'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஹரா'. இப்படத்தில், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் படக்குழுவினர் வலியுறுத்தியிருந்தனர்.


ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள் இதுபோன்ற நடைமுறைகளை அறிமுகப்படுத்தியபோது, படக்குழுவின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.


இந்த முடிவை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் படக்குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும், பள்ளிப் பருவத்திலிருந்தே இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.


இதற்காக தமிழக அரசுக்கும், செய்தி மற்றும் விளம்பரத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



– 'ஹரா' படக்குழுவினர்

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.


1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்), அடுத்த வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்டில் பங்கேற்க அவர்களை அழைக்கிறார். விதி மற்றும் கோபத்துடன் மோதும் இந்த கொடூரமான போட்டியின் பின்னால் உயிருக்கு ஆபத்தான ஒரு சதித்திட்டம் மறைந்துள்ளது. அது ரியூ மற்றும் கெனை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்கவும், தங்களின் கடந்தகால இருண்ட நினைவுகளை எதிர்கொள்ளவும் கட்டாயப்படுத்துகிறது. அவர்கள் தோல்வியடைந்தால் ஆட்டம் முடிந்தது. 


இயக்குநர் கிடாவோ சகுராய் இயக்கியுள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்', ஆர்கேட் விளையாட்டின் பரபரப்பை ஹடூகன், ரவுண்ட்ஹவுஸ் கிக்குகள் மற்றும் ரசிகர்களின் விருப்பமான கதாபாத்திரங்களுடன் வெள்ளித்திரைக்கு கொண்டு வருகிறது.


நடிகர்கள்: நோவா சென்டினியோ – கென் மாஸ்டர்ஸ், ஆண்ட்ரூ கோஜி – ரியூ, கலினா லியாங் – சுன்-லி, ஜோ ரோமன் ரெய்ன்ஸ், அனோஆய் – அகுமா, டேவிட் டாஸ்ட்மால்சியன் – எம். பைசன்,

கோடி ரோட்ஸ் – கைல்,

ஆண்ட்ரூ ஷுல்ஸ் – டான் ஹிபிகி, எரிக் ஆண்ட்ரே – டான் சோவேஜ், வித்யுத் ஜாமால் – தல்சிம்,

ஆர்வில் பெக் – வேகா,

ஒலிவியர் ரிக்டர்ஸ் – சாங்கீஃப், ஹிரோஒக்கி கோட்டோ – இ. ஹோண்டா,

ரெய்னா வல்லாண்டிங்காம் – ஜூலி,

அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி – ஜோ, கர்டிஸ் '50 சென்ட்' ஜாக்சன் – பால்ராக் மற்றும்

ஜேசன் மோமோவா – பிளாங்கா


பாரமவுண்ட் ஸ்டுடியோஸ் இந்தியா நிறுவனம் 2026 அக்டோபர் 16 அன்று 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தை இந்திய திரையரங்குகளில் வெளியிடுகிறது.

 

பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் - அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது. இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது... காதல் - நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை கவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை... ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது 'வானே வானே..' எனும் முதல் பாடலை வெளியிட்டு, இப்படத்தின் இசை பயணம் தொடங்கியுள்ளது. 


ரயில் நிலையத்தின் இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்கும் துல்கர் சல்மான்- பூஜா ஹெக்டே நடை மேடை( Platform) க்கு நுழையும் தருணத்தில்.. அவரைக் கண்டு முற்றிலும் மெய் மறந்து போவதுடன் இப்பாடல் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் பலருடன் இணைந்து அவர்கள் மேற்கொள்ளும் அழகான பயணத்தின் காட்சிகள் இதமான தொகுப்பாக - மாண்டேஜஸ்ஸாக இடம்பெறுகின்றன. 


