The event is being organised with the support and encouragement of our respected Secretary, Mr. A. V. M. K. Shanmugam, and will commence with the Welcome Address by our Principal, Dr. N. Bhuma.


The conclave is envisioned by its Conclave Directors, Mr. Balasubramaniam M, GCC Leader, CEO, Board Member, Investor, StratInfinity – AI First GCC Enabler, and Mr. Ramkumar N, Director, ITWare LLC, Dubai and Professor of Practice, Avichi College of Arts & Science.


The Inaugural Session will be graced by Amb. T. S. Tirumurti, Professor, IIT Madras; Former Ambassador of India to the United Nations, New York; and Former Secretary to the Government of India, as the Guest of Honour, along with the Conclave Director’s Address by Mr. Balasubramaniam M.


The conclave will feature a series of keynote addresses, expert panels and interactive sessions. Mr. Mahesh Ramachandran will deliver the Keynote Address on “The Confluence of AI + FinTech – From Digital Finance to Intelligent Finance,” followed by Mr. Lenin Velu, who will deliver a Keynote Address on “Trust First.”


The Expert Panel – “Future of Banking Beyond Branches” will be moderated by Mr. Jubran Siddique, TEDx Speaker, United Nations, and CEO & Founder, Zaryah Angels Pvt. Ltd., with panellists Mr. Vetrivelan AB, Partner, Big 4; Mr. Gobinath Padmanadhan, Founder & CEO, Yosaney Fintech Pvt. Ltd.; and Mr. Srinivas Lingam, CEO, Centrico.


An Expert Address on “From Job Seekers to FinTech Innovators: Building Startups in the Age of AI” will be delivered by Mr. Ghanshyam Ahuja, Group CEO, VC VSaas Global.


A Fireside Conversation titled “The New SUNAMY of AI – Age of Innovative Quantum Computing Era” will feature Mr. Kannappan Chetiar, Founder, Sunamy.AI, in conversation with Mr. Ramkumar N.


The Expert Panel – “AI & FinTech – The Autonomous Finance Era” will be moderated by Ms. Sangeetha B, Founder & CEO, ThinkInfinity, with panellists Mr. Nathan, CISO, Equitas Bank; Mr. Avinash Karn, Senior Director – AI, PayPal; Mr. Sathyanarayanan Chandrasekaran, CISO, Sundaram Home Finance Ltd.; and Mr. Venugopal, CISO, Cholamandalam.


The Future Leaders Fireside Chat will feature Mr. Vijay, Founder, GoldPE.AI, moderated by Ms. Shangamithra, III B.Sc.


A TEDx-style Session on “Unified Platform from India to the World – Reimagining the $1.3 Trillion Global Money Movement Economy” will be delivered by Mr. Uthayashankar, CTO, Finaara.


The Expert Panel – “Digital Public Infrastructure – India’s Secret Weapon” will feature Ms. Shakila Banu, AGM, RBI; Mr. Balasubramiam, DPO, TMB; and Mr. Ayyappan, Partner, Big 4, with Mr. Ramkumar, StratInfinity, as moderator.


The conclave culminated with a Valedictory Ceremony, graced by Mr. Srikanth V, CEO, ICT Academy, as the Chief Guest. The ceremony featured an insightful Chief Guest Address, the Conclave Summary by the Conclave Director, Mr. Ramkumar, and the Closing Remarks by the Secretary, Mr. AVM K. Shanmugam.


The conclave will provide students with valuable exposure to emerging opportunities in FinTech, Artificial Intelligence, Data Science, Banking, Cybersecurity and Digital Entrepreneurship, while creating meaningful interaction between academia and industry.


As the first edition of a five-year journey, FINTECH 2030 seeks to inspire the next generation to Learn • Connect • Innovate • Collaborate and contribute to India’s vision of a secure, inclusive and trusted digital financial future.


FINTECH 2030 – Where Banking, Technology, Innovation, Entrepreneurship and Talent converge.

 

நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி.. 

நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், 

குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு.. 

தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.. 

அடுத்த கட்ட பயணம்.. 

நான் சரி எனில் நீ தவறா... இல்லை..  இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை.... 

பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா.. 

இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா?.. 

எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு.. இல்லை பல பக்கங்கள் இருக்கு.. 

ஆம் இது உங்களுக்கான மேடை.. 

உங்களின் பார்வையை பேசுங்கள்..  உங்களுக்கான தெளிவை எடுத்துச்செல்லுங்கள்.. 

நான் கூப்பிடுவது மக்களை.. 

அவர்களோடு பேச.. 

அவர்களை பேச வைக்க.. 

வாங்க பேசலாம்.

 

Buddhi Clinic invites members of the press to attend the concluding public session of the Second National Workshop on Integrative Mental Health, taking place on Friday, 21 August 2026, from 2:00 to 4:30 PM at Buddhi Mantra, Chennai.

The session brings together distinguished clinicians, scientists, educators and thought leaders from across India for a wider public conversation on the future of mental healthcare. Over the course of the two-day workshop, participants representing psychiatry, neuroscience, integrative medicine, Ayurveda, Yoga, community and maternal mental health, and healthcare technology have explored a central question: how can healthcare move beyond treating mental illness to caring for the whole person?

From Discussion to Direction


The concluding public session will translate these deliberations into a broader conversation for clinicians, families, policymakers and the wider community. Faculty members will share their reflections on the workshop and articulate their vision for Whole-Person Mental Health in India, followed by an open forum and media interaction.


The discussion is intended to help shape clearer and more meaningful public-health messages around mental health—messages that recognise the complexity of the individual and the need to consider multiple dimensions of care rather than viewing mental health through a single clinical lens.


Launch of “Beyond Medication: Whole Person Care”


The event will also mark the release of Beyond Medication: Whole Person Care, the fourth volume in The Buddhi Book series by Dr. Ennapadam S. Krishnamoorthy.


The book examines the philosophy and practice of whole-person care through the perspectives of neuroscience, psychiatry, rehabilitation and technology, while also considering the thoughtful integration of diverse healing traditions. It reflects the broader direction of the workshop: building a more integrated understanding of mental health that brings clinical science, human context and complementary approaches into considered dialogue.


Media Interaction


Members of the media will have the opportunity to attend the session, interact with members of the faculty and engage with the ideas emerging from the national workshop. The interaction is intended to provide journalists with direct access to experts contributing to the evolving conversation on integrative and whole-person mental healthcare in India.


MEDIA CONTACT

RSVP

care@buddhiclinic.com


 

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.


இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முயற்சி. இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த தொகையும் ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும். 


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யுவர்பேக்கர்ஸ் பிளே ஓடிடி துவக்க விழா தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கும் மனிதம், வி3, கோட்டா, மெல்லிசை, தாவுத், ஓ பட்டர்ஃபிளை போன்ற திரைப்படங்களின் டிரைலரும் திரையிடப்பட்டது.


இந்த நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசும்போது,


 “இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் துவக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. பாண்டிச்சேரியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டோம். கடலுக்குள் சென்று கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம். மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்கள் கூட எங்கள் சேவையை குறித்து பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறோம். 


சினிமாவை பொறுத்தவரை விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை நாங்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் வினியோகம் செய்தோம். தொடர்ந்து இன்ஃபினிட்டி, கழுமரம் போன்ற படங்களையும், அதனைத் தொடர்ந்து மனிதம் படத்தையும் தயாரித்தோம்.


ஓடிடியிலும் மக்கள் பெரிய படங்களையே பார்க்க விரும்புகிறார்கள், முன் வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஓடிடியின் மூலம் சின்ன படங்களை பார்க்க வைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாக படத்தை பார்க்கலாம். இம்பாக்ட் டிக்கெட் என்ற ஆப்ஷன் உண்டு, அதில் பயனர்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அந்த தொகையிலும் பெரும்பகுதி சமூக சேவைக்கு தான் செல்கிறது. மீதம் உள்ள ஒரு பங்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த ஓடிடியில் இன்னொரு SOS சிறப்பு அம்சமும் உண்டு. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களையும் தடுக்கும் ஒரு முயற்சி. மேலும் AI மூலம் திரைப்படங்களையும் உருவாக்க இருக்கிறோம். இது அடுத்த கட்டமாக செயல்பாட்டுக்கு வரும்.


அவுட் ரைட் முறையிலும், ஷேர் முறையிலும் படத்தை வாங்கி இந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறோம். இந்த ஓடிடியின் வளர்ச்சி பல சிறிய படங்களுக்கு நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் நம் கடமையை செய்து வந்தால் நாம் எதிர்பாராத நல்லது நமக்கு நடக்கும். ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.


FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,


 “ஓடிடியும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓடிடி வந்தது. இப்போது ஓடிடி சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. முன்பு போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் இப்போது படம் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள் தான் ரிலீஸ் தேதியையே முடிவு செய்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோவும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாது. அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. 


தமிழில் ஒரு ஓடிடி நிறுவனம் துவங்கியது மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு நான் வருவதற்கு ஒரு முக்கியமான சுய நல காரணமும் உண்டு. இந்த லாபத்தில் 20% தொழிலாளர்களுக்கு தரப் போகிறேன் என கிஷோர் உறுதி அளித்திருக்கிறார். நல்ல தரமான படங்களை வாங்கி ரசிகர்களுக்கு தாருங்கள். அப்போது தான் நிறைய ரசிகர்கள் உங்களை நம்பி வருவார்கள். 


ஒரு திரைப்படம் வெற்றி அடையலாம் அல்லது தோல்வி அடையலாம். ஆனால் தற்போது நிறைய குப்பையான படங்கள் வெளி வருகின்றன. அப்படி இருக்கும் சூழலில் நல்ல படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுங்கள். தமிழ் சினிமாவில் சுமார் 1000 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதில் நிச்சயம் ஒரு 200 நல்ல படங்களாவது இருக்கும். அதை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்றார்.


நடிகர் எஸ்.வீ.சேகர் பேசும்போது, 


“வழக்கமாக சில விழாக்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் வந்து சம்பந்தம் இல்லாதவற்றை பேசி அது பேசுபொருளாகி விடுகிறது. விழாவின் நோக்கம் மறைந்து விடுகிறது. அப்படி இல்லாமல் இந்த விழாவுக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுகிறேன். 6 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த ஃபவுண்டேஷன் தறபோது லாப நோக்கமற்ற ஓடிடி தளத்தை துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஓடிடியில் கஜானா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வெள்ளை அறிக்கையும் விடுகிறார்கள். பணம் போடுபவர்களுக்கு திரும்ப பணம் வந்தால் தான் அது பிஸினஸ். உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. நல்ல தொழிலாகவும் இது அமைய வேண்டும். நீங்கள் இலவசமாக தருகிறீர்கள் என்பதாலேயே மக்கள் உங்கள் கண்டெண்டை பார்க்க மாட்டார்கள். தரம் மிகவும் முக்கியம், அதற்கேற்ப நல்ல நல்ல கண்டெண்டை பார்த்து வாங்குங்கள். ஓடிடி என்றாலே ஒரு சில முன்னணி நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகிறது. அதை தாண்டி ஜெயிக்க வேண்டும். நல்ல அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்களின் ரசனைகளை புரிந்து கொண்டு படங்களை எடுங்கள். நீங்கள் செய்யும் சேவையே உங்களை காப்பாற்றும்” என்றார்.


நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,


 “ஓடிடி என்றாலே பண முதலைகளின் கோட்டை. உலகில் எங்கு சென்றாலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒரு ஓடிடி வேண்டுமென்றால் அதற்கு அரசு தான் ஏதாவது முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இதுவரை அப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நெட்ஃபிளிக்ஸில், அமேசானில் லட்சக்கணக்கான படங்கள் இருக்கின்றன. அனாலும் அதில் எல்லாவற்றையும் நாம் பார்ப்பதில்லை, தேர்வு செய்து தான் பார்க்கிறோம். அது போல தான் மக்களும் தேர்வு செய்து தான் படங்களை பார்ப்பார்கள். அதனால் புதுப்புது கண்டெண்டை கொடுக்க முயற்சி செய்யுங்கள். இளைஞர்களின் கற்பனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களை நல்ல உயரத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார்.


நடிகர் மைம் கோபி பேசும்போது,


 “நான் நடிப்பு சொல்லிக் கொடுக்க தான் கிஷோர் சாரிடம் வந்தேன். அவர் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவார். அவர் ஒரு கடும் உழைப்பாளி. எப்போது தூங்குவார் என்பது கூட தெரியவில்லை. திடீரென ஒரு நாள் அவருக்கு நடிக்க வந்த வாய்ப்பை தூக்கி எனக்கு கொடுத்தார். அந்த படத்தில் தான் நான் நடிக்கிறேன். எங்கோ எவரோ ஆரம்பித்த விஷயத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். முதல் அடியை நாம் என்று எடுத்து வைக்கிறோமோ அன்று தான் சாதனை ஆகிறது. நல்ல ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார். 


தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,


 “பணம் சம்பாதிக்க தான் எல்லோரும் சினிமாவுக்கு வருகிறோம். ஆனால் அப்படி பணம் சம்பாதித்து சேர்த்து வைக்காமல் லாப நோக்கமற்ற ஒரு சேவையை செய்ய முன்வந்திருக்கும் கிஷோர் சாருக்கு வாழ்த்துக்கள். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான தேவை. நல்ல நோக்கத்திற்கு நன்றி” என்றார்.


நடிகர் யூகி சேது பேசும்போது,


 “ஓடிடி என்பது எனக்கு புரியாத விஷயமாகவே இருக்கிறது. பஞ்ச தந்திரம் தியேட்டரில் சாதாரண வெற்றி தான். ஆனா ஓடிடியில் மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள். ரீல்ஸ் பார்த்து பழக்கப்பட்ட இன்றைய இணைய உலகில் எல்லாமே வேகமாக இருக்க வேண்டும் என கேட்கிறார்கள். சினிமா அழகியலே மாறி விட்டது. 100 மார்க் வாங்கினால் தான் பாஸ் என்ற சூழலும் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே ஓடிடி படங்களை வாங்குவதில்லை. இதில் 8 வாரங்கள் கழித்து தான் படங்களை வெளியிட வேண்டும் என்ற கண்டிஷனை எல்லாம் நாம் போட முடியாது. 


சினிமாவில் வெற்றி சதவீதம் எப்போதுமே 10 முதல் 20% தான் இருந்து வருகிறது. கருத்து சொல்ற படம் என்றால் நீங்களே வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது தான். ஜனரஞ்சகம் என்பது மிக முக்கியம். நல்ல படங்களை கொடுங்கள். சினிமா மட்டும் தான் என்ன ஏது என தெரியாமலே டிக்கெட் வாங்கி பார்ப்பார்கள். சினிமாவில் மட்டும் தான் ரீஃபண்ட் கிடையாது. இந்த ஓடிடி மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும்” என்றார்.


நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,


 “ஒரே தட்டில் சாப்பிட்டோம் என சொல்வார்கள், ஆனால் நானும் கிஷோர் சாரும் உண்மையிலேயே ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் தான். கிஷோர் சார் எவ்வளவோ பேருக்கு உதவிகளை செய்து வருபவர். அவரை ஒரு ஆண் அன்னை தெரஸா என்று கூட சொல்லலாம். அவர் ஆரம்பித்திருக்கும் இந்த ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.


இந்த நிகழ்வில் ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் யுவர்பேக்கர்ஸ் சி இ ஓ ஜான் ஜூலியஸ், இயக்குனர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்


ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். 
‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இவ்விழாவினில் திரைத்துறையிலிருந்து தயாரிப்பாளர் Fivestar கதிரேசன், Drumsticks Productions தயாரிப்பாளர் விவேக், Shanthi Talkies தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் H வினோத், நடிகர் நட்டி ஆகியோர், Stone Bench தயாரிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர். 

ஃபேமிலி ரோம் காம் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், Gen Z தலைமுறை, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு கலகலப்பான திரைக்கதையில் உருவாகிறது.

பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க வாழை படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பொன்வேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டோர் முக்கிய இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவை தீபக் மேற்கொள்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்பை கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுதுகிறார். அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

M. முகமது சுபியர் ஆடை வடிவமைப்பையும், ஷயத் மாலிக் S ஒப்பனைப் பணிகளையும் கவனிக்கின்றனர். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் உள்ளனர். விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.

கன்னதாசன் DKD விளம்பர வடிவமைப்பை மேற்கொள்கிறார். ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளை கவனிக்கிறார். சதீஷ் (AIM) மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தின் பூஜை விழா உற்சாகமாக நடைபெற்றது. இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

தனது பள்ளி காலத்திலேயே நடிப்பின்மீது ஆர்வம் கொண்டர் சுமித்ரா. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரம் ஏற்று பள்ளி மேடையில் நடித்தது, அவரது நடிப்புப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா பரதநாட்டியத்தில் தேர்ந்தவர். இந்த நடனப் பயிற்சி, முகபாவனைகள் மற்றும் உடல் மொழி ஆகியவை அவருக்கு இயல்பான ஆளுமையையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. 


’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்திற்கு தேவையான வசீகரம் மற்றும் அமைதியை தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார் சுமித்ரா,  நடிகைகள் நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போலவே சுமித்ராவின் மாநிற அழகும் தனித்திறமையும் திரையில் அவருக்கு கூடுதல் வசீகரத்தை கொடுத்துள்ளது. அதிகப்படியான அலங்காரம் தேவையில்லாமலேயே பார்வையாளர்களைக் கவரக்கூடிய மண் சார்ந்த தோற்றம் அவரிடம் உள்ளது.  அதேபோல, சுமித்ராவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பேசும் எளிய வசனங்கள்கூட அவரை தனித்து காட்டுகிறது. 


நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை தான் என்கிறார் சுமித்ரா. விஜய்யின் திரை வசீகரம், ஒழுக்கம் மற்றும் ரசிகர்களுடன் இணையும் திறன் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு விஜய் மிகப்பெரிய உத்வேகம் என்கிறார். அதேபோல், நடிகை தமன்னா பாட்டியாவின் நடனத்தையும் அவர் மிகவும் ரசிக்கிறார். 


ஒரே திரைப்படத்தில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை உருவாக்கி, உற்சாகமளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு சுமித்ரா நன்றி தெரிவித்துள்ளார். ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியிருப்பது தனது அதிர்ஷ்டம் என்கிறார். 


பள்ளி மாணவியாக கண்ணகி கதாபாத்திரத்தில் நடித்ததிலிருந்து ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் கீர்த்தியாக சுமித்ராவின் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அவரது மாநிற அழகு, முகபாவனைகள், நடனத் திறமை மற்றும்தமிழ் உச்சரிப்பு போன்றவை தமிழ் திரைத்துறைக்கு மற்றுமொரு திறமையான நடிகை கிடைத்துவிட்டதை சுட்டிக்காட்டுகிறது. 


‘மொத ராத்திரி’ திரைப்படத்தை ராஜா கருப்பசாமி இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில், சுமித்ரா தேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'.தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறார்கள்.இதனையே இந்தப் படத்திற்கான ஒரு தரச் சான்றிதழாகக் கருதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக்குழு.


இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.அந்தப் படமும் பட உருவாக்கத்தின் நேர்த்திக்காகப்  பேசப்பட்டது.


அவர் இரண்டாவதாக இயக்கியிருக்கும் இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில்

 பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.


கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,தென்காசி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.இந்தப் பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.


இப்படத்தின் கதை திரைக்கதை ஒரு பக்கம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதில் பங்களித்துள்ள நடிப்புக் கலைஞர்களின் பாத்திரச் சித்தரிப்புகளும்  பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும்.

பிக் பாஸ் புகழ் சித்து இதில் ஒரு புதிய பரிமாணத்தில் முகம் காட்டியிருக்கிறார்.கொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடத்தில் இவர் வருகிறார். அவருக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


இன்னொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷிகா இதில் சித்துவின் மனைவியாக ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். 


மற்றொரு பிக்பாஸ் முகமாகி இன்று பிரபல நடிகையாக இருக்கும் ரித்விகா இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.அவர் நடித்துள்ள பாத்திரம் யாரும் எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும்.


நிழல்கள் ரவி ,வேல ராமமூர்த்தி போன்ற அனுபவ நடிகர்களின் பங்களிப்பும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது.


படம் தொடங்கியது முதல் இறுதி வரை தொடரும் சஸ்பென்சையும் விறுவிறுப்பையும் படம் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

இது ரசிகர்களுக்கு ஒரு நல்லதொரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.


படத்தின் தரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு  உருவாக்கியதால் பொறுமையாகப் படத்தைச் செதுக்கி செதுக்கி முழுமையான செய்தொழில் நேர்த்தியுடன்  உருவாக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.


படத்தைப் பார்த்த திரை உலகப் பிரமுகர்கள் அனைவருமே இது ஒரு நம்பிக்கைக்குரிய படமாக மாறி இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள்.


இந்தப் படம் முன்பே வெளியாகியிருக்க வேண்டியது. 'ஜனநாயகன்' வெளிவந்ததால் வெளியீட்டுத்தேதி மாற்றி வைக்கப்பட்டது. எனவே வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் வெளிவர இருக்கிறது.


ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லர் அனுபவத்திற்குத் தயாராக இருங்கள்.

 

தண்டர் மீடியா  கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக  நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்  மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர்  நடித்துள்ளனர். சராஜ் சீலன்  இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். 


படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் அவர்கள் பேசும் போது, பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு நம்ம சமுதாயத்தில்  நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. படத்தின் இயக்குனர் என்னுடைய கணவர் 20 வருடமா முயற்சி செய்கிறார் ஆனா சூழ்நிலை அவருக்கு  இயக்குநராக விடல அது நான்தான். இந்தப் படத்துக்காகவும் நிறைய புக் ரிசர்ச் பண்ணி இருக்காரு. என்னுடைய கணவரை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு. 


படத்தின் இணை தயாரிப்பாளர் லிங்கேஸ்வரன் அவர்கள் பேசும் போது, சினிமாத்துறை எனக்கு புதுசு. இந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு இன்னொரு படம் எடுக்க ஆசையா இருக்க  காரணம் இந்த படத்தின் இயக்குனர் தான்.


படத்தின் கலை இயக்குனர் தாமு அவர்கள் பேசும் போது, 

இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குனருக்கு லைவ் விட செட்டு போட்டு பண்ணா தான் பிடிக்கும், எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க அதற்கு ரொம்ப நன்றி. 


படத்தின் எடிட்டர் சாபு அவர்கள் பேசும் போது, என்னோட உதவியாளர்  லோகேஷ், மற்றும் பிரகாஷ்க்கு என்னுடைய நன்றி. சரஜ் சீலன் முதல் பட இயக்குனர் மாதிரி தெரியல, எல்லாமே ரொம்ப சிறப்பா பண்ணிருந்தாரு, இயக்குனர் உடைய 20 வருட கனவு உண்மை ஆகி இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 


சிறப்பு விருந்தினர் இயக்குனர் மித்ரன் ஜவகர் அவர்கள் பேசும்போது, ஒரு டைரக்டருக்கு மனைவி ப்ரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம், குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். 


சிறப்பு விருந்தினர் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் அவர்கள் பேசும்போது, இயக்குனர் உடைய 23 வருட கனவு இது உண்மையாக்க ஒரு நேர்மை வேண்டும் அது அவர்கிட்ட இருக்கு, இந்தப் படத்தோட தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இது உண்மைக்கு நெருக்கமான படமா இருக்கும்னு நான் நம்புறேன். ஒரு படத்தின் எழுத்தும் ஒளிப்பதிவும் இருட்டிலிருந்து உருவாவது,  எழுத்தாளருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை வழி நடத்திப் போறவர்தான் இயக்குனர், டைரக்டர் ஒவ்வொரு படியா  போனாதான் அந்த வழி அவருக்கு தெரியும், கடவுளின் பார்வையில் பார்க்க வேண்டும். நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தான் ஒரு நீளமான பயணமும் அனுபவமும்  கிடைக்கும். 


படத்தில் நடித்த நடிகை நயன சாய் பேசும்போது," இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு என்னுடைய முதல் நன்றி. என்னுடைய அம்மா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்காங்க அதற்கு ரொம்ப நன்றி.  குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் அவர்களுடன் நடித்தது சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தது கோ டைரக்டர் சாமி அண்ணா அவர்களுக்கு ரொம்ப நன்றி . இசையமைப்பாளருக்கும் என்னுடைய நன்றி. பிஆர்ஓ ரியாஸ் சார் மற்றும் பராஸ் நான் சென்னை முதல் முறை வந்ததிலிருந்து எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தார் அதற்கு என்னுடைய நன்றி. இந்த படத்தை தியேட்டர்ல பார்த்து எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க கடவுள்கிட்டயும் நான் வேண்டிக்கிறேன்.


படத்தில் நடித்த நடிகர் விஜய் விஸ்வா அவர்கள் பேசும்போது, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய நன்றி அதற்கு காரணமாக சாமி அண்ணனுக்கும் நன்றி. சமீபத்தில் நான் அமெரிக்கா போயிருந்தப்போ தமிழ் சங்கம் மேடையில அமைச்சர் ராஜ்மோகன் இருந்தாரு அந்த விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன் அவருடைய அனுமதி ஓட ஒரு பாடலை போட்டோம் அது என்னுடைய பாட்டு அதற்கு கே தான் இசை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ரெண்டு யுனிவர்சிட்டி கூட எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒன்னு தமிழ்நாடு யுனிவர்சிட்டி இன்னொன்னு மலையாளம் யூனிவர்சிட்டி குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் கூட நடிச்சது நிறைய கத்துக்கிட்டேன் இவங்க கிட்ட இருந்து அதற்கு என்னுடைய நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுதல் .  நிறைய சின்ன படங்கள் வருது அதற்கு சரியான அங்கீகாரம் இல்லை அரசாங்கம் மூலமா ஒரு ஓடிடி தளம் தொடங்கினால் அது எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும் இது என்னுடைய வேண்டுகோள். இந்த படம் சொசைட்டிக்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கு எல்லாரும் இந்த படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க.


படத்தில் நடித்த நடிகர் பிபின் அவர்கள் பேசும்போது, இந்தப் படம் நான் நடிச்சதிலேயே ரொம்ப வித்தியாசமான படம், இந்தப் படத்தினுடைய கதை ரொம்ப நேர்த்தியானது. குரு சோமசுந்தரம் அனுமோல் உங்க கூட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லோருக்கும் நன்றி. 


படத்தில் நடித்த நடிகர் சாய் விக்கி அவர்கள் பேசும்போது,   இது என்னுடைய முதல் மேடை, நான் சின்ன சின்ன கேரக்டர் பண்ணி இருக்கேன் ஆனா இந்த படத்துல எனக்கு ஒரு பேர் எல்லாம் கொடுத்து படம் முழுக்க டிராவல் பண்ணி இருக்கேன் அது சந்தோஷமா இருக்கு. ஏழு வருஷமா முயற்சி செஞ்சிட்டு இருக்கேன் இயக்குனர் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கார். எல்லாரையும் நான் குறிப்பிட்ட சொல்லல ஆனா ஒரு சிலர் இன்ஸ்டாகிராம் மூலமா தான் படம் வாய்ப்பு தர்றாங்க ஆனா இந்த இயக்குனர் அதையெல்லாம் பார்க்காமல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படம் ஒரு முக்கியமான கருத்தை சொல்லுது, ஒரு ஸ்ட்ராங்கான விஷயத்தை ரொம்ப மென்மையா சொல்லக்கூடிய படம். இசையமைப்பாளர் கே அவர்களுடைய இசை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய இசையில் நான் நடிச்சதும் எனக்கு சந்தோஷமா இருக்கு. குரு சோமசுந்தரம் மாதிரி ஒரு நடிகர் யாருமே இல்லை ஜோக்கர் படத்தில் இருந்து நான் அவரை பாலோ பண்றேன். அனுமோல் உங்க கூட நடிச்சதும் சந்தோசமா இருக்கு. கௌசல்யா அவர்களுக்கு நடந்தது மத்தவங்கள விட ரொம்ப மோசமானது அதிலிருந்து அவங்க மீண்டு  வந்து இருக்காங்க அவங்களுக்கு வீரவணக்கம் தான் சொல்லணும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கூட கொலை பண்ணது கிடையாது ஆனால் காதல் பண்ணா இங்க ஆணவ படுகொலை பண்றாங்க அந்த சொசைட்டில நம்ம இருக்கோம், இது மாறனும் அதுக்கான படம் தான் பாரிஸ் கஃபே. 


படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா அவர்கள் பேசும்போது, இது என்னுடைய மூன்றாவது படம், என்னுடைய பத்து வருட உழைப்பு. சின்ன வயசுல நிறைய பாடிஷேம் பண்ணி இருக்காங்க ஆனா இப்போ கேமராவில் என்ன பார்க்கும்போது எனக்கே அழகா தெரியுது அதற்கு ஒளிப்பதிவாளருக்கு நன்றி. இயக்குனர் இந்த படத்தோட கதையை ஒவ்வொரு லைனும் மைண்ட்லயே வச்சிருப்பாரு. குரு சோமசுந்தரம் நடிக்கிற எல்லாத்தையும் ரசிக்கலாம். அனுமோல் அவர்களுடைய கண்ணு அப்படியே நடிக்கும். கே " உங்களுடைய மியூசிக் ரொம்ப அழகா இருக்கு". இது ரொம்ப அழகான கதை இந்த சமுதாயத்திற்கு தேவையான படம். 


படத்தில் நடித்த நடிகர் மற்றும் ப்ரொடியூசர் கணேஷ் அவர்கள் பேசும்போது, என்னுடைய போட்டோ பார்த்து தேர்ந்தெடுத்தேனு சொன்னாரு எனக்கு இந்த கதை ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு இந்த டீமை ஒரு பாசிட்டிவான எனர்ஜி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு மீனிங் இருக்கும் இந்தப் படத்தில் நடிச்சது சந்தோஷமா இருக்கு. 


படத்தில் நடித்த நடிகை அனுமோல் அவர்கள் பேசும்போது, எல்லோருக்கும் வணக்கம் இந்தப் படம் ரொம்ப முக்கியமான படம், நான் நடிக்கும் படங்கள் சமுதாயத்திற்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குனர் கூட பேசும் போது ஒரு கான்ஃபிடன்ட் இருந்துச்சு அதனால தான் இந்த படம் நான் நடித்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லார் கூடையும் நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கே இசையமைப்பாளர் அவருடைய தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்துச்சு எனக்கு அவரு மேல கோபம் நான் அழகா இல்ல என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்கங்கன்னு என்கிட்டயே சொல்றாரு இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான், இவர் மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு எல்லோரிடமும்  ஒரே மாதிரி தான்  பழகுவார் . இந்தப் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இது ஒரு சின்ன படம் இல்லை ரொம்ப முக்கியமான படம்.. 


படத்தின் இசையமைப்பாளர் கே அவர்கள் பேசும்பொழுது, வந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி. இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், நான் நல்ல படம் தேடிக்கிட்டு இருந்த அந்த டைம்ல இந்த படம் எனக்கு வந்துச்சு ரொம்ப நன்றி. படத்துல ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து ஒர்க் பண்ணி இருக்கோம். என்னோட  இந்த படத்துல பாடல் பாடிய எல்லாருக்கும் என்னுடைய நன்றி என்னுடைய டீமுக்கும் என்னுடைய நன்றி. 


படத்தில் நடித்த நடிகர் குரு சோமசுந்தரம் அவர்கள் பேசும்போது, அந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடிச்சு நான் ஒத்துக்கிட்டேன் இந்த படத்தை. நிறைய புது படத்தின் இயக்குனரின் மனைவி வேலைக்கு போவாங்க ஆனா இந்த படத்தோட இயக்குனரின் மனைவி இந்த படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட்  படம். அனுமோல் வேற ஒருத்தவங்கள அழகா இருக்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க அது அன்பான சண்டை. இந்த படத்துடைய எடிட்டருக்கு அவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கே என்னுடைய நன்றி. முக்கியமா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார் ரொம்ப கஷ்டமான ரோல் அத ரொம்ப நல்லா பண்ணி இவருக்கு  வாழ்த்துக்கள். கௌசல்யா அவர்கள் வந்ததுக்கு நன்றி பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது , கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்கூடாது நம்ம மாறினால்தான் எல்லாமே மாறும் இந்த படம் அதைப்பற்றி தான் பேசும். எல்லோருக்கும் ரொம்ப நன்றி. 


சிறப்பு விருந்தினர் கௌசல்யா சங்கர் அவர்கள் பேசும்பொழுது, இந்தப் படத்துல சிறப்பு விருந்தினரா என்ன ஏன் கூப்பிட்டாங்கன்னா சந்தேகம் இருந்தது, ஏன்னா எனக்கு களத்துல வேலை செய்யறது தான் என்னுடைய வேலை சினிமா எனக்கு தெரியாது ஆனால் இந்த படம் பார்த்ததும் எனக்கு புரிந்தது இது சமூகத்திற்கு ரொம்ப தேவையான படம். இந்த படத்தில் காதல் ரொம்ப இயல்பாக இருந்தது. ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி இருக்கணும் அதையும் இந்த படம் தெளிவா காட்டியது. தமிழ்நாட்டுல இப்பவும் பெண்களின் உரிமைக்காகவும் எல்லோருடைய உரிமைக்காகவும் நிறைய பேரு போராடுறாங்க அதனுடைய தொடர்ச்சி தான் இந்த படம். ஒரு பெண் மாறினால் அந்த சமூகம் மாறும் ஒரு பெண் இல்லாமல் எல்லோரும் மாறும்போது இந்த சமூகம் ஜாதியை கடந்து நிற்கும் அப்படின்றத இந்த படம் காட்டுச்சு. ஒரு பெண் தன்னுடைய இணையை எதை வைத்து தேர்ந்தெடுப்பது என்று தவறாக இருக்கும் பிற்போக்குத்தனத்தை இந்த படம் உடைத்திருக்கிறது. ஆணவ படுகொலைகள் தொடர்ச்சியா தமிழ்நாட்டுல நடந்துகிட்டு இருக்கு அதை பண்றது பெற்றோர்களாக இருக்காங்க, அதற்கு ஒரு மாற்றமா இந்த படம் இருக்கு. ஆணவ படுகொலைக்கு எதிரா தனிச்சட்டம் வேணும்னு அரசு கிட்ட கேட்டு இருக்கோம் அதற்கு இந்த படம் வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். குரு சோமசுந்தரம் ஒரு கதாபாத்திரமா நடிக்காமல் கதாபாத்திரமாக வாழ்கிறார். 


படத்தின் இயக்குனர் சராஜ் சீலன் அவர்கள் பேசும்போது, என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது, என்னுடைய அப்பா தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார், வாரம் தவறாமல் படங்களை பார்ப்போம், படிச்ச ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றிதான் அதிகமா பேசுவோம் சினிமாலாம் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா பாலச்சந்தர் பாலுமகேந்திரா பாக்கியராஜ் இவங்க தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்கள். நான் பாக்யராஜ் சார்-ஐ இந்த படத்துக்கு  கூப்பிடனும்னு நினைச்சா அவரு இப்ப இல்ல அது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க அப்பாக்கு கலைத்துறையில் ரொம்ப ஆர்வம் அவரும் மூலமா தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்து தான் கத்துக்கிட்டேன். ஒரு நிமிட ஷார்ட் பிலிம் என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன் அந்தப்படம் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதா மாறியது அதற்குப் பிறகு எல்லாமே சினிமா தான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம் கிட்ட முதல் முறை கதை சொன்னதும் அவர் ரொம்ப நல்லா இருக்கு நானே பண்றேன் என்று சொல்லிட்டார் அவர் கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி குரு சார். அனுமோல் கிட்ட போன்ல தான் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்து ஒத்துக்கிட்டாங்க அதற்கும் நன்றி. படத்துல நடிச்ச நடிகர் நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி. சாபு இந்த படத்துக்கு ஒரு முக்கியமான பில்லர் நான் சொன்னதை ரொம்ப அருமையா பண்ணி கொடுத்தார். கலை இயக்குனரின் உழைப்பு ரொம்ப முக்கியமானது அவருக்கும் என்னுடைய நன்றி. இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி. 


நடிகர்கள்

குரு சோமசுந்தரம்,

அனுமோல்,

அர்ச்சனா குமார்,

விஜய் விஷ்வா,

சாய் விக்கி,

நயனா சாய்.


தொழில்நுட்பக் குழு

எழுத்து & இயக்கம் – சராஜ் சீலன்

ஒளிப்பதிவு – சதீஷ் ஜி.

இசை – கே. கிருஷ்ணகுமார்

படத்தொகுப்பு – வி.ஜே. சபு ஜோசப்

கலை இயக்கம் – தாமு

பாடல்கள் – விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன்

நடன அமைப்பு – ஸ்ரீ கிருஷ், பிரசாந்த்

மேக்கப் – கார்த்திக் குமார் மற்றும் குழுவினர்

ஆடை வடிவமைப்பு – கே. பராஹுல்

தயாரிப்பு வடிவமைப்பு – லட்சுமி கிருஷ்ணலட்சுமி & சுப்ரியா டெசிரா

ஸ்டில்ஸ் – சிவா

ஒலி வடிவமைப்பு – ஹரி ஹரன்

ஒலி கலவை – சிவ் டெக் மெடி

லைன் புரொட்யூசர் – பாலிக் பார்ட்னர்ஸ் ஸ்டுடியோ

எக்ஸிக்யூட்டிவ் மேனேஜர் – மனோபாலா கண்ணன்

பி.ஆர்.ஓ – ரியாஸ் K  அஹ்மத், பாரஸ் ரியாஸ்

பப்ளிசிட்டி டிசைனர் – வி.எம். சிவக்குமார்

இணை இயக்குநர் – ஸ்வானி ராஜலிங்கம்

இணை இயக்குநர்கள் – என். சபீர், விக்னேஷ் விஜய ராஜ்

எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் – பி. சூர்யா பிரகாஷ்

கிரியேட்டிவ் புரொட்யூசர் – எழில் சத்யா

இணை தயாரிப்பாளர் – வெங்கல் எம். லிங்கேஸ்வரன்

தயாரிப்பாளர் – கண்மணி ரங்கநாதன்


விரைவில் திரைக்கு வரும் பாரிஸ் கபே.

 

மதிப்புமிகு தயாரிப்பு நிறுவனங்களான பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து  இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ திரைப்படமான “மஹாவீர் கர்ணா” படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ராட்சசன் மற்றும் கில்லாடி உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிபெற்ற, பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.


ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் காலத்தால் அழியாத கதாபாத்திரமான கர்ணனின் கதையை புதிய களத்தில் படைக்கிறார். “மஹாவீர் கர்ணா” மூலம், லைவ்-ஆக்ஷன் வடிவத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும், நவீன விஷுவல் எஃபெக்ட்ஸின் எல்லையற்ற சாத்தியங்களையும் ஒன்றிணைக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் முறையை அவர் பரிசோதிக்கிறார்.


கர்ணனை படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இந்த முயற்சியை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. கர்ணனின் கதை வெறும் புகழைத் தேடும் ஒரு வீரனின் கதை மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்கை அனைத்திற்கும் மேலாகக் கருதிய ஒரு மனிதனின் கதை. குந்திக்கு பிறந்தாலும், அரச குடும்ப அங்கீகாரத்திலிருந்து விலகி வளர்ந்த கர்ணன், நிராகரிப்பு, அடையாளம் மற்றும் விதி ஆகியவற்றுடன் தனது வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். இருந்தாலும், தான் தேர்ந்தெடுத்த மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது.


தான் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக எந்த விளைவையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்த கர்ணனின் உறுதியும், அவரது புகழ்பெற்ற கொடைத்தன்மையும், அவரது குணத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. தன் வார்த்தையை மீறுவதைவிட அதன் விளைவுகளை எதிர்கொள்வதையே விரும்பியவர் கர்ணன். இந்த சமரசமற்ற குணமே, மகாபாரதத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதாபாத்திரங்களில் ஒருவராக கர்ணனை மாற்றுகிறது. இதுவே “மஹாவீர் கர்ணா” படத்தின் உணர்வுப்பூர்வமான அடித்தளமாக அமைந்துள்ளது.


படத்தின் டீசர், கர்ணனின் இந்த முக்கியமான குணத்தை உடனடியாக பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. வீரர்கள், ராஜ்ஜியங்கள், ஆயுதங்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும் விஷயம், தான் கொடுத்த வாக்கில் உறுதியாக நிற்கும் ஒரு மனிதனின் இருப்புதான்.


கர்ணனை வெறும் புராணக் கதாபாத்திரமாகவோ அல்லது பிரம்மாண்டமான புராண திரைப்படமாகவோ அணுகாமல், கௌரவம், விசுவாசம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வுகளின் காவியமாக உருவாக்கியிருப்பதை டீசரின் காட்சியமைப்பு உணர்த்துகிறது.


