருவுறுதல் சிகிச்சை என்பது ஒரு பயணம்; இதில் சிகிச்சையை எவ்வித இடையூறுமின்றித் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். இந்தச் சிகிச்சையின் போது பலமுறை மருத்துவமனைக்கு வருதல், சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், தொடர் பரிசோதனைகள் ஆகியவை தேவைப்படும். வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளைச் சமாளிக்கும் தம்பதிகளுக்கு, பலமுறை கருவுறுதல் மையத்திற்குப் பயணம் செய்வது ஒரு கூடுதல் சவாலாக மாறலாம்.


குழந்தையின்மைப் பிரச்சனை பல தம்பதிகளைப் பாதித்துள்ள நிலையில், சிகிச்சையை எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலமும், தேவையற்ற தடைகளைக் குறைப்பதன் மூலமும் அதிக அளவிலான நோயாளிகள் பயனடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மருத்துவர்களின் கண்காணிப்பில் நோயாளிகளுக்குத் தேவையான கவனிப்பை அவர்களின் இடத்திற்கே கொண்டு செல்லும் நோக்கத்தோடுதான் 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' சேவை உருவாக்கப்பட்டுள்ளது. முடிவாக, கருவுறுதல் சிகிச்சையில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்களை நீக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் மூலம், நோயாளிகள் தங்களின் மிக முக்கியமான இலக்கான குழந்தை பாக்கியத்தை அடைவதில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்" என்றார்.


இந்த அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை குஷ்பு சுந்தர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில்: "குழந்தை பாக்கியம் பெறுவதற்கான பயணம் என்பது மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம். கருவுறுதல் சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு, இது உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் அதிக சவாலான ஒரு அனுபவமாக இருக்கலாம். அவர்களுக்கு அன்பான கவனிப்பும், நம்பிக்கையும், ஆதரவும் அதிகம் தேவைப்படும் இந்த நேரத்தில், அவர்களின் பயணத்தை எளிமையாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவச் சேவைகள் மாற வேண்டும் என்பதை உணர்ந்து, தம்பதிகளுக்குத் தேவையான சிகிச்சையை அவர்களின் இடத்திற்கே கொண்டு சேர்க்கும் 'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகள் சிகிச்சையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பயணத்தை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு அதிக நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று கூறினார்.


செயலி மற்றும் உதவி எண் 

'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி' மொபைல் செயலி மூலம், நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திப்பதற்கான முன்பதிவுகளை எளிதாகச் செய்யலாம். மேலும், தொடர் பரிசோதனைகளை நிர்வகிக்கவும், தங்கள் மருத்துவப் பதிவுகள் மற்றும் சிகிச்சை தொடர்பான கோப்புகளைப் பராமரிக்கவும், தங்கள் சிகிச்சைப் பயணத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் இந்த ஒரே செயலி உதவுகிறது.


'பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்' மூலம் கிடைக்கும் சேவைகள், அதற்கான தகுதிகள் மற்றும் முன்பதிவு குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, நோயாளிகள் 044 2888 2888 என்ற 24 மணிநேரமும் செயல்படும் உதவி மைய எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தம்பதிகளின் சிகிச்சைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தரமான கருவுறுதல் சிகிச்சையை எளிதாகவும் வசதியாகவும் கிடைக்கச் செய்யும் நோக்கில், இந்தச் சேவை தற்போது சென்னை முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.


இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வில்…


தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில்,


“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது சாத்தியமில்லை. ‘ஹாய்’ திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. இந்தப் படத்தை உருவாக்கியபோது, பெரிய படங்களுக்குப் பிறகு ஏன் இப்படிப்பட்ட படத்தைத் தயாரிக்கிறீர்கள் என்று பலர் கேட்டார்கள். நல்ல கதையையும், நல்ல படத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம். இன்று அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.


“இந்த மேடையில் இருக்கும் அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. குறிப்பாக பிரபு சார் படப்பிடிப்பின்போது காட்டிய அன்பை மறக்க முடியாது. தூத்துக்குடி படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே என்னைத் தொடர்புகொண்டு, ‘தம்பி, நீ எதுவும் சாப்பிடாதே, வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறேன், என்னிடம்தான் சாப்பிட வேண்டும்’ என்று அன்புடன் கூறினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய அந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடன் நிறைய விஷயங்களில் சண்டை போட்டிருக்கிறேன், அதே நேரத்தில் அந்த உறவில் இருக்கும் அன்புதான் மிகப்பெரியது,” என்றார்.


“பிலோவுடன் எனக்கு குடும்பம் போன்ற உறவு. இதுவரை நான்கு படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அதனால் அவரைப் பற்றி பேசுவதற்கே ஒரு தனி நெருக்கம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கியமானது,” என்றார்.


“விஷ்ணு கதை சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது. அவர் கதையை விவரிக்கும்போதே அந்தக் கதையின் உணர்வை நம்மால் முழுமையாக உணர முடியும். அவர் முதலில் கதை சொல்லியபோதே அந்த எமோஷன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அந்தக் கதையை ஒரு நல்ல படமாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவுக்கும், இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.



ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா பேசுகையில்..,


“அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு முழுவதும் என் மீது அன்பும் அக்கறையும் காட்டியதற்கும், சிறப்பான உணவு மற்றும் பரிசுகளை வழங்கியதற்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் முதன்முதலில் என்னிடம் கதையை விவரித்தபோதே, அவர் ஒரு சிறப்பான படத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அந்த நம்பிக்கை இன்று நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவை நான் அன்பாக ‘தளபதி’ என்றுதான் அழைப்பேன். இந்த வாய்ப்புக்கும் படக்குழுவினரின் அன்பிற்கும் அனைவருக்கும் தனது நன்றி.



இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில்..,


“அனைவருக்கும் நன்றி. இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கவினுடன் இது எனது நான்காவது படம் என்பதால், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு அளவுக்காவது காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இசையும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.


