ஓசை பிலிம்ஸ்  தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'.


இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில்

கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.


சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன்.


தயாரிப்பு : கலைவளரி சகா.  ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி.


மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.


விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, 'உலக சினிமா' பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது,


"  இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை.டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில்  வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள். போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது .பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். அவரது அந்தக் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி. இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி." என்றார்.


தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது,


" இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது.சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம்.அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம்.பல  தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா .உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன்  'மழைக்கால இரவுகள்' என்ற குறும்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம்.தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.

இந்தப் படத்திற்கு 

முதலீட்டாளர்களாகப் லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே , இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி  ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.

இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும்.

ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .


இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும்  பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் .


அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது "என்றார்.


சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,


" இந்த 'அந்தோனி' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து  நான் கண்கலங்கினேன் .


இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.


அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.


ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன்.

இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான்  கருதுகிறேன்.என் உள் ளுணர்வு அதைத்தான் கூறியது.இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


 ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு,  போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு  எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும்.   போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர்  அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா?

உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம்  அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன்.

அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.


விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே.

புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான்.அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள்.

 நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.


இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.


இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.


நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு.  நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .


வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார்.


நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது. 


இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது .


ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது .


எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு.

மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.


நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து  மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த 'அந்தோனி' திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.

எனக்கு 'நீர்ப்பறவை' கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி. 

அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே  வந்திருப்பது பெருமை.

எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன்.  ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை - அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்"என்று கூறினார்.


 இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது,


 "இந்தக் கரையில் இருந்து கொண்டு அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம். நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக் கரையைத் தான் பார்த்து  இருக்கிறோம். அந்தக் கரையைப் பார்க்கும்  வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னிச்சையான திரை உலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாக வேண்டும் .வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்" என்றார்.


இயக்குநர்களில் ஒருவரான

ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது, 


" நான் இங்கே இருப்பதை  உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான்.

தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.

சுகிர்தன் எடுத்த 'மழைக்கால இரவுகள்'  குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.


வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம்.

இது  இலங்கை மண் சார்ந்த  ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும்,  ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார். 


இன்னொரு இயக்குநர்

சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது,


 "நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன்  கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது,என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.


ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் 'காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது' என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால்,


காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள் ,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்' என்றார்.


'உலக சினிமா' பாஸ்கரன் பேசும்போது,


'' நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களைப் பார்ப்பவன். அதே உலகத் தரத்தோடு இந்த 'அந்தோனி' திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன்.

இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் -பஞ்சு, தேவராஜ் - மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார். கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.


கதையின் நாயகனாக நடித்துள்ள 'கயல்' வின்சென்ட் பேசும்போது,


"நான் முதல் படமாக நடித்திருக்க வேண்டிய படம் 'நீர்ப்பறவை'. அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு  என் குரு நாதர் பிரபு சாலமன் 'கயல்' படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


இந்தப் படத்தின் நாயகி டிஜே பானு 50 லட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திருக்கிறார். அவர் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது" என்றார்.


இவ்விழாவில் 'அந்தோனி' படக் குழுவினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

 



அன்பே சிவம், புதுப்பேட்டை கோகுலத்தில் சீதை, உள்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். அதன் நிறுவனர்கள் கே முரளிதரன், சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்கு பின் அந்த நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. தற்பொழுது கே முரளிதரன் அவர்களின் புதல்வர்களான எம் கோகுல் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஸ்ரீ வத்ஸன் இருவரும் இணைந்து படத்தயாரிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர் லக்ஷ்மி மூவி மேக்கர்சின் இருபத்து ஏழாவது தயாரிப்பாக 4 இடியட்ஸ் (ஃபோர் இடியட்ஸ்) என்ற திரைப்படத்தை புதுமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசனின் இயக்கத்தில் உருவாக்கியுள்ளனர். சஜோ சுந்தர் முருகேசன் இயக்குநர் ஹரி நடிகர் பிரகாஷ் ராஜ் பொம்மரிலு பாஸ்கர் ஆகியோர் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணி புரிந்திருக்கிறார். இத்திரைப்படத்தில் விஜய் டிவியில் காமெடியில் கலக்கும் புகழ்