ஜீ. வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒருமுறை இதமான மற்றும் மனதை மயக்கும் மெல்லிசையை வழங்கி உள்ளார். இந்த பாடலைக் கேட்டவுடன் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. இனிமையான இசை அமைப்பு மற்றும் இசைக்கருவிகளின் நேர்த்தியான பயன்பாடு ஆகியவற்றுடன் இந்த பாடல் முதல் முறையிலேயே கேட்பவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கிறது. பாடலாசிரியர் கே. ஆர். தரன்- ஆழமான காதலில் இருக்கும் ஒரு ஆணின் உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளார். கதாநாயகியின் நளினம்- அழகு- அவரை சுற்றியுள்ள மந்திரம் போன்ற வசீகரம் - ஆகியவற்றை கவித்துவமாக விவரித்துள்ளார். பின்னணி பாடகர் நகுல் அபயங்கர் - தனது உணர்வுபூர்வமான மற்றும் வெளிப்பாட்டு திறனுடன் இந்த பாடலை இனிமையான குரலில் பாடி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதே தருணத்தில் ராம் மாஸ்டரின் நடன அமைப்பும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 


இந்தப் பாடலின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால்...


 சந்தேகத்திற்கு இடமின்றி துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு இடையிலான இயல்பான மற்றும் கச்சிதமான கெமிஸ்ட்ரி தான். திரையில் அவர்களின் வசீகரமான தோற்றம் மற்றும் இயல்பான புரிதல் ஆகியவை ஒவ்வொரு காட்சியை ரசிக்கும் படியாக மாற்றுகின்றன. அழகான இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள்... காதல் உணர்வை மேலும் மெருகூட்டி, பாடலை இன்னும் ஈர்க்கக் கூடியதாக மாற்றுகின்றன. கவரும் மெல்லிசை - பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு - ரசிக்கத்தக்க நடிப்பு - என அனைத்தும் கொண்ட இந்தப் பாடல்... அடுத்த 'வைரல் ஹிட்' பாடலாக மாறுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. 


இப்படத்தின் தொழில்நுட்பக் குழு மிகவும் வலுவானது. அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவையும்,  ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பையும்,  அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பையும் ( Production Designer) மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான மற்றும் உணர்வு பூர்வமான ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பான் இந்திய திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படம்- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


நடிகர்கள் :  துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே 


தொழில்நுட்பக் குழு : 


எழுத்து & இயக்கம் : ரவி நெலகுதிடி

தயாரிப்பாளர் : சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ் - SLV Cinemas

இணை தயாரிப்பாளர் : இஷான் சக்சேனா 

தலைமை நிர்வாக அதிகாரி ( CEO) : விஜய் குமார் சகாந்தி 

இசை:  ஜீ. வி. பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

 

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி- Light Weight Baby ' என்ற தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 


போட்டிகள் ஏராளமாக உள்ள உடற்பயிற்சிக்கான ஃபிட்னஸ் உலகத்தை பின்னினியாகக் கொண்ட இப்படம்-  பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. காதல்- குடும்பம்- எதிர்பார்ப்புகள்- தனிப்பட்ட லட்சியங்கள் -ஆகியவை மோதிக் கொள்ளும் வகையில் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. நகைச்சுவை, உணர்வு பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான போட்டிகள் நிறைந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 


ஸ்டாண்ட்- அப் காமெடியனாகவும், 'பிக்பாஸ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவராகவும் பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரே இப்படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். அவருக்கு ஜோடியாக உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் நன்கு அறியப்பட்ட ஆரத்தி கிருஷ்ணா நடிக்கிறார். இது அவருக்கு அறிமுக திரைப்படமாகும். முற்றிலும் மாறுபட்ட பின்னணியை கொண்ட இந்த ஜோடி - படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே... பார்வையாளர்களிடத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 


கே. சி. குரு ( K.C.Guru)  எழுதி, இயக்கும் இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் ( Hitha Studios) நிறுவனம் தயாரிக்கிறது. சாகரா சந்தேஷ் ( Sagara Sandesh) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவாளராக பிரமோத் கோட்டியன் - இசையமைப்பாளராக சரவணன் சுப்பிரமணியம் - படத்தொகுப்பாளராக ஹரிஷ் கொம்மே மற்றும் வசனகர்த்தாவாக 'விக்கல்ஸ்' விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


படத்தைப் பற்றி இயக்குநர் கே சி குரு தெரிவித்ததாவது....


''கடந்த 45 நாட்கள் ஒரு அற்புதமான பயணமாக அமைந்தன. ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டமும்... ஒவ்வொரு நகரமும்... இப்படத்திற்கு தனித்துவமான சிறப்பம்சங்களை சேர்த்தன. முற்றிலும் மாறுபட்ட உலகங்களை சேர்ந்த இருவரை பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கிய இந்த கதை... தற்போது நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படும் ஒரு படைப்பாக உருவெடுத்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், பட தொகுப்பு அறையில் மற்றொரு உற்சாகமான கட்டம் தொடங்குகிறது. இந்த கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்''.



நாயகன் 'விக்கல்ஸ்' விக்ரம் தெரிவித்ததாவது..


''எனது திரை பயணத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தது மிகவும் உற்சாகமான அனுபவங்களில் ஒன்றாகும். நடிப்பதுடன் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது இந்த பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. கேமராவிற்கு முன்னாலும் ...அதே சமயம் எழுத்து வடிவிலும்... ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது அரிதான ஒன்று. இந்த அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்''.


ஆரத்தி கிருஷ்ணா தெரிவித்ததாவது...


''ஃபிட்னஸ் என்பது எனக்கு எப்போதும் உடல் ரீதியான சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் நடிப்பு என்னை உணர்வு ரீதியாக முற்றிலும் புதிய வழிகளில் சவாலுக்கு உட்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குள் இருந்த வேறொரு பரிமாணத்தை கண்டறிய உதவியது. எனது முதல் மற்றும் முக்கியமான இந்த திரைப்படத்தை இவ்வளவு மறக்க முடியாத அனுபவமாக மாற்றி அமைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பார்வையாளர்கள் இப்படத்தை பார்ப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்".


படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக் குழுவினர் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். லைட் வெயிட் பேபி - Light Weight Baby ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இப்படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.






நடிகர்கள் 


 விக்கல்ஸ் விக்ரம் – கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் திரைப்படம்


 ஆரத்தி கிருஷ்ணா – முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்


 தொழில்நுட்பக் குழு 


 தயாரிப்பு : ஹிதா ஸ்டூடியோஸ் (Hitha Studios)


 கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: கே.சி. குரு


 இணைத் தயாரிப்பாளர் : சாகரா சந்தேஷ்


 ஒளிப்பதிவு : பிரமோத் கொட்டியன்


 இசை : சர்வனா சுப்பிரமணியம்


 படத்தொகுப்பு : ஹரிஷ் கொம்மே


 வசனம் : விக்கல்ஸ் விக்ரம்


 இணை இயக்குநர் : கிரண் தும்பகெரே


 நிர்வாகத் தயாரிப்பாளர் : ஷரத் குமார் என்


 கலை இயக்குநர் : சங்கரகௌடா


 உதவி இயக்குநர்கள் : அகமது வரதராஜன், பிரேம் சந்திரன்


 மக்கள் தொடர்பு (PRO): நவநீத கிருஷ்ணன்


தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நாங்கள் பிரத்தியேகமாக அறிந்துள்ளோம். அவரது வருகை, புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாக ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திர அணியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பூமி சதீஷ் பெட்னேக்கர் கூறியதாவது: "மகத்தான மராத்தா வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, இதுபோன்ற அளவில் உருவாகும் முதல் இந்திய திரை பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்து, அவரை திரையில் உயிர்ப்பிப்பது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நான் காந்தாரா திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதில் ரிஷப் ஷெட்டியின் அசத்தலான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதனால், சந்தீப் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலேயே என்னுள் இருக்கும் நடிகை உடனடியாக 'ஆம்' என்று கூறிவிட்டது. இதற்கு முன் நான் செய்த எந்தக் கதாபாத்திரத்தையும் போல இல்லாத ஒரு அனுபவம் இது. என்னை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்."

சந்தீப் சிங் இயக்கி தயாரிக்கும் தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மராத்தா வீர மன்னரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மிகப் பெரிய திரை பிரம்மாண்டங்களில் ஒன்றாக இது உருவாக்கப்பட உள்ளது.

இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதியுள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தொடர்ந்து விரிவடைந்து வரும் முன்னணி நடிகர்கள் மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் அணியுடன் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பை உயிர்ப்பிக்க விரிவான முன்தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. விஜய் சரவணன் அவர்களுக்கும் இயற்கை விவசாயம் பற்றி சிறப்புரை வழங்கிய வேளாண் செம்மல் திரு.கோ.சித்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் அவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.

தற்போதைய "முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்" என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.

விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.

இந்நிகழ்வில் மண்ணுக்கு மக்களுக்கும் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட உறுப்பினர்கள், மற்றும் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நடனப் பயிற்சி வழங்கி வரும் கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், இதர கலைஞர்களை கௌரவிக்கவும் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, 'டான்ஸ் டான் 2' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி இன்று (ஜூலை 25) சென்னையில் நடத்தி வருகிறது. வேல்ஸ் கலையரங்கில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்காக இதுவரை இல்லாத ஒரு முன்னெடுப்பை கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மேற்கொண்டுள்ளது.


1973ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில் பங்காற்றி வரும் 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் 'டான்ஸ் டான் 2' நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். இதனுடன், கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.


இது குறித்து பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர், "இத்தனை வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் எனக்கு, நமக்கு முன்னர், நம்முடன் மற்றும் நமக்குப் பின்னர் நடன இயக்குநர்களாக அறிமுகமாகி பங்காற்றியவர்கள் குறித்த ஒரு தேடலைத் தொடங்கினேன். இவர்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், 1973 முதல் நடனம் அமைத்த கலைஞர்கள் 125 பேர் தற்போது உள்ளார்கள் என்ற ஆச்சரியமான தகவல் தெரியவந்தது.


இவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அனைவரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 ஆசிரியர்களையும் கௌரவித்து வருகிறோம்," என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "இந்த 125 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை. அதேபோல், நடன ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது நடனப் பள்ளிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குநர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து, நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிச்சமும் ஊக்கமும் கிடைத்தால் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்," என்றார்.

 

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. 


நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.. சமீப காலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புத் தாரகை என்று ரசிகர்களால் பாராட்டப்படும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.


இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையை தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 


ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் நிவின்பாலியின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும், அவருக்கு ஈடு கொடுக்கும் ஸ்டைலிஷான லுக்கில் சூரியின் நடிப்பும் அந்த ரயில் பயணமும், நிச்சயமாக இயக்குநர் ராம் இப்படத்தின் மூலம் ரசிகர்களைப் புது உலகத்திற்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமீப நாட்களாக சீரியஸான கதாபாத்திரங்களில் கதைநாயகனாக நடித்து வரும் சூரியின் காமெடியை மீண்டும் இப்படத்தில் பார்த்து ரசிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் இந்த டீசர் தருகிறது.


படம் ஏற்கனவே தயாராகிவிட்டாலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளை வென்று, அந்தப் பெருமையுடன் தற்போது அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.

 

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:


"நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.


கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. விஜய் சரவணன் அவர்களுக்கும் இயற்கை விவசாயம் பற்றி சிறப்புரை வழங்கிய வேளாண் செம்மல் திரு.கோ.சித்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் அவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக கருதுகிறேன்.


இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.


தற்போதைய "முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்" என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.


விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.


எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.


இந்நிகழ்வில் மண்ணுக்கு மக்களுக்கும் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட உறுப்பினர்கள், மற்றும் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

மீ பதிப்பகம் சார்பில் மணிகண்டன் வெளியீட்டில், இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதியுள்ள ‘ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)’ எனும் புதிய நூலை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.


நூலைப் பெற்றுக் கொண்ட பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், இயக்குநரின் முந்தைய படைப்பான ‘சினிமாவின் ஆன்மா’ நூல் பெற்றது போன்றே, உலக சினிமா ரசனைக் கல்வியை மையமாகக் கொண்டுள்ள இந்த நூலையும் அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு செல்வதற்குத் தேவையான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம் என்று உறுதியளித்து வாழ்த்தினார்.


நூலின் சிறப்பம்சங்கள்:

* நூல் தலைப்பு: ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)

* ஆசிரியர்: இயக்குநர் / கவிஞர் சீனு ராமசாமி

* வெளியீட்டாளர்: மீ பதிப்பகம் (மணிகண்டன்)

* நூல் பெற்றுக் கொண்டவர்: டாக்டர் எல். முருகன் (மத்திய இணை அமைச்சர்)


உலக சினிமா குறித்த ஆழமான பார்வையும், அதன் அழகியலையும் மாணவர்களும் சினிமா ஆர்வலர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், தமிழ் இலக்கிய மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pageviews