நடிகை அம்ருதா சீனிவாசன் பேசுகையில்..,


“என்னை மேடைக்கு அழைத்து பேச வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பிரபு சார், ராதிகா மேம், சுகாசினி மேம் போன்ற மூத்த கலைஞர்கள் முன்னிலையில் நிற்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெருமையும். ‘ஹாய்’ உண்மையிலேயே ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம். இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிப்பவை. இசை, படத்தொகுப்பு, இயக்கம், கதை என ஒவ்வொரு துறையினரும் ஒன்றிணைந்து பங்களித்தால்தான் இப்படிப்பட்ட ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்க முடியும். இயக்குநர் விஷ்ணு ஒவ்வொரு ஃபிரேமையும் மிகவும் கவனமாகவும் அழகாகவும் செதுக்கியுள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு கிடைத்தது. ரசிகர்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வரும் வாரங்களிலும் ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கிய லலித் சார், பிலோமின் ராஜ் சார், ஜென் மார்ட்டின் சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.



நடிகர் குரேஷி பேசுகையில்..,


“பொதுவாக பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து நடிகர்களை வரவேற்றுள்ளேன். ஆனால், இன்று ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி. குறிப்பாக கவின் அண்ணாவுக்கு என் நன்றி. இயக்குநர் விஷ்ணு மிகவும் நல்ல மனிதர். மழை, புயல், வெள்ளம் என எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து, வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உள்ளது. அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


பிரபு சார், ராதிகா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக பிரபு சார் என்னிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பழகினார். புதிய நடிகர் என்ற எந்தத் தயக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தாமல், தானாகவே வந்து பேசுவார், அன்பாக விசாரிப்பார். அவருடன் பகிர்ந்து கொண்ட அந்த தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை. ராதிகா மேடத்துடன் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் கலகலப்பானவர்; நம்மை கிண்டல் செய்து சிரிக்க வைப்பதிலும் வல்லவர்.


மேலும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னிடம் இன்னும் நிறைய திறமைகள் இருப்பதாக நானே நம்புகிறேன். எனவே, எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி ஆதரிக்க வேண்டும்,” என்றார்.


நடிகை காவ்யா பேசுகையில்..,


“ ஹாய்’ படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் அன்பும் வரவேற்பும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மேடையில் இன்று நிற்பது எனக்கு மிகவும் மதிப்புமிக்க தருணம். கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து, அவரைப் போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது. ‘மைதிலி’ கதாபாத்திரத்தில் நடிக்க என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கும், அந்தக் கதாபாத்திரத்திற்கு அன்பு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே; இனி மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும்,” என்றார்.


இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்..,


“ஹாய்’ என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து, என்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக, என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர். சத்யன் சார், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.


இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.


எனக்கு வாய்ப்பளித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் அண்ணா, நயன்தாரா மேம், எஸ். எஸ். லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை, பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; என்னை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்றார்.



நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், “முதலில் ‘ஹாய்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.


“நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார். அதேபோல், பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர். அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும், சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது,” என்றார்.


“கவினின் ‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும், அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள். விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.


நடிகை சுஹாசினி பேசுகையில்,


“ ‘ஹாய்’ படத்தில் எனக்கு ஒரு காட்சி மட்டுமே இருந்தாலும், அதில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது அவரது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. ஆரம்பத்திலேயே பல சவால்களைச் சந்தித்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் கடந்து இனி அவரது பயணம் மேலும் மகிழ்ச்சியாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.


மேலும், “இந்தப் படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். அந்த உழைப்புக்கான பலன் இன்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி. கடந்த இரண்டு நாட்களாக ‘ஹாய்’ படத்தைப் பற்றியே பலரும் நல்ல விதமாகப் பேசுவதை கேட்டு வருகிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைப்பதில்லை. எனவே, இந்த வெற்றியை முழுமையாக மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.




நடிகர் பிரபு பேசுகையில்..,


“ ‘ஹாய்’ ஒரு அருமையான படக்குழு. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணு எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்கும், இந்த வாய்ப்பிற்காக என்னை அழைத்த நயன்தாராவுக்கும் எனது நன்றி. படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. பாக்யராஜ் சாருடன் இணைந்து இருந்த தருணங்களும் மறக்க முடியாதவை,”.


“கவின் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரிடம் நிறைய திறமையும், நல்ல எதிர்காலத்திற்கான பலமும் இருக்கிறது. தொடர்ந்து இன்னும் சிறப்பாக வளர வேண்டும். ஜென் மார்ட்டினின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படக்குழுவில் உள்ள அனைவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களும், நேர்மறையான வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,”.


மேலும், “படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக விஷ்ணு படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்தார். சில நேரங்களில் சிரிப்பார், சில நேரங்களில் அழுத்தத்தில் இருப்பார். ஆனால், இன்று இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான ஆதரவை அளித்து வருகிறீர்கள். இந்த உற்சாகத்துடன் ‘ஹாய்’ படம் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.



நடிகர் கவின் பேசுகையில்..,


“முதலில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால், தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு, பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.


இயக்குநர் விஷ்ணுவின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது. படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.


கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக் கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” இந்த வெற்றியை பெற்று தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் veliyaana ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹாய்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.





Kamal Haasan is once again at the centre of a wave of excitement, as his look from his upcoming film has taken social media by storm.

With Kamal Haasan headlining the project, the look test for the film was conducted yesterday, and glimpses from the test have already gone viral, creating immense curiosity and anticipation among fans and film audiences. Kamal Haasan’s striking new appearance has become a talking point across social media, with fans eagerly awaiting more details about the project.

The film marks the first collaboration between Kamal Haasan and filmmaker S. U. Arun Kumar, making the combination all the more intriguing. Known for constantly reinventing himself and embracing distinctive characters, Kamal Haasan’s latest look has once again sparked widespread interest, offering audiences a glimpse into the world being created for the film while keeping its larger narrative firmly under wraps.

The much-awaited project is jointly produced by RaajKamal Films International (RKFI) and Turmeric Media, bringing together two prominent production houses for this highly anticipated collaboration. With Kamal Haasan leading the project and S.U. Arun Kumar at the helm, the film has already generated considerable buzz even before commencing production.

Following the successful completion of the look test, the film is expected to commence shooting soon. Further details about the project will be officially revealed at a later stage.

தமிழ் சினிமாவில் தனித்துவமான, சமூக அக்கறை கொண்ட படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.
நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநரான எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது.
இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக K. கருணாமூர்த்தி - நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.
மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் ஒரு ஆழமான சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் ரசிகர்களை நெகிழச் செய்யும் படைப்பாக உருவாகி வருகிறது.
தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் முதல் போஸ்டரில், பிரம்மாண்டமான விலங்கின் எலும்புக்கூட்டுக்குள் தனிமையில் நடந்து செல்லும் அமீரின் தோற்றம் மற்றும் இரண்டாம் போஸ்டரில் எங்கும் சிதறிக் கிடக்கும் விலங்குகளின் எலும்புக்கூடுகளுக்கு நடுவே ‘மாகாளி’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் படத்தின் இருண்ட மற்றும் ஆழமான பின்னணியை வெளிப்படுத்துகிறது. வெறுமை, அழிவு, இயற்கையின் வலி மற்றும் சமூகத்தின் ஒரு மறைக்கப்பட்ட யதார்த்தம் போன்ற பல அடுக்குகளை உணர்த்தும் இந்தக் காட்சியமைப்பு, படத்தின் மீது கூடுதல் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அமீர், சுவாசிகா, அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பையும், ஜஸ்டின் பிரபாகரன் இசையையும் கவனிக்கின்றனர். ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், வர்ஷினி சங்கர் ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பிலும், கபிலன் விளம்பர வடிவமைப்பிலும், ஜெய்குமார் வைரவன் நிழற்படத்திலும், நாகேந்திரன் ஒப்பனையிலும் பணியாற்றுகின்றனர். வெங்கட் ஆறுமுகம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், சதிஷ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

‘மாகாளி’ படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.
லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள 'சர்தார் 2' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படத்தில் கார்த்தி, எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், நாசர், ஆசிஷ் வித்யார்த்தி, 'நிழல்கள்' ரவி, அச்யுத் குமார், தேவதர்ஷினி, சின்னி ஜெயந்த், ஜீன் பால் லால், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலு குட்டி மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜீவன் கையாண்டிருக்கிறார். உளவுத்துறை அதிகாரிகளின் வாழ்வியல் பின்னணியை ஆக்சன் என்டர்டெய்னராக விவரிக்கும் இந்த திரைப்படம் - செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தினை ரசிகர்களிடம் சென்றடைவதற்காக விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர்‌ தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சின்னி ஜெயந்த், கார்த்தி , எஸ்.ஜே.சூர்யா, நாசர், கவின், ரவி மோகன், நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், இயக்குநர்கள் பி. எஸ். மித்ரன், மோகன் ராஜா, தமிழ், சுந்தர் சி, ரத்ன குமார் இசையமைப்பாளர் சாம் சி எஸ் , படத்தொகுப்பாளர் விஜய் வேலு குட்டி சண்டை பயிற்சி இயக்குநர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசுகையில்,*

'' சர்தார் 2 எனும் மிகப்பெரிய திரைப்படத்தை திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழி திருத்தேர் போல் இழுத்து வந்து ரசிகர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். இந்தப் படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.

இது எங்களுடைய கனவு படைப்பு. இந்த திரைப்படத்தை இந்த அளவிற்கான தரத்துடன் உருவாக்கியது என்னுடைய சீன பெருஞ்சுவரான கார்த்தி தான்.

இயக்குநர் மித்ரன் கதை சொல்லும் போது இதன் பிரம்மாண்டம் தெரிந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக படத்தை உருவாக்கி இருக்கிறார். இது ஒரு அழகான கதை. இவ்வளவு பெரிய விசயத்தை சண்டை காட்சிகளுடன் மட்டுமல்லாமல் எமோஷன் உடனும் உருவாக்கியிருக்கிறார். செப்டம்பர் 10ஆம் தேதி அன்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து சர்தார் 2 வை ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.

*நடிகர் சூர்யா பேசுகையில்,*

'' சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இப்படத்தின் டீசரை பார்க்கும்போது இருட்டில் சண்டை நடக்கும். அதை பார்த்தவுடன் நெட்ஃபிளிக்ஸில் ஏதோ ஒரு இன்டர்நேஷனல் ஃபிலிம் என்றுதான் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று பார்த்தால் கார்த்தி உள்ளே வருகிறார். அதைப் பார்த்தவுடன், 'ஹேய் நம்ம படமா இது..!' என்ற எண்ணம் வந்தது. அதை ஆச்சரியமாக பார்த்தேன். அந்த டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் டீசர் வரப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தற்செயலாக அதை பார்த்த போது இப்படி எல்லாம் கூட தமிழில் படம் பண்ண முடியுமா ? மித்திரன் படமா இது? என்று எண்ணி வியந்தேன்.

டீசர் எப்படி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததோ...! அதேபோல் இந்தப் படத்தின் டிரெய்லரும் எனக்கு ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் கொடுத்திருக்கிறது.

இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியும், உண்மையாக நடந்த சம்பவங்களை அடித்தளமாக எடுத்துக்கொண்டு உருவான படம் இது. சர்தார் அப்படித்தான் 50 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் அது நடந்திருக்கிறது. நிகழ்த்தி காண்பித்திருக்கிறார்கள். அதிலிருந்து எடுத்துக்கொண்ட ஒரு கரு தான் இது.

நமக்குத் தெரியாத பல விசயங்கள் இருக்கிறது. அதை திரையில் சிறிதளவு தான் காண்பிக்க முடிகிறது. ஒரு ஸ்பை திரில்லரை தமிழில் அண்மை காலத்தில் இவ்வளவு தத்துரூபமாக உண்மை சம்பவங்களுக்கு நெருக்கமாக இவ்வளவு அழகியலுடன் நாம் பார்த்ததில்லை

இயக்குநர் மித்ரன் ஒரு அற்புதமான எழுத்தாளர்- இயக்குநர்- இன்வெஸ்டிகேட்டட் ஜர்னலிசம் தெரிந்தவர் என நினைக்கிறேன். அவருடன் பேசும்போது.. அவரிடம் ஏராளமான கதைகள் உள்ளதை தெரிந்து கொண்டேன்

சர்தாரில் மிகப்பெரிய விவாதத்திற்குரிய கருத்தை முன் வைத்தீர்கள். சர்தார் 2வில் நான் நிச்சயமாக அதைவிட மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களின் அபாரமான உழைப்பு தெரிகிறது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

எழுத்தாளரும், படத்தொகுப்பாளரும் ஒன்றாக அமர்ந்து படத்தை தொகுத்திருக்கிறார்கள் என்று கேட்கும்போது.. ஆரோக்கியமான போக்காக இருக்கிறது.

என்னதான் கதை சிறப்பானதாக இருந்தாலும்.. அதனை ரசிகர்களிடத்திலும் பார்வையாளர்களிடத்திலும் கொண்டு செல்வது எஸ் ஜே சூர்யா போன்ற நட்சத்திர நடிகர்கள் தான். அதை இப்போதே என்னால் பார்க்க முடிகிறது.

ஒரு நடிகரை விட ஒரு கதாபாத்திரம் நிறைய பேசப்படுகிறது என்றால்.. அது ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம்.

கார்த்தி சர்தாராக திரையில் தோன்ற முடிகிறது. நிற்க முடிகிறது. எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள். இன்னும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு திரைப்படத்தின் பார்ட் 2 உருவாகி இருக்கிறது என்றால்... அதை நடிகனுக்கு கிடைத்த ஒரு ஆசியாக பார்க்கிறேன்.

கார்த்தியின் திரையுலக பயணத்தில் என்னை விட முக்கியமான படங்கள் நிறைய உள்ளது. அவரால் அதனை செய்ய முடிகிறது. அவரை ஒவ்வொரு படத்திலும் ரசித்தும் ஆச்சரியப்பட்டும், சந்தோஷமாகவும் நான் பார்க்கிறேன். அதில் 'சர்தார்'- நான் மிக முக்கியமான படமாக பார்க்கிறேன்.

செப்டம்பர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் எல்லோரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து சர்தாரை பார்த்து கொண்டாடுவோம். அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைய உள்ளது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் நிச்சயமாக கார்த்திக்கு வேண்டும்.

தயாரிப்பாளர் லக்ஷ்மனும், கார்த்தியும் ஸ்கூல் படிக்கும் போதே பிரண்ட்ஸ். இந்த நேரத்தில் இவ்வளவு துணிச்சலுடன் மிகப்பெரிய அளவிற்கு முதலீடு செய்து இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல், குறிப்பாக பட்ஜெட்டை பற்றி யோசிக்காமல்.. நல்லதொரு தரமான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் கடவுளின் ஆசீர்வாதத்தால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல் வெளியாகி வெற்றியைப் பெற வேண்டும். இயக்குநர் மித்திரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

*இயக்குநர் பி எஸ் மித்ரன் பேசுகையில்,*

''நான் படத்தைப் பற்றி பேசக்கூடாது என நினைக்கிறேன். படம் தான் மக்களிடம் பேச வேண்டும். அதனால் படத்தைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் இந்தப் படம் எப்படி உருவானது? என்பதை பற்றி பேச விரும்புகிறேன்.

இதற்கு முதலில் தயாரிப்பாளர் லட்சுமண் குமாரை பற்றி தான் சொல்ல வேண்டும். சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்பதை முதலில் அவர் தான் எங்களிடம் சொன்னார். அதனால் இது அவருடைய கனவு படம். அத்துடன் எனக்கு முழு நம்பிக்கையை அளித்து இதனை சிறப்பான படமாக உருவாக்குங்கள் என்றார். இதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு உள்ள பொருளாதார சூழலில் இது போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்க வேண்டும் என யோசிப்பது மிகப்பெரிய விசயம்.

நான் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தி உடனும் ஆறாண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தியை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் நான் ஒருவன் தான். அதனால் கார்த்தியை பற்றி பேசுவதற்கு என்னிடம் ஏராளமான விசயங்கள் உள்ளன.

'ஜப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் ஒரு விசயத்தை சொன்னேன். யார் ஒருவர் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுகிறார்களோ..! அவர்கள் மிகச் சிறந்த இயக்குநராக உருவாகிவிடுவார்கள். உங்களுடைய, பொறுப்புணர்வை அவர் மேம்படுத்தி விடுவார். அதாவது ஒரு விசயம் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் ..அது அவருக்கு போதாது. அப்போது அவர் இன்னும் சிறப்பாக செயல்படலாம் என்பார். அப்படித்தான் இந்த படம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

இந்தத் திரைப்படம் இந்த அளவிற்கு தரத்துடன் உருவாகி இருப்பதற்கு கார்த்தியும் ஒரு காரணம். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மிக முக்கியமான காரணம்.

இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற மனநிலையுடன் தான் அவரை சந்திக்க சென்றேன். ஏனெனில் அவருடைய எதிர்பார்ப்பு என்ன? என்பது எனக்கு ஓரளவு தெரியும். அவரிடம் நான் இயக்குநராக கதை சொல்லவில்லை. எஸ்ஜே சூர்யாவாக மாறி அவரிடம் கதையைச் சொன்னேன்.

எந்தவொரு விசயத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எந்த விசயத்தை சொன்னாலும் அது ரசிகர்களுக்கு புரிய வேண்டும்... பிடிக்க வேண்டும்... என்பதற்காக கடுமையாக போராடுவார். அது சாதாரண விசயம் அல்ல. அவருக்கு இருக்கும் பரபரப்பில் எனக்கு வாட்ஸ் அப்பில் 17 நிமிசங்கள் பேசிய ஆடியோவை அனுப்புவார். அதனால் இந்தப் படம் மிகப்பெரிய அளவிற்கு உருவானதற்கு எஸ் ஜே சூர்யாவின் உந்துதலும் ஒரு காரணம்.

சாம் சி எஸ் எப்போதும் எதற்காகவும் அசராத மனிதர். அவரை சந்தித்து எனக்கு இப்படி ஒரு விசயத்தை செய்து தாருங்கள் என்று சொன்னால் போதும். அதை ஒருபோதும் மறுக்கவே மாட்டார். அவரிடமிருந்து முடியாது என்ற வார்த்தை இதுவரை வந்ததே இல்லை. 'ஓகே பிரதர் டோன்ட் வொர்ரி' என்ற வார்த்தையை அதிகமாக சாம் சி எஸ் பேசித்தான் கேட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தின் கதையை நான் அவரிடம் விவரிக்கும் போது முழுவதுமாக கேட்டுவிட்டு, 'பிரதர் இந்த கதையை படமாக எடுப்பதை விட சொன்னாலே ஹிட்டுதான்' என்றார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் நூறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டியால்தான் இயக்குநர்கள் அவரைத் தேடிச் செல்கிறார்கள். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் அவருக்கு எனர்ஜியை கொடுத்து, நூறு படங்களுக்கு இசையமைக்க வைத்திருக்கிறது. நூறு படங்கள் என்றால் நூறு படங்கள் மட்டுமல்ல .. அவை எண்ணூறு ரீல்கள். 800 ரீல்களுக்கு நீங்கள் இசை அமைத்திருக்கிறீர்கள் என்றால்... அது சாதாரணமான விசயம் அல்ல. அதனால் நீங்கள்தான் ரியல் இன்ஸ்பிரேஷன். சாம்பியன். சர்தார் படத்தின் தரத்திற்கு இவரும் ஒரு காரணம்.

ஆஷிகா ரங்கநாத்திடம் ஜென் ஸீ தலைமுறையை போல் நடிக்க வேண்டும் இன்று சொன்னேன். அதற்காக அவர்கள் உடையை தேர்வு செய்த பிறகு, ''ஃபர்ஸ்ட் நான் எனக்கு சௌகரியமான உடையில் நடிக்கிறேன்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆஷிகாவின் மிகப்பெரிய பலம் என்னவென்றால்.. அவர் தமிழ் வசனங்களை தமிழில் தான் பேசி பயிற்சி எடுத்து நடிப்பார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி.

குறிப்பாக கார்த்தியின் டபுள் ஆக்சன் வேடத்தை படமாக்கும் போது கார்த்தி விஜியாவும் நடிக்க வேண்டும். மேக்கப் செய்து கொண்டு சர்தாராகவும் நடிக்க வேண்டும். இவர்கள் இந்த இரண்டு கதாபாத்திரத்துடனும் ஆஷிகா ரங்கநாத் இருப்பார்கள். கார்த்தி மட்டுமல்ல ஆஷிகாவும் இரண்டு முறை நடிக்க வேண்டியது இருந்தது.

மாளவிகா நடித்த 'தங்கலான்' படத்தை பார்த்துவிட்டு, இவர்கள் பயங்கரமாக ஆக்ஷன் காட்சியில் நடிப்பார்கள் என நினைத்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கலந்து கொள்ளும் முதல் நாள் படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளை படம் பிடித்தேன். அவர் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நான் அவரிடம் ஆக்சன் காட்சிகள் குறித்து விவரித்தேன். 60.. 70 .. அடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும் என்றேன். அவர்கள் தயங்கினார்கள். அதன் பிறகு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

இந்த படத்தைப் பொறுத்தவரை மூன்று ஸ்டேஜ்கள் இருக்கிறது படத்தை உருவாக்கும் ஸ்டேஜ். படத்தை படமாக்கும் ஸ்டேஜ். எடுத்த படத்தை நிறைவு செய்யும் ஸ்டேஜ். இந்த மூன்று ஸ்டேஜ்களிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.  

இந்தப் படத்தில் உள்ளரங்க காட்சிகள் அதிகம். அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்த கலை இயக்குநருக்கு நன்றி.

என்னைப் பொறுத்தவரை எடிட்டர் விஜய் வேலு குட்டியும், நடிகர் எஸ் ஜே சூர்யாவும் ஒரே மாதிரி தான் இருவருமே போதும் போதும் என்று சொன்னாலும் நான் வேறு வகையில் நடித்துக் காட்டுகிறேன் என்றும்... நான் வேறு விதமாக படத்தை தொகுத்து காட்டுகிறேன் என்றும்.. சொல்வார்கள். '' என்றார்.

*நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில்,*


 ''இந்த விழாவில் சூர்யா உள்ளே வருகை தந்ததும் ஒரு ஸ்பெஷலான ஆரா ஒன்று கிரியேட் ஆனது. தம்பிக்காக அவர் இந்த விழாவிற்கு வருகை தந்தது தனி சிறப்பு. மிக்க மகிழ்ச்சி.

சர்தார் 2 ஒரு அருமையான திரைப்படம். மேடையில் இயக்குநர் பி எஸ் மித்திரனும் திரைக்கதையில் பணியாற்றிய நம்பியும் பேசியபோது.. இந்த படத்திற்காக அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இயக்குநர் சொன்னதைப் போல் படத்தைப் பற்றி நாங்கள் பேசுவதை விட.. படத்தை பார்த்துவிட்டு, மக்கள் பேசட்டும். பேச வேண்டும்.

இப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆகிவிட்டது. ட்ரெய்லரும் ரிலீஸ் ஆகிவிட்டது. படத்தின் பிரம்மாண்டத்திற்கு.. அதற்காக தயாரிப்பாளர் செலவழித்த பணத்திற்கும்... இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இந்த படத்திற்காக தயாரிப்பாளர் கொடுத்த பேராதரவு என்பது மிக அதிகம். கிட்டத்தட்ட 120 நாள் படப்பிடிப்பு. ஒரு நாள் படப்பிடிப்பிற்கு தோராயமாக 40 லட்ச ரூபாய். அந்த அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. கார்த்திக்கு இது மிக முக்கியமான திரைப்படம்.

இயக்குநர் சுந்தர் சி சொன்னது போல் மக்களுக்கு பிடித்த நடிகர் கார்த்தி. ஒரு மனிதனின் குவாலிட்டி எங்கு இருக்கிறது என்றால்... அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் விதத்தில் இருக்கிறது. கார்த்தி ஒரு வாக்குறுதி கொடுத்தால்.. அதற்காக அவர் இறுதிவரை பக்கபலமாக நிற்பார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்ட பிறகு, அவர் அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

ஒரு கதாபாத்திரத்திற்குள் இருந்து இந்த கதையை பார்க்கும் அவருடைய கோணம் எனக்கு புதிதாக இருந்தது. இந்த விசயத்தை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.

ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால்.. அப்படத்தின் கதை மக்களுக்கு பிடித்த கதையாக இருக்க வேண்டும். மக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய கதையாக இருக்க வேண்டும் அது 'சர்தார் 2'வில் இருக்கிறது.