கதாநாயகனாகவும், காமெடி வில்லனாக வலம் வரும் ரவி மரியா

வில்லனாகவும், மும்பை குயின் பிரக்யா நயன் கதாநாயகியாகவும் நடிக்க

வின்செண்ட் அசோகன், கும்கி அஷ்வின் திடியன், இந்திரன் பாவா லஷ்மணன் மகாநதி சங்கர், சி எம் பாலா, விஜய் யோன் போன்றோர்

குணசித்திர நடிப்பை வழங்கியுள்ளனர் 


பிளாக் காமெடி ஜானரில்

உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இணைத்தயாரிப்பாளராக திருப்பூரை சார்ந்த வி கே முருகேசன் மற்றும் ஜியோ ஏன் என் செல்வராஜ் ஆகியோர் இணைந்திருக்கின்றனர் 


வண்ணமயமான ஒளிப்பதிவை

வழங்கியிருக்கிறார் யூ.கே செந்தில் குமார்


இசையின் மூலம்

திரைக்கதைக்கு உயிரோட்டம் செய்திருப்பவர் புதுமுகம் சுபாஷ் முனிரத்தினம் கதையின் சுவை 

கெடாமல் படத்தொகுப்பை

செய்திருக்கிறார். எஸ் என் பாசில் விறுப்பான விறுப்பான கதைக்கு

தேவையான விதத்தில் கலை இயக்கம் செய்திருப்பவர் கலை இயக்குநர்

முது. பிரபாகரன் அழகான வசனங்களின் மூலம் அழகு சேர்த்திருக்கிறார்


டாவின்சி சரவணன் ஒப்பனையில் முத்திரை பதித்திருக்கிறார் பி

மாரியப்பன் 


குடும்பமாக பார்த்து ரசிக்கும் வகையில் யூ ஏ 13 சான்றிதழ்


வழங்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இனிதே நடைப்பெற்றது 


இரண்டு துள்ளலான பாடல்கள் மற்றும்

திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு சினிமா ரசிகர்களை மகிழ்விக்க

விரைவில் திரைக்கு வருகிறது 4 இடியட்ஸ்


*ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!*

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக “அண்டர் 18” (Under 18) படத்தின் கதை சொல்லவுள்ளது.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது. 

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர். 

“Under 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு : SR PRODUCTIONS 
தயாரிப்பாளர் : ஜெகதீஸ்
இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி
ஒளிப்பதிவு (DOP) : வேல்ராஜ்
இசை : சாம் சி.எஸ்
பாடல்வரிகள் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா
பப்ளிசிட்டி டிசைன் : V.M. சிவகுமார்
புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி
புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா
PRO - சதீஷ் (AIM)

 

தமிழ் சினிமா எப்போதும் நல்ல கருத்துள்ள கதைகளுடன் பிரிக்க முடியாத பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து யதார்த்தத்துடன் வேரூன்றிய படங்களைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார். இவை பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தன. இப்போது, அவர் "கெணத்த காணோம்" மூலம் நம்மை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 19, 2025) வெளியிடப்பட்டது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.


படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா சமீபத்தில் காலமானதால், இந்த வெளியீடு முக்கியத்துவம் கொண்டுள்ளது. இவர் இயக்கிய "ஒரு கிடாயின் கருணை மனு" மற்றும் "சத்ய சோதனை" படைப்புகள் இந்திய சினிமாவில் தலைசிறந்த மைல்கற்களாக உள்ளன.


கெணத்த காணோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளிப்படையான நகைச்சுவைக்கு பதிலாக சூழ்நிலை சார்ந்த, கதாபாத்திரம் சார்ந்த, வேடிக்கை நிறைந்த நாடகத்தை குறிக்கும் ஒரு அடித்தளமான, பழமையான அழகியலை முன்வைக்கிறது. கிராமவாசிகளின் கூட்டத்தின் மத்தியில் யோகி பாபு மையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது கூப்பிய கைகளின் சைகை மற்றும் தீவிரமான வெளிப்பாடு, குழப்பம் மற்றும் விரக்தியிலிருந்து இயல்பாகவே வெளிப்படும் நகைச்சுவையை பரிந்துரைக்கின்றன. 


மண் சார்ந்த வண்ணங்கள், கரடுமுரடான டைட்டில் டிசைன் ஆகியவை கிராமப்புற அமைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன, இது நகைச்சுவை மற்றும் நாடகம் அன்றாட குழப்பம், சமூக இயக்கவியல் மற்றும் நுட்பமான அபத்தங்கள் மூலம் பின்னிப் பிணைந்த ஒரு கதையைக் குறிக்கிறது.


யோகி பாபு கதாநாயகனின் பாத்திரத்தை வகிக்கும் அதே வேளையில், மீதமுள்ள நட்சத்திர நடிகர்களில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

 

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் - அனில் ரெட்டி - ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர்.


'ஹாட் ஸ்பாட் 2 'திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வெளியாகிறது. 


ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைப்போல்.. டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. இதனால் 'ஹாட் ஸ்பாட் 2 'திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த  ஆதரவை பெற்று வெற்றி பெற்றதை போல் இப்படம் எதிர்வரும் 20 ஆம் தேதி முதல் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது


சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


இந்நிகழ்வினில்…


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,


மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக....

சில படங்கள்...நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு... இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே  ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ  அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.



அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.


அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன்  வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான  தருணமாய் உணர்கிறேன்.


அம்பேத்  சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்...

இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல  விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு  என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம்  கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த  இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி


தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,


படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.




இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,


இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு  நன்றி.


‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள்.  ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது


ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.



நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,


இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.


தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர்.  ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.


முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி.  ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது.  இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என  சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”


மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது


இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைத்துள்ளனர்.

 

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான  திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம்  “4த் ஃப்ளோர்”.  


இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்.., 


தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது.., 

எல்லாருக்கும் வணக்கம். எங்களின்  4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது.  நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம்.   இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை  கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம் நல்லபடியாக வந்திருக்கிறது. ஒத்துழைத்த ஆதி, இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி.  அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


தயாரிப்பாளர் தனஞ்செயன்  பேசியதாவது.., 

4த் ஃப்ளோர் டிரெய்லரைப்  பார்த்தேன். நன்றாக இருக்கிறது. ராஜா சார், நீங்கள் திருப்பூரிலிருந்து வந்து இவ்வளவு பேஷனோட ஒரு படம் எடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அடையணும். ஆரி 10 வருடமாக நல்ல படங்கள் செய்து வருகிறார். அவர் பெரிய வெற்றி பெற வேண்டும்.  இன்றைக்கு தமிழ் சினிமாவில் நிறைய புது புது, திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். எல்லாருமே சரியான வழிகாட்டுதலோடு, குறைந்த பட்ஜெட்டிலேயே அவங்க படங்களை எடுக்க உதவி செய்தால், இன்னும் நிறைய நல்ல படைப்பாளிகள், தமிழ் சினிமாவுக்குள் வர முடியும். இந்த படத்தின் டிரெய்லரிலேயே நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள்.  அனிமேஷன், திரில்லர், கனவுகள்… ஒரு மனிதனுடைய கனவிலிருந்து வர்ற விஷயங்கள் எப்படி நிஜமாக மாறுது, அதிலிருந்து என்னென்ன சம்பவங்கள் நடக்குது, அந்த சம்பவங்கள் உண்மையாகும்போது, ஹீரோ சந்திக்கிற பிரச்சனைகள் என்ன?,   இதை எல்லாம் டிரெய்லரிலேயே அழகாக சொல்லியிருக்கிறார்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 


இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது.., 

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் என் நீண்டகால நண்பர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து அவருடைய வேலை என்னை எப்போதும் பிரமிக்க வைத்திருக்கிறது. அமைதியாக, நேர்த்தியாக, மிகப் பெரிய அழுத்தத்தை ஹேண்டில் செய்து ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வருவது சுலபமல்ல. அந்த வகையில் இந்த படக்குழு பாராட்டுக்குரியது. இது ஒரு டிஃப்ரெண்டான ஜானரில் வந்திருக்கும் படம்.  நிச்சயமாக பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளருக்கும்,  என் ஊரான பழனியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஹீரோ ஆரிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.



இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது.., 

நடிகர் ஆரியை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரி திரையில் தோன்றும் ஒவ்வொரு நிமிடமும்

அந்த ஃப்ரேமுக்கு, ஒரு தனி உயிர் கிடைக்கிறது. அந்த அழகு வெளிப்புற அலங்காரம் அல்ல; உள்ளுக்குள் இருக்கும் உண்மை, அமைதி, சென்சிபிலிட்டி.

எதையும் மிகைப்படுத்தாமல், இயல்பாகவே கவர்கிறவர் அவர். நடிகனாக மட்டுமல்ல, மனிதராகவும் மதிக்கத் தக்கவர். அவருடன் வேலை செய்வது ஒரு நிம்மதியான அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் அவர்  தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறார்.

அதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம்.

நடிகர்களும்  டெக்னிக்கல் டீமும்

ஒரே மனதோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள்.  சினிமா என்பது தனி மனித சாதனை அல்ல

என்று நிரூபிக்கும் ஒரு முயற்சி.

இந்த படம் அனைவருக்கும் அடுத்த கட்டப் பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.


நடிகர் பரத் பேசியதாவது.., 

ஆரியும் நானும்  பல வருடங்களாக இந்த இன்டஸ்ட்ரியில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வருடம் முன்னாடி தான் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம்.

எனக்கு தனிப்பட்ட முறையில், க்ரைம் திரில்லர் என்ற ஜானர் எப்போதுமே பிடிக்கும்.

என்னுடைய  திரைப்பயணத்தில் தெரியாமலேயே,  கடைசி ஏழு படங்களும் திரில்லர் படங்களாகவே அமைந்திருக்கிறது.

அந்த ஜானருக்கு ஒரு உத்தரவாதம்  எப்போதும் இருக்கும். அதாவது, சரியான திரைக்கதையும், நல்ல  விளம்பரமும் இருந்தால் அந்த படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. குறிப்பாக, டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்.


இயக்குநர் சேரன் பேசியதாவது.., 

திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும்.

“திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.  இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.


இந்த படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா  அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.


இந்த படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி  என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும். வாழ்த்துக்கள். 



நடிகர் பிரஜின் பேசியதாவது.., 

இது ராஜா சார் தயாரித்த நான்காவது திரைப்படம். ராஜா சாரை நான் முதலில் சந்தித்தது, “இந்த படம் நான் செய்வதாக விவாதிக்காகத்தான். ஆனால் அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் எவ்வளவு நேர்மையான, தெளிவான தயாரிப்பாளர் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு கதைக்கு என்ன தேவையோ, அதை முழுமையாக செய்து தரக்கூடியவர் ராஜா சார். நல்ல தயாரிப்பாளர்.


இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மணன் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்.

கேமராவில் அவர் செய்த வேலை மிகவும் அருமை. அதுமட்டுமல்ல, அவர் ஒரு நல்ல நண்பரும் கூட. அவருக்கு வாழ்த்துக்கள். 


இன்று நான் இங்கே வந்திருப்பதற்கான இன்னொரு முக்கியமான காரணம் என் நண்பர்… என் மச்சான்… ஆரி.

நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் Mr. Chennai Finalists ஆக எங்கள் பயணத்தை ஆரம்பித்தவர்கள். அந்த நேரத்திலிருந்து இன்று வரை, ஆரியின் பயணம் எப்போதுமே உழைப்பின் அடையாளமாகத்தான் இருக்கிறது.

அவன் மிகக் கடினமாக உழைக்கும் மனிதன்.

ஒரு நல்ல நடிகன். அதற்கும் மேலாக, ஒரு நல்ல நண்பன்… ஒரு நல்ல மனிதன். எந்த விதமான ஈகோவும் இல்லாமல்,

யார் எப்போது என்ன உதவி கேட்டாலும்

“பண்ணிடலாம்” என்று முன்னால் வந்து நிற்பவன். இந்த படம் நல்லபடியாக ஓட வேண்டும் என்று என் மனதார நான் வேண்டிக்கொள்கிறேன். இந்த படக்குழுவின் உழைப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.  




இசையமைப்பாளர் தரண்குமார் பேசியதாவது.., 

இன்று என்ன பேச வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வரவில்லை. ஆனால் மேடையில் நின்றபோது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது – இந்த படத்திற்கு உயிர் கொடுத்தவர் தயாரிப்பாளர் ராஜா சார் என்பதுதான். ராஜா சார் ஒரு குழந்தை மனசு கொண்டவர். இந்த படத்தின் மூலமாகத்தான் நான் அவரை நெருக்கமாக அறிந்தேன். ஆனால் அவருக்குள் இருக்கும் தீவிரமும், இந்த படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வெறியும் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த விழாவுக்கும், இந்த ரிலீஸுக்கும் நான் வந்ததற்கான ஒரே காரணம் அவர்தான்.

 

சின்ன படங்கள் ஜெயிக்கணும் என்று நாம் எல்லாரும் பேசிக்கிட்டே இருக்கிறோம். ஆனால் அது நடக்கணும்னா, இப்படிப்பட்ட நேர்மையான முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். நான் செய்த பல படங்களின் இசை என் ஸ்டூடியோவுக்குள்ளேயே தங்கிப் போயிருக்கிறது. அந்த உழைப்பு வெளியே வந்து ஜெயிக்கணும்னா, இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற வேண்டும்.


ஆரி ப்ரோவுடன் ரொம்ப நாளாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று அது நிறைவேறியிருக்கிறது. அவர் ஒரு நடிகன் மட்டும் இல்ல; ஒரு சகோதரன் மாதிரி. மிக நேர்மையான, பொறுமையான, சின்சியரான மனிதர்.


இயக்குனர், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் உட்பட முழு டெக்னிக்கல் டீமும் மிக அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். ஸ்கிரீன்ப்ளேவும், இசையும் சரியான இடத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த படம் ஜெயிக்கணும். ஜெயிக்கும்.

அதுதான் என் முழு நம்பிக்கை. நன்றி. 



இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது.., 

 ‘4த் ஃப்ளோர்’ என்ற டைட்டிலே மிக அட்டகாசமாக இருக்கிறது. ஒரு படத்திற்கு முதல் டிக்கெட் என்பது அதன் டைட்டிலும், அதன் விளம்பர முகமும் தான். ஒரு மனிதன் திரையரங்குக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது அந்த முதல் பார்வையே. அதை இப்படம் உருவாக்கியுள்ளது. 

ஆரியை பல வருடங்களாக எனக்குத் தெரியும் பிக்பாஸில் ஜெயித்த போது அதன் புகழை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தியவர். மிகச்சிறந்த மனிதர். அவரது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். 


செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் பேசியதாவது.., 

எனக்கு முதன்முதலில் சினிமாவை  உணர வைத்தவர் என்றால், அது ராஜா சார் தான். சென்னை வந்த போது,  ஆரம்பித்த நட்பு, அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இந்தப் பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.

இந்த படம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது. அதற்காக நாங்கள் முழு நம்பிக்கையோடு, கவனமாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு வெற்றியாக இந்த படம் மாற,

உங்கள் அனைவரின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு தேவை. அந்த ஆதரவை தொடர்ந்தும் கொடுங்கள். நன்றி.”



இயக்குநர் L R சுந்தரபாண்டி பேசியதாவது.., 

இது எனக்கு மூன்றாவது படம்.

தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா, நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்த படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது.


இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும்.

“இது என்ன ஜானர்?” என்று கேட்டால்,

ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம்.


கதையை முதலில் கேட்டவுடனே

ஆரி  சார் இந்த படத்தில் இணைந்தார்.

இந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல் நபர் அவர்தான்.

அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்த படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தையும்

அவர்தான் கொடுத்தார்.

இது தயாரிப்பாளர்–டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், பாடல்கள், எமோஷன்

எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி.

அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது உங்கள் கைகளில்தான் உள்ளது. மீடியா நண்பர்கள் அனைவரும் இந்த படத்திற்கு உங்கள் முழு ஆதரவை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.



நடிகர் ஆரி பேசியதாவது.., 

இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும்  நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.


சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி.


பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 


ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும்,  அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி.  இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக  உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு  என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது.  நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி. 


இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.  தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல். ஆர். சுந்தரபாண்டி அதே வேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார்.  தணிக்கை செய்யப்பட்ட  இந்தபடம் யூ/ஏ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


 “போடா போடி” படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி”, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.


செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும்  27ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


தொழில் நுட்ப குழு விபரம் 

இயக்குநர்: L R சுந்தரபாண்டி 

தயாரிப்பாளர்: A.ராஜா 

நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P

ஒளிப்பதிவு : J லக்ஷ்மன் 

இசையமைப்பாளர்: தரண் குமார்

பாடலாசிரியர் : கு கார்த்திக்

எடிட்டர்: ராம் சுதர்ஷன்

கலை: சுரேஷ் கல்லேரி 

நடனம் : அபு சால்ஸ்

ஸ்டண்ட்: டேஞ்சர் மணி 

மக்கள் தொடர்பு : A ராஜா


The third directorial venture of acclaimed filmmaker Thiagarajan Kumararaja, 'Pocket Novel', has officially begun shooting. This multilingual film, made in Tamil, Telugu, Kannada, and Hindi, promises to be a game-changer with its unique storytelling style.

The film boasts an impressive cast, including Vijay Sethupathi, Raj B. Shetty, Kishore, and Malavika Mohanan. Isaignani Ilaiyaraaja's music and Yugabharathi's lyrics will add to the film's grandeur. The first-look poster has already generated buzz on social media.

With cinematography by Nirav Shah and editing by Sathyaraj Natarajan, 'Pocket Novel' is shaping up to be a visual treat. The film's audio rights are with Think Music, and talks are on for OTT release.

Produced by Tyler Durden And Kino Fist (TDKF), 'Pocket Novel' is targeting a theatrical release by end of this year.

Technical Crew

Production – Thiagarajan Kumararaja, S.D. Ezhilmathy (Tyler Durden And Kino Fist)
Director – Thiagarajan Kumararaja
Music – Isaignani Ilaiyaraaja
Story & Screenplay – Andrew Louis
Cinematography – Nirav Shah
Editing – Sathyaraj Natarajan
Art Direction – V. Shanmuga Raja
Costume Design – S.D. Ezhilmathy
Lyrics – Yugabharathi
Publicity Designer – Gopi Prasanna
Stills – C.H. Balu
Colorist – G. Balaji
Sound Design – Tapas Nayak
SFX Designer – Arun Seenu
VFX Supervisor – Aravind Naga
Production Controller – Arun Arunachalam
Executive Producer – Sathyaraj Natarajan
Public Relations – Sathish (AIM)

 

Happy Raj திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் முதல் சிங்கிளான “ஆடினே இருப்பேன்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இளைஞர்களின் கொண்டாட்ட உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் இந்த உற்சாகமான மற்றும் ஆற்றல் மிகுந்த நடனப் பாடல், படத்தின்  மகிழ்ச்சியான தருணத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. படத்தின் புரோமோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததையும் தொடர்ந்து, இளைஞர்களின் நடன கீதமாக மாறவுள்ள ஒரு பாடலை இப்போது ரசிகர்களிடம் கொண்டு வந்துள்ளது படக்குழு.


G. V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் புதுமையான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் “ஆடினே இருப்பேன்” பாடலில் நடனமாடி உள்ளனர். உயிரோட்டமிக்க மற்றும் சுறுசுறுப்பான சூழலில் இவர்களின் நடன அசைவுகளை பார்க்கும் பொழுது  அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, ஆற்றல்மிகு நடிப்பு மற்றும் அன்னிச்சையான நடன அசைவுகள் பாடலுக்கு தனித்துவமான கவர்ச்சியை அளிக்கின்றன.


