‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரிக்கும் திரையிருப்பு, தொற்றிக்கொள்ளும் உற்சாகம் மற்றும் எனர்ஜிட்டிக்கான நடனம் போன்றவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 


‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தில் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஹீரோவாக ஹிருது ஹரூன் களமிறங்குகிறார் என்பதையே ‘டைகரியன் ரோர்’ பாடல் எடுத்துக்காட்டுகிறது. 


முதல் பீட்டிலிருந்தே இந்தப் பாடலின் பிரம்மாண்டமான காட்சிகள், எனர்ஜிட்டிக்கான இசை மற்றும் வசீகரிக்கும் நடனம் என வண்ணமயமாக உருவாகியுள்ளது. பாடலின் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் ஹிருது ஹரூன் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார். டைனமிக் பெர்கஷன் இசையும், பல அடுக்குகளைக் கொண்ட இசைக் கருவிகளின் பயன்பாடும் பாடலின் கொண்டாட்ட உணர்வை மேலும் அதிகரிக்கின்றன. ஓஷோ வெங்கட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


முதல் சிங்கிளுக்குக் கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு, ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்தப் பாடலுக்கு கெலித்தி, தமிழ் ஆதவன் மற்றும் ஆ.பா.ராஜா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். கெலித்தி மற்றும் தமிழ் ஆதவன் பாடலைப் பாடியுள்ளனர். ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை செல்வ குமார் திருமாறன் எழுதி இயக்கியுள்ளார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.


இப்படத்தில் ஹிருது ஹரூன், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி மொலெட்டி, அந்தோணி தாசன், சாச்சனா நமிதாஸ், ரமேஷ் திலக், பார்த்திபன், வஃபா கதீஜா, பீட்டர் கே, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட், ஒளிப்பதிவாளர் விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி மற்றும் கலை இயக்குநர் கே.பி. நந்து ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 


இந்தப் பாடல் மூலம் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் இசை புரமோஷன் மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளது.இதன் மூலம், விறுவிறுப்பும் உற்சாகமும் நிறைந்த சுவாரஸ்யமான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் தரவிருக்கிறது.

 

நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


படம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளனர். விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்கள் ஊக்கமளித்தாலும், ஒரு திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் என்று நம்புகிறேன்”.


தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.


இப்படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக அல்பி ஆண்டனி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளராக ஸ்ரீஜித் சாரங் மற்றும் ஒலி வடிவமைப்பாளராக தபஸ் நாயக் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், இந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது.


குறிப்பாக, வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு உறவை மையப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் இணைத்து இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லரில் தெரிய வருகிறது. டிரெய்லரைப் பார்த்தவுடனேயே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.


இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து கிரண் ஜோசி கதையை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பான கலைஞர்கள் கூட்டணி இப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பாவனா ஸ்டூடியோஸ் (Bhavana Studios) தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் Future RunUp Films வழங்கி விநியோகிக்கிறது. Primark Productions நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.  மலையாளத்தில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழ் ரசிகர்களிடமும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


காதல், நகைச்சுவை, உணர்வுகள் என ஒரு வித்தியாசமான உறவின் பல பரிமாணங்களை பேசும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் 'கிங் 100 - KING 100' திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.


'உதயம்' , 'இதயத்தை திருடாதே', 'தோழா' 'குபேரா', 'கூலி' திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா... அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர்


நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் தயாராகி வரும் 'கிங் 100- KING100' திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன்எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ்... படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது. அத்துடன் ர.கார்த்திக்  நாகார்ஜுனா கூட்டணி மிகப் பெரும் சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது.


படைப்பாளுமை மிக்க இயக்குநர் ரா. கார்த்தியின் கற்பனையில் உருவான 'கிங் 100 - KING 100' படத்தின் பிரத்யேக காணொளியில்.. நாகார்ஜுனாவின் திரை தோற்றம்- திரை ஆளுமை - திரை பங்களிப்பு - என அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருப்பதால், நாகார்ஜுனாவின் ரசிகர்கள் இதனை பிறந்தநாள் பரிசாக கொண்டாடி, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


இயக்குநர் ர. கார்த்திக், நாகார்ஜுனாவிற்காக அதிலும் அவருடைய நூறாவது திரைப்படத்திற்காக உருவாக்கி இருக்கும் காட்சி அமைப்புகள்- உரையாடல்கள்- அனைத்தும் பிரம்மாண்டமானதாகவும், ரசிகர்களுக்கு பிரமிக்கத்தக்க வகையிலான திரையரங்க அனுபவத்தை வழங்குவதாலும். இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.