'துரந்தர்' படத்தில் ஒரு சீரியஸ் டிராமா இருக்கும். ஆனால் அதற்குள் ஒரு என்டர்டெய்ன்மென்ட்டும் இருக்கும். என்டர்டெய்ன்மென்ட் என்றால்.. படத்தின் போக்கை பார்வையாளர்கள் உணரக் கூடிய அளவில் என்டர்டெய்ன்மென்ட்டாக இருக்கும். அதுபோல் சர்தார் 2 விலும் இருக்கிறது.

இந்தப் படத்தில் இயக்குனர் பி எஸ் மித்திரன் சொல்லி இருக்கும் விசயம் குளோபல் வார்மிங் விட.. ஹியூமன் வார்மிங்கை பற்றி பேசி இருக்கிறார். அதை ஜாலியாக என்டர்டெய்ன்மென்ட் உடன் கொடுத்திருக்கிறார்.

படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறும்'' என்றார்.

*இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசுகையில்,*

''நான் முதன்முதலாக சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டுடியோவில் பாடுவதற்காக சென்றிருந்தேன். ஆனால் அங்குள்ளவர்கள் ஏழு மணி நேரம் வரை காத்திருக்க செய்து, அதன் பிறகு எனக்கு குரல் வளம் இல்லை என்று நிராகரித்தார்கள். எனக்கு அப்போது இசை ஆர்வம் இருந்தது. ஆனால் பாட வேண்டும் என்று விரும்பினேன். அதன் பிறகும் தொடர்ந்து பல நிராகரிப்புகள்... அவமானங்கள்... தொடர்ந்தது.

நூறாவது படத்திற்கு இசையமைத்து, அதற்கான மேடையில் நான் நிற்கும் போது என்னுடைய இந்தப் பயணம் மிக நீண்டது. துயரம் மிகுந்தது. ஆனாலும் கடவுள் மற்றும் மக்களின் ஆதரவு இருந்ததால் இசையில் ஓரளவு குறிப்பிட்ட சாதனையை எட்டி இருப்பதாக நம்புகிறேன்.

என்னுடைய நூறாவது திரைப்படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. எனக்கு எப்போதும் அறிவாளியாய் உள்ள இயக்குநர்களிடம் பணியாற்றுவதற்கு ஆசையாக இருக்கும். அதிலும் இசை பற்றிய அறிவு அதிகம் உள்ள மித்திரன் போன்றவர்களிடம் பணியாற்றும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையில் ராகங்களை பற்றியும்.. இசை குறிப்புகளை பற்றியும் ..மித்திரனுக்கு நன்றாக தெரியும். இவரைப் போன்றவர்களை அசத்துவதற்காக இன்னும் ஏதாவது புதிதாக முயற்சிக்கலாம் என புதிதாக ஏதேனும் ஒன்றை செய்வேன். மித்திரன் என்னுடைய நண்பர். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறந்ததாக இருந்தது. நான் பணியாற்றிய இயக்குநர்களில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மித்ரன்.

இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது இயக்குநரும், நானும் ஒன்றாக அமர்ந்து பணியாற்றினோம். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாக எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான உழைப்பை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளோம்.'' என்றார்.

*நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில்,*

'' திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு கூட்டு முயற்சியில் உருவாகும் கலை இது ஒன் மேன் ஷோ அல்ல.

இந்த சர்தார் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த நடிகர் சூர்யாவிற்கு நன்றி.

சினிமாவை மிகவும் நேசிக்கும் மனிதர் இயக்குநர் மித்ரன். அவர் சர்தார் உலகத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் இதில் சொல்லி இருக்கும் கதை உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தில் எனக்கு அற்புதமான கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எனக்கு மறக்க முடியாததாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு நுழைந்தவுடன் 150 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து ஆக்சன் சண்டைக்காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. முதலில் தயங்கினேன். அதன் பிறகு ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்பும், ஆதரவும் என்னை நடிக்கத் தூண்டியது. இதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு நன்றி. என்னுடைய எல்லைகளை வரையறுத்துக் கொண்டு நடித்தேன். அந்த எல்லைகளை மேலும் விரிவாக்கி வித்தியாசமான நடிப்பை என்னிடம் இருந்து பெற்றதற்காக இயக்குநர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும் நன்றி.

சர்தார் 2 படத்தின் டீசரில் சாம் சிஎஸ்ஸின் இசை மிக சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தின் காட்சிகள் சாம் சி எஸ் இன் இசையால் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

சக நடிகரான கார்த்தி அற்புதமான மனிதர். எளிமையாக பழகக்கூடியவர். பெருந்தன்மையானவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன்'' என்றார்.


*இந் நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில்,*

 

'' தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா - தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள். இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்த படக் குழு கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

 

கனவுகளை காகிதத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதனை இப்படி பிரம்மாண்டமான படைப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றால்... அதற்கு இந்த கதை மீது ஆர்வம் கொண்ட நம்பிக்கை வைக்கும் தயாரிப்பாளர் ஒருவர் வேண்டும். அந்த வகையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இல்லை என்றால்... எங்களின் கனவு நனவாகி இருக்காது.

 

இந்தப் படத்தில் நான் ஏராளமான மூத்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் யோகி பாபுவை 'முருகா' என்று தான் அழைப்பேன். அவரும் என்னை 'முருகா முருகா' என்றுதான் அழைப்பார். ஒரு காட்சியை அவரிடம் கொடுத்தால்... அந்த காட்சியை சிறப்பாக வடிவமைப்பதற்காக கடினமாக உழைக்கிறார். அதன் பிறகு அந்தக் காட்சி மிகச் சிறப்பானதாக மாறுகிறது. அவரிடம் எழுத்து திறமையும் இருக்கிறது. தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இயக்குநர் நல்ல பெயரை பெற வேண்டும் என்ற மனசும் இருக்கிறது. இவ்வளவு விசயங்கள் அவரிடம் இருப்பதால்... அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் இருக்கிறது. அவருடைய கடுமையான உழைப்பை பார்த்து நான் பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

 

சர்தார் முதல் பாகத்தில் காதல் காட்சிகளை இயக்குநர் வைத்திருந்தார். சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் என்ற உடன் காதல் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன்... அவர்கள் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போன்று இருந்தார்கள். அவர்களுக்கு பயங்கரமான காஸ்டியூம் கொடுத்து.. அவர்களுடன் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்கான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.‌இது தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, 'அவர் என் சாரா கதாபாத்திரம் அப்படிப்பட்டதல்ல' என விளக்கம் அளித்தார். ஏனெனில் படத்தில் சாரா கதாபாத்திரம் எனக்கு பாஸ்.