பெங்களூரு நகரின் பரபரப்பான வீதிகளில்  படமாக்கப்பட்ட இந்தப் பாடல், நகரத்தின் நவீன நகர வாழ்க்கையின் துடிப்பை காட்சிப்படுத்துகிறது. வண்ணமயமான தெருகளின் அழகியல், சமகால காட்சித்தொகுப்பு மற்றும் மனம் மகிழ்வான காட்சிகளுடன், கதாநாயகர்கள் நகரைச் சுற்றி உல்லாசமாகச் செல்லும் போதும் உற்சாகமான நடனத்தில் ஈடுபடும் தருணங்களும் பாடலுக்கு தனித்துவமான  மற்றும் பண்டிகைக்கால கொண்டாட்ட மனநிலையை  கொடுக்கின்றன.


இந்தப் பாடலுக்கு மேலும் சுவையைச் சேர்க்கும் வகையில், “ஆடினே இருப்பேன்” பாடலை கானா வினோத் எழுதி பாடியுள்ளார். அவரது 'மண்ணின் மணமிக்க' தனித்துவமான குரல்  பாடலுக்கு இயல்பான மற்றும் புத்துணர்ச்சியான வசீகரத்தை அளிக்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் பாடலின் மூலம் உற்சாகமும் துள்ளலும் நிறைந்த இசை உலகிற்குள் புதிய முயற்சியாக  இறங்கியுள்ளார். அனைவரது மனநிலையையும் உயர்த்தி, உடனே மனதில் பதியும்  விதமாக இந்த இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் ஒரு முக்கியமான நிகழ்வாக, இந்தப் பாடலின் மூலம் மணிசந்திரா முதன்மை நடன இயக்குநராக அறிமுகமாகிறார். முன்னணி நடன இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன், அவர் தனது தனித்துவமான உற்சாகமான மற்றும் ஸ்டைலிஷ் அணுகுமுறையை இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். “ஆடினே இருப்பேன்” பாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சிக்னேச்சர் ஹுக் ஸ்டெப்' ஏற்கனவே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையின் தாளத்துடன் இயைந்த அவரது நடன வடிவமைப்பு, கதாநாயகர்களின் ஆற்றல்மிகு நடிப்பை ஒரு படி மேலும் உயர்த்துகிறது.


ஜெயவரதன் தயாரிப்பில், Beyond Pictures நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “ஹேப்பி ராஜ்” உருவாகியுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்தத் திரைப்படம் நம்பிக்கை மற்றும் இலகுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட முழுமையான ஃபீல்-குட் என்டர்டெய்னராக வடிவமைக்கப்பட்டுள்ளது.


G. V. பிரகாஷ் குமார் ‘ஹேப்பி ராஜ்’ என்ற படத்தின் தலைப்பிறகு ஏற்றபடி கதாபாத்திரத்தில் புதுமையும் கவர்ச்சியும் கொண்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ; கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா உணர்ச்சி ஆழமும் இரக்கமும் கொண்டவராக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் தமிழ் திரையுலகிற்கு திரும்புவது இப்படத்தின் முக்கிய அம்சமாகும்; இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


படத்தில் ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, Sofa Boy ரசூல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் RK செல்வா, கலை இயக்குநர் குமார் கங்காப்பா, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இணைந்துள்ளனர். இணைத் தயாரிப்பாளராக ஜெயகாந்த் சுரேஷ் செயல்படுகிறார்; மக்கள் தொடர்பு பணிகளை ரேகா PRO மேற்கொள்கிறார்.


படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, பின்னணி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், “ஹேப்பி ராஜ்” தனது அடுத்த கட்டத்திற்குத் தன்னம்பிக்கையுடன் நகர்கிறது. கவர்ச்சியான இசை, இளமையை பிரதிபலிக்கும் காட்சிகள், தனித்துவமான நடன வடிவமைப்பு மற்றும் உற்சாகமான நடிப்புகள் ஆகியவற்றால் “ஆடினே இருப்பேன்” ஒரு புத்துணர்ச்சியான, மனநிறைவு தரும் திரையரங்க அனுபவத்திற்கான சரியான தொடக்கத்தை அமைத்துள்ளது.

 

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.


Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள்  தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.


முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.


‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.


‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.


இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

Pageviews