DC திரை விமர்சனம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'DC'.
வேலூரில் வசித்து வரும் கஸ்தூரி ராஜாவுக்கு, தனது மகன் லோகேஷை நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் ஒரு பெரிய ஆளாக வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவு. ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் லோகேஷ் தனது தாய் மாமன்களை கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறான். மகன் செய்த குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவனுடன் பேசுவதையே கஸ்தூரி ராஜா நிறுத்திவிடுகிறார். இந்நிலையில், போலீஸாரால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு உதவி செய்யும் முயற்சியில், லோகேஷ் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்கிறார். அதே நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு, அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்.
ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியை கொலை செய்ததால் லோகேஷை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகும் லோகேஷ், சஞ்சனாவை சந்திக்கிறார். சஞ்சனாவுடனான சந்திப்பு லோகேஷின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. லோகேஷை பிடிப்பதற்காக போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சஞ்சனா பரிதாபமாக சுட்டுக் கொல்லப்படுகிறார். சஞ்சனாவின் மரணம் லோகேஷை மேலும் உடைத்துப் போடுகிறது.
விபச்சாரத் தொழிலில் சிக்கித் தவித்த வாமிகா கபியை லோகேஷ் காப்பாற்றுகிறார். எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கும் வாமிகா, லோகேஷுடன் இணைந்து பயணிக்கத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில், தன்னை சீரழித்த மருத்துவரை வாமிகா கொலை செய்கிறார்.
இதனால், ஏற்கனவே போலீஸாரால் தேடப்பட்டு வரும் லோகேஷுடன் வாமிகாவும் சேர்ந்து போலீஸாரின் குறியாகிறார். இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றனர்.
ஒருபுறம் போலீஸாரின் துரத்தல், மறுபுறம் கடந்த காலத்தில் செய்த குற்றங்களின் நிழல் என இருவரின் பயணமும் பரபரப்பாகத் தொடர்கிறது. லோகேஷும் வாமிகாவும் போலீஸாரிடம் இருந்து தப்பித்தார்களா? மகன் செய்த செயல்களால் அவனிடம் பேசாமல் இருக்கும் கஸ்தூரி ராஜா, இறுதியில் மகனுடன் பேசினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
லோகேஷ் கனகராஜின் நடிப்பு: இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ், 'தாஸ்' கதாபாத்திரத்தில் கேங்ஸ்டர் லுக்கிலும், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சந்திரா கதாபாத்திரத்தில் வாமிகா கபி எமோஷனலான காட்சிகளில் தத்ரூபமாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலமே அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசைதான். ஒவ்வொரு மாஸ் காட்சிகளையும் தனது மிரட்டலான இசையால் தியேட்டரில் வேற லெவலுக்கு கொண்டு சேர்த்துள்ளார்.
அருண் மாதேஸ்வரனின் வழக்கமான 'ரா' மற்றும் வன்முறை நிறைந்த மேக்கிங் ஸ்டைல், முகேஷ் ஜியின் அசாத்திய ஒளிப்பதிவு, மிரட்டலான ஆக்ஷன் கோரியோகிராபி ஆகியவை தியேட்டர் அனுபவத்தைக் கூட்டுகின்றன.
அனிருத்தின் வெறித்தனமான இசைக்காகவும், லோகேஷின் ஆக்ஷன் அவதாரத்திற்காகவும் திரையரங்குகளில் கண்டிப்பாக பார்க்கலாம்.











0 comments:
Post a Comment