 

ஆஷிகா ரங்கநாத்- மிக திறமையான டான்சர். ஆனால் இந்த படத்தில் நாங்கள் அவரை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல். கமர்சியல் ஹீரோயின். அவர்களை அழைத்து வந்து இயக்குநர் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்.

 

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து பிறகு நீங்கள் இந்த படம் சொல்லும் விசயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையை சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விசயம்.

 

மித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு விசயம் என்னவென்றால்... எழுத்தாளர்களுக்கு மரியாதையும், மதிப்பையும் வழங்குவது. எழுத்தாளர்களுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது தான் ..அது அடர்த்தியானதாகவும் ரசிகர்களை உத்வேகத்துடனும் இருக்க வைக்கும். அத்துடன் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய உரையாடலை உண்டாக்கும். ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அது இந்த படத்தில் இயக்குநர் மித்திரன் செய்திருக்கிறார். படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும்.

 

எந்த பின்புலமும் இல்லாமல் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது என்பது சாதனைதான். இன்னும் அவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களுக்கு அற்புதமாக இசையமைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். சிலருக்கு வாழ்க்கை மிகப்பெரிய காத்திருப்பை வழங்குகிறது. ஆனால் வாய்ப்பை வழங்கும் போது மிகப்பெரிய அளவில் வழங்குகிறது. அதனால் இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு மிகப்பெரும் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்தப் படத்தில் சில காட்சிகளை பார்க்கும் போதே நமக்குள் பயம் ஏற்படும். இது ரசிகர்களுக்கு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தி வித்தியாசமான அனுபவம் வழங்கும்.

தற்போது திருநெல்வேலியில் இருந்து ஒரு பிரஷ்ஷான வில்லன் கிடைத்திருக்கிறார். அவர் இந்த படத்தில் செய்யும் ஒவ்வொரு விசயமும் ஜாலியாகவும் இருந்தது. அவர் நடிக்கும் கேரக்டரை கேமரா முன்னால் 100% ... மைக்கிற்கு முன்னால் 500% ...கொண்டு வந்து விடுகிறார். அவருடைய உழைப்பு அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது.அவருடைய வாழ்க்கைப் பயணம் தான் எல்லோருக்கும் உண்மையான இன்ஸ்பிரேஷன். எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை வேண்டுமானால் இமிடெட் செய்யலாம். ஆனால் அவருடைய எனர்ஜியை ஒருபோதும் நகலெடுக்க முடியாது.

என் அப்பாவை பற்றி ஒரு விசயத்தை யோசித்து இருக்கிறேன். இதுவரை அப்பா எனக்காக எந்த ஒரு கதையும் கேட்டதில்லை. நானே கதையைக் கேட்டு அதை தேர்வு செய்து முட்டி மோதி வரட்டும் என்று விட்டுவிட்டார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் நம்மை வழி நடத்தவில்லை என்று யோசித்தேன். அவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் கூட என்ன கதை... எங்கு படபிடிப்பு.. யார் இயக்குநர்.. என்று எந்த ஒரு விவரத்தையும் என்னிடம் கேட்டதில்லை. இதுவே எனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரம் என நினைக்கிறேன்.

என் ரசிகர்களை கடந்த மூன்று வருடங்களாக ரொம்ப படுத்தி விட்டேன்.ஆனால் இந்த முறை ரசிகர்களாகிய உங்களுக்கு நான் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. முழுவதும் இறங்கி அடித்திருக்கிறேன். நீங்கள் சந்தோஷமாக வந்து பார்த்து என்ஜாய் செய்யும் வகையிலான படமாக சர்தார் 2 இருக்கும். என்ன செய்தால் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதை பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்க வேண்டும்... புரிய வேண்டும்... என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும். என்றார்.

*வெளிநாடுகளில்  ‘ஹனுமான் அன்ஷ்’ படத்தை வெளியிடும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம்*


இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என அழைக்கப்படும் மகாராஜ்-ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், தற்போது வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது.

விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் பணியை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இதையடுத்து, செப்டம்பர் 11-ந் தேதி இப்படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியாகிறது.

மகாராஜ்-ஜி என்று பக்தர்களால் அழைக்கப்படும் நீம் கரோலி பாபா, அன்பு, பக்தி, சேவை ஆகியவற்றை தனது போதனைகளின் முக்கிய அம்சங்களாக கொண்ட ஆன்மிகத் தலைவராக போற்றப்படுகிறார். அவரது ஆன்மிக தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் பலரிடம் சென்றடைந்துள்ளது.

குறிப்பாக, 1960 மற்றும் 1970-களில் ஆன்மிகத் தேடலுடன் இந்தியாவுக்கு வந்த மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரிடமும் அவரது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே வெளியாகியுள்ள ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சுமார் ரூ.10 லட்சம் வசூலித்த இப்படம், 26-வது நாளில் ரூ.63.82 கோடி வசூலை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் வாய் வழிப் பாராட்டும், தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நீம் கரோலி பாபாவின் ஆன்மிக தாக்கம் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

1974-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், மகாராஜ்-ஜியை சந்திக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்கு வந்ததாகவும், பின்னர் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில் மார்க் ஸக்கர்பெர்க் தனது வாழ்க்கையில் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டபோது கைஞ்சி தாமுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலியா ராபர்ட்ஸும் தனது ஆன்மிகப் பயணத்தில் நீம் கரோலி பாபா ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய பிரபலங்களான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் நீம் கரோலி பாபாவுடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படும் கைஞ்சி தாம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்தியாவில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’, எல்லைகளைக் கடந்து மகாராஜ்-ஜியின் வாழ்க்கை மற்றும் ஆன்மிகப் பயணத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறது.

கைஞ்சி தாமில் இருந்து உலக ரசிகர்கள் வரை... மகாராஜ்-ஜியின் கதை தற்போது எல்லைகளைக் கடந்து பயணிக்கிறது.

‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் செப்டம்பர் 11, 2026 அன்று சர்வதேச திரையரங்குகளில் வெளியாகிறது.

 

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மூன்று முன்னணி நடிகர்கள் இப்படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். ‘96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. ரசிகர்களால் ‘கலையரசி’ என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராதிகா சரத்குமார் பல தசாப்தங்களாக தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ’கிழக்கு சீமையிலே’, ’பசும்பொன்’, ’தங்க மகன்’, ’தெறி’ உள்ளிட்ட பல படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதேபோல் ‘சூரரைப் போற்று’, ’மகேஷிண்டே பிரதிகாரம்’, ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை அபர்ணா பாலமுரளி பதிவு செய்துள்ளார்.


பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து ஃபியூஷன் பிலிக்ஸ் மற்றும் லோகோமோடிவ் குளோபல் புரொடக்‌ஷன் சார்பில் உருவாகிறது. இப்படத்தை குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியா ஆகியோர் தயாரிக்கின்றனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். 


தென்னிந்திய திரையுலகில் தனது இருப்பை விரிவுபடுத்தி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் முக்கிய இடம் பிடித்துள்ளது. தயாரிப்பு, விநியோகம் மற்றும் பல்வேறு முக்கிய கூட்டணிகள் மூலம் மலையாளத் திரையுலகில் தனது செயல்பாடுகளை இந்நிறுவனம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. பனோரமா ஸ்டுடியோஸின் மலையாளத் திரைப்படங்கள் பட்டியலில் 'அனோமி', 'உன்மதம்' மற்றும் 'டிக்கி டாக்கா' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ’புரொடக்ஷன் நம்பர் 4’ மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் ’முன்பே’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பஹத் பாசில் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் முக்கிய படங்களில் கூட்டணி அமைத்துள்ளது . தற்போது தனது முதல் தமிழ் படத்தயாரிப்பின் மூலம், இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் துடிப்பான திரையுலகங்களில் ஒன்றான தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை பதிக்கிறது.


பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் குமார் மங்கத் பதக் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் சினிமா எப்போதுமே துணிச்சலான, தனித்துவமான மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார கதைகளைச் சொல்லும் களமாக இருந்து வருகிறது. எங்களின் முதல் தமிழ் தயாரிப்பும் அதே உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். மிகவும் சுவாரஸ்யமான உலகத்தைக் கொண்ட  வித்தியாசமான திரைப்படம் இது. இயக்குநர் ராஜா சிறப்பாக கதையை உருவாக்கியுள்ளார். இத்தகைய திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார். 


இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் ’ஏர்லிஃப்ட்’, ’செஃப்’ மற்றும் ’பிப்பா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர். வலுவான மனித உணர்வுகளையும், சுவாரஸ்யமான உலகங்களையும் மையமாகக் கொண்ட கதைகளை தொடர்ந்து கையாண்டு வரும் அவர், தற்போது முதன்முறையாக உளவியல் திரில் ஜானரில் களமிறங்குகிறார். இருண்ட மற்றும் பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மூலம், ராஜா கிருஷ்ண மேனன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் புதிய களத்தை கொண்டு வருகிறார்.


இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பகிர்ந்து கொண்டதாவது, “ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொருத்தமாக ஒருமுறை குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் எனக்கு முதல் அனுபவமாக இப்படம் அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம், முதல் உளவியல் திகில் படம் மற்றும் முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதை. அதோடு, த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம், அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் குமார் மங்கத் ஜி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. அதேபோல், லோகோமோட்டிவ் குளோபலின் விகாஸ் மற்றும் சுந்தர் ஆகியோர் கதையை எந்தவித சமரசமும் இல்லாமல், அது சொல்லப்பட வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். இத்தகைய சிறந்த குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி” என்றார்.

 

லோகோமோட்டிவ் குளோபலின் மேனேஜிங் பார்ட்னரும் தயாரிப்பாளருமான சுந்தர் ஆரோன் மற்றும் தயாரிப்பாளர் விகாஸ் ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “எல்லைகளைக் கடந்து பயணிக்கும் அதே நேரத்தில், மனித உணர்வுகளை வலுவாக சொல்லும் கதைகளே லோகோமோட்டிவ் குளோபலின் தேர்வு. திகில், மிஸ்ட்ரி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட இந்த தமிழ் மொழி சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தின் கதை எங்களை உடனடியாக கவர்ந்தது. த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, லண்டனில் படமாக்கப்படும் இப்படம், நாங்கள் உருவாக்கி வரும் தரமான திகில் திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானதாக மாறியுள்ளது. 


ராஜா கிருஷ்ண மேனன், குமார் ஜி மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் ஆகியோரை ஒரே படத்தில் இணைத்து, இத்தகைய தனித்துவமான கதையை உருவாக்குவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்" என்றனர்.


சுவாரஸ்யமான கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் தனித்துவமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் என, இப்படம் பெரிய திரையில் ரசிக்கும் வகையிலான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து  வரவேற்றிருக்கிறது. அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- சந்தோஷ் எஸ் ஏ - கிருஷ்ணா விஜய் சந்திரன்-  ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கோல்ட் கால்'  திரைப்படம்.. எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். 


இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோல்ட் கால்' திரைப்படத்தில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ் ,சந்தோஷ், கிருஷ்ணா விஜய் சந்திரன், வி. ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே ,கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஆறுமுகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதனை வாக் த்ரோ என்டர்டெயின்மென்ட் - Walkthrough Entertainment நிறுவனம் சார்பில்  கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.


படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த சமூகத்தில் விற்பனை பிரதிநிதிகள் என்பவர்களும் உண்டு. இவர்களின் வாழ்வியலில் நடைபெறும் சம்பவங்களை காமெடியாகவும், ஃபீல் குட் என்டர்டெய்ன்மென்ட்டாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ஜென் ஸீ தலைமுறையினரும் தங்களை இணைத்துக் கொண்டு ஜாலியாக ரசிப்பார்கள். விற்பனை பிரதிநிதிகளான நால்வர் நண்பர்கள். அவர்களுக்குள் ஏற்படும் காதல்- மோதல்- காமெடி- ஆகியவற்றை இரண்டு மணி நேரத்திற்குள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லி இருக்கிறோம்'' என்றார். 


இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 18ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

Pageviews