இந்த ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் அணுகுமுறை, பிரம்மாண்டம், காட்சியமைப்பு மற்றும் சினிமா உலக உருவாக்கம் ஆகியவற்றில் இயக்குநர் ரமேஷ் வர்மா புதிய முயற்சிகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை அரிதாக முயற்சிக்கப்பட்டுள்ள இந்த அணுகுமுறை, படத்தின் காட்சியனுபவத்தை மேலும் பிரம்மாண்டமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படத்தின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பக் குழுவில், முன்னணி கிரியேட்டர் ராம்ஜி டாட் ஒளிப்பதிவாளராகவும், பிரவீன் புடி படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீமணி வசன எழுத்தாளராகவும், ஞானி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இதுவரையிலான படைப்புகளில் மிகவும் பிரம்மாண்டமான முயற்சியாக உருவாகி வரும் “மஹாவீர் கர்ணா”, இந்தியாவின் மிகச்சிறந்த காவியக் கதாபாத்திரங்களில் ஒருவரான கர்ணனை புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கான பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக மாற்றும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.


இப்படம் டிசம்பர் 4, 2026 அன்று உலகம் முழுவதும் பான் இந்தியா திரையரங்க வெளியீடாக வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு


இயக்கம்: ரமேஷ் வர்மா

வசனம்: ஸ்ரீமணி

இசை: ஞானி

ஒளிப்பதிவு: ராம்ஜி டாட் (ஹைப்ரிட் கிரியேட்டர்)

படத்தொகுப்பு: பிரவீன் புடி

கலை இயக்கம்: காந்தி நாடுகுடிகர்

தயாரிப்பு நிறுவனங்கள்: பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ்

 

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கத்திற்கு...! 'வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' இணைய தொடர், ப்ரைம் வீடியோவில் உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத்தொடர்களில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது


ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று உலகளவில் வெளியாகி, இரண்டு வாரத்திற்குள் தமிழில் வெளியான அசல் சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான 'வதந்தி : தி மிஸ்டரி ஆஃப் மணி'- ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம் அல்லாத இணைய தொடர்களில் உலகளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் ஸ்கிரிப்டட் ( Scripted) வகை படைப்புகளில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரின் சாராம்சத்தை தக்க வைத்துக்கொண்டு, முற்றிலும் புதிய மர்மம் - நடிகர்கள்- மதுரை பின்னணியுடன் தொடங்கிய இந்த இணைய தொடரின் இரண்டாவது பாகம்.. இத்தகைய சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.


தமிழ் மொழியில் வெளியாகி தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், ஏனைய 15 மொழிகளில் உரையாடல் குறிப்புகளுடன் ( Subtitles)  ஒளிபரப்பாகும் இந்த இணைய தொடர்... இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.


இந்த இணையத் தொடரின் முதல் பாகமான வதந்தி,:  தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' - Vadhandhi: The Fable of Velonie - சஸ்பென்ஸ் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட தொடர் வகைகளில் தனக்கென பிரத்யேகமான இடத்தை பிடித்திருந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக புதிய வழக்கு-  எம். சசிகுமார் தலைமையிலான புதிய நடிகர்கள் குழு-  இந்த தொடருக்கே உரித்தான ஆழமான... கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை சொல்லல் பாணி-  என பல அம்சங்களுடன் இரண்டாம் பாகம் உருவானது.


கலாச்சார சிறப்புமிக்க மதுரையை பின்னணியாகக் கொண்ட இக்கதை... பாரம்பரியம்- புலனாய்வு -ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பான ஆற்றல்-  ஆகியவற்றை தனித்தன்மையுடன் இணைக்கிறது.


'வதந்திக்கும், உண்மைக்கும் இடையிலான முரண் ' என்ற இத்தொடரின் மையக் கருப்பொருளை மட்டும் தக்க வைத்துக் கொண்டு உருவான இரண்டாம் பாகம் பார்வையாளர்களை ஒரு விறுவிறுப்பான மர்ம உலகத்திற்குள் ஈர்க்கிறது. இதற்கு விரிவான விசாலமான கதை சொல்லல்-  சிக்கலான கதாபாத்திரங்கள்-  உணர்ச்சி பூர்வமான உறவுகள்- ஆகியவை சிறப்பம்சங்களாக அமைகின்றன.


இந்த இணையத் தொடரில் சசிகுமார் நேர்மையான மற்றும் தளராத நம்பிக்கை கொண்ட காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ராசாவாக நடித்துள்ளார்.  உண்மையைக் கண்டறிய அவர் மேற்கொள்ளும் முயற்சியானது... அரசியல் மற்றும் ஊடகங்களின் பரப்பரப்பு மற்றும் மனிதர்களின் பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதுகிறது.


நெடுஞ்சாலை திட்டப் பணிகளின் தொடக்கத்தின் போது மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் விசாரணை எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்கிறது. இது அவரை 'மணி' என்ற பிடிப்படாத கைதியை நோக்கி பயணப்பட வைக்கிறது.


இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்தத் தொடரை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ( Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில் படைப்பாளிகள் புஷ்கர் - காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் புரொடியூசர்களாக இருந்து தயாரித்துள்ளனர். எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில் எம். சசிகுமார், முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


உலகெங்கிலும் ஒளிபரப்பாகும் இந்தி, ஆங்கிலம், கொரிய மொழி உள்ளிட்ட பல முன்னணி தொடர்களை பின்னுக்குத் தள்ளி, சசிகுமாரின் 'வதந்தி : சீசன் 2 தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' இணையத் தொடர் - சாதனை படைத்துள்ள தமிழ் தொடர் என்பதும், பிரைம் வீடியோவின் உலகளாவிய டாப் 10 தரவரிசையில் 'ஒரிஜினல் சீரிஸ்' என்ற வகையில் ஆறாவது இடத்தையும், ஆங்கிலம் அல்லாத இணைய தொடர் வகையில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pageviews