நடிகர்,:

நாகார்ஜுனா


தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : ர.கார்த்திக்

தயாரிப்பு நிறுவனம் : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர் :  அக்கினேனி குடும்பம்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : ராஜா மகாதேவன்

தயாரிப்பு வடிவமைப்பாளர் : என். சதீஸ் குமார்

படத்தொகுப்பு :  நவீன் நூலி

கிரியேட்டிவ் புரொடியுசர்: பிரசாத் நிம்மகாயலா

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

மலையாளத் திரைப்படங்களை கேரளாவுக்கு அப்பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், (Future Runup )  ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் விநியோகத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்திய இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படம் அமைந்தது. தொடர்ந்து ஷேன் நிகம் நடித்த ‘பல்டி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டு தனது விநியோகப் பணியை வலுப்படுத்தியது.


கடந்த ஓணம் பண்டிகையையொட்டி துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜிதின் K. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘களம்காவல்’ திரைப்படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிட்டது. இந்த இரு படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு, நிறுவனத்தின் விநியோகப் பயணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.


இந்நிலையில், இந்த ஓணம் பண்டிகையில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. கிரிஷ் A.D. இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன. இப்படத்தை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.


இதன் மூலம், கேரளத்திற்கு வெளியே மலையாளத் திரைப்படங்களை விநியோகம் செய்வதில் ‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எனத் தொடர் வெற்றிகளைப் பெற்று ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி, தரமான திரைப்படங்களை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


மலையாள சினிமா கேரள எல்லைகளைத் தாண்டி இந்திய அளவில் தனது வரவேற்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் மலையாளத் திரைப்படங்களுக்கான தேசிய அளவிலான விநியோகத் துறையில் வளர்ந்து வரும் முக்கிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

 

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில், இன்னமும் போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு நடக்கும் சட்டவிரோத அபின் (Opium) வர்த்தகத்தை மொத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு ராயா (யாஷ்) மற்றும் அவரது சகோதரி கங்கா (நயன்தாரா) ஆகியோர் களம் இறங்குகிறார்கள். கோவாவின் டான் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா), சர்க்கஸ் கலைஞர் நாடியா (கியாரா அத்வானி) எனப் பல கதாபாத்திரங்களுக்கு இடையே ராயாவின் கேங்க்ஸ்டர் வாழ்க்கையும், அவரது ஆக்ஷன் சாகசங்களும் எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


யாஷ் தனது அசாத்தியமான ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் இரட்டை வேட நடிப்பால் (Dual Role) ரசிகர்களைக் கவர்கிறார். அவரது ஸ்டைல், துப்பாக்கிச் சண்டை காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. படத்தில் எங்கு திரும்பினாலும் நாயகிகள் பட்டாளம் தான். அதில் அதீத முக்கியத்துவம் நயன்தாராவுக்கு தான். ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் அக்காவாக வந்து ஓரளவு மனதில் நிற்கிறார். சர்க்கஸ் கலைஞராக வந்து கியாரா அத்வானி அவருடைய கவர்ச்சி மற்றும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.


ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் தியேட்டர் அனுபவத்தைக் கூட்டுகின்றன.


சர்க்கஸ் ஃபைட் சீன் மற்றும் இடைவேளைக்குப் பின் வரும் சில ஆக்ஷன் பிளாக்குகள் சிறப்பாகக் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் கிராஃபிக் நாவல் போன்ற உலகத்தை (Stylised Graphic World) இயக்குநர் கீது மோகன்தாஸ் மிக நேர்த்தியாகவும், விஷுவலாகவும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார். ‘டாக்ஸிக்’ யாஷின் மாஸ் அவதாரத்தையும், பிரம்மாண்டமான ஆக்ஷன்காட்சிகளையும், ஹாலிவுட் தர மேக்கிங்கையும் திரையரங்கில் ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து. 

 

கல்லூரி கால காதல் தோல்வி மற்றும் கடந்த கால ஏமாற்றங்களின் (Trauma) வடுவோடு, இறுக்கமான மனநிலையுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு சிவில் என்ஜினீயர் ரகு (அர்ஜுன் தாஸ்). பல வருடங்களுக்குப் பிறகு அவரை தற்செயலாகச் சந்திக்கும் அஞ்சலி (அதிதி ஷங்கர்), பார்த்த வேகத்திலேயே தன் காதலை வெளிப்படுத்துகிறார். முதலில் ரகு அதை மறுத்தாலும், அஞ்சலி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். கடந்த காலத் துயரங்களை மறந்து, ரகு தன் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை (Once More) காதலுக்கு இடம் கொடுத்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மையக்கதை.


அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான காந்தக் குரலாலும், கடந்த கால வலியால் தவிக்கும் எமோஷனல் நடிப்பாலும் ரகு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். துள்ளலான, வாயாடிப் பெண் கதாபாத்திரத்தில் அதிதி ஷங்கர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது மிகச்சிறந்த நடிப்பு.


ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, மணி ரத்னம் - கௌதம் மேனன் படங்களின் உணர்வைத் தருகிறது.


இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். ஒரு அழகான காதல் கதையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்துவமாக எழுதி ஒரு புத்துணர்ச்சியான படத்தை தந்திருக்கிறார். பழக்கப்பட்ட ஒரு காதல் கதைக்களமாக இருந்தாலும், நல்ல இசை, துடிப்பான முதல் பாதி மற்றும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கரின் சிறப்பான நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.

 

பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு ஓடிவந்து சென்னைக்கு வருகிறார் தேவயானி (நயன்தாரா). அங்கு அவருக்கு கோயம்புத்தூர் கொங்குத் தமிழ் பேசும் மயில்சாமி (கவின்) அறிமுகமாகிறார். மயில்சாமிக்கு தேவயானி மீது காதல் மலர்கிறது. ஆனால், தேவயானியோ காதலின் மீது நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். இதற்கிடையில், இவர்களைத் தேடி இருவீட்டு குடும்பத்தினரும் சென்னைக்கு வர, சூழ்நிலை காரணமாக இருவரும் கணவன்-மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த பொய்யைச் சமாளிக்க அவர்கள் செய்யும் அடுத்தடுத்த குளறுபடிகள் தான் படத்தின் மீதிக்கதை.


 கவின் தனது வழக்கமான குறும்புத்தனம் மற்றும் இயல்பான நகைச்சுவை உடல்மொழியால் மயில்சாமி கதாபாத்திரத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளார். சீரியஸான கதாபாத்திரங்களுக்குப் பிறகு, நயன்தாராவுக்கு இது ஒரு துறுதுறுப்பான, அதேசமயம் முதிர்ச்சியான வேடம். இருவருக்குள்ளான காட்சிகள் கியூட்டாக இருக்கின்றன. கே. பாக்யராஜ், பிரபு மற்றும் ராதிகா சரத்குமார் பங்களிப்பு படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாகப் பிரபுவின் எமோஷனல் டிராக் மற்றும் பாக்யராஜின் காமெடி ரசிக்க வைக்கின்றன.


ஜென் மார்ட்டினின் இசையில் 'ரசகுல்லா' பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு இதம் சேர்க்கின்றன. ராஜேஷ் சுக்லாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு படத்திற்குப் பிரகாசமான தோற்றத்தைத் தந்துள்ளது.


இயக்குனர் விஷ்ணு எடவன் எளிமையான காதல் கதையை எழுதி அதை திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். காதல், குடும்ப உறவுகளின் உன்னதம் என பல காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஒரு எளிமையான கதை என்றாலும், குடும்பத்துடன் சென்று ஜாலியாகச் சிரித்து ரசிக்கக்கூடிய ஒரு சுவாரசியமான பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்துள்ளது.


Mumbai, August 28, 2026:

The much-awaited title and motion poster of Original Monster were unveiled at a special event in Mumbai on August 28, marking the official introduction of the highly anticipated film to audiences beyond its home industry and setting the stage for its pan-Indian journey.

The event brought together the film’s principal members along with some of the most respected names from the Indian film industry. The occasion was graced by Director R. Chandru, renowned producer and presenter Mr. Anand Pandit, Pan-India Superstar Dr. Shivarajkumar, Smt. Geetha Shivarajkumar, popular actor Sunil, music director Ajaneesh Loknath and cinematographer AJ Shetty, making it a memorable evening for the entire Original Monster team.

The much-awaited motion poster was officially launched in the presence of Dr. Shivarajkumar, R. Chandru, Anand Pandit, Geetha Shivarajkumar and the film’s core team, marking the first time the title Original Monster was presented to the audience.

The launch received an enthusiastic response from the gathering, with the event turning into a celebration of the film’s powerful collaboration and creative vision. The presence of acclaimed talents such as Sunil, Ajaneesh Loknath and AJ Shetty further reflected the diverse and accomplished creative team behind the project.

The Mumbai event concluded on a highly positive note, with the title and motion poster receiving strong appreciation from the media, guests and members of the film fraternity present at the occasion.

With its title and motion poster now unveiled, Original Monster embarks on the next phase of its promotional journey, building anticipation among audiences across India. The Mumbai launch marks an important milestone as the film takes its first major step towards establishing its presence on the pan-Indian stage.

🔗 https://youtu.be/bfrZLRxsink


 முருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக வரக்கூடிய 'முருகர் யுகம் பிறந்தாச்சி ' பக்திப்பாடல்!


முதல் முதலாக உலகில் உள்ள இசை ரசிகர்கள், முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு பாடல் உருவாகி உள்ளது. அதுதான் 'முருகர் யுகம் பிறந்தாச்சி ' பக்திப் பாடல். இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான திவோ மியூசிக் (divo Music) நிறுவனம் வெளியிடுகிறது.


இந்தப் பாடலை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே. கோபி உருவாக்கியுள்ளார்.இவர் அரசியலிலிருந்து விலகி ஆன்மீகத்திற்குள் நுழைந்து முழுக்க முருக பக்தராக மாறி 'முருகனருட்செல்வர்' என்ற சிறப்புடன் பக்தி மார்க்கத்தில் செயல்பட்டு வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு முருக பக்தராக ,முருகன் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

இப்போது உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்களுக்காக தனது ஆராய்ச்சியின் விளைவாக மலர்ந்த அந்த முருகர் ஆராய்ச்சிப் பாடலை உருவாக்கி உள்ளார். அந்தப் பாடலை தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரரான வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்.

தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற வைக்கம் விஜயலட்சுமி பாடும் முதல் பக்திப் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல பிரபல திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.


"பிறைசூடன் என்பது சிவனைக் குறிக்கும் சிவனது மகன் முருகன். அவ்வகையில் கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பது அந்த முருகனே அமைத்தது போல் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது" என்கிறார்கள் தயாரிப்புக் குழுவினர்.


இமயம் முதல் குமரி வரை முருக வழிபாடு இருந்திருக்கிறது என்பதை இந்தப் பாடலின் வரிகள் கூறுகின்றன.

இதில் பல திரைப்படங்களில் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர் . 


இந்தப் பாடல் முயற்சி பற்றி ஜெயம் எஸ். கே. கோபி பேசும் போது,


 "இந்தப் பாடலை நான் உருவாக்கவில்லை அது முருகன் எனக்குள் இட்ட ஆணை மூலம் உருவாகியுள்ளது என்று தான் கூற வேண்டும்.என்னை வழிநடத்தியது அந்த முருகன் தான். இந்த பாடல் உலகில் உள்ள முருக பக்தர்களுக்காக உருவாகியு ள்ளது. ஒரு முருக பக்தைக்கும் முருகனுக்கும் நிகழும் உரையாடல் போல இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்களுக்குச் சமர்ப்பணம்" என்று கூறியுள்ளார்.


இந்தப் பாடலுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் உலகில் உள்ள எல்லா முருக பக்தர்களும் இந்தப் பாடலைக் காப்புரிமை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.  


இந்தப் பாடல் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

Pageviews