டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 60 விநாடி வெர்டிக்கல் குறும்படப் போட்டியை அறிமுகப்படுத்தியது கதை கிளப்
வெர்டிக்கல் சினிமாவை மையமாகக் கொண்டு படைப்பாளர்களை ஊக்குவிக்கும் கதைஷார்ட்ஸ் (Kadhaishorts) நிறுவனத்தின் படைப்பாளர் சமூகமான ‘கதை கிளப்’ (KadhaiClub), டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 60 விநாடி வெர்டிக்கல் குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டி, புதிய மற்றும் அனுபவமிக்க திரைப்படப் படைப்பாளிகள் வெர்டிக்கல் திரைப்பட வடிவின் புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, 60 விநாடி குறும்படங்கள் மூலம் தங்களது படைப்பாற்றல், கருத்துகள் மற்றும் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.
போட்டியில் பங்கேற்போர், 60 விநாடிகள் கொண்ட வெர்டிக்கல் குறும்படம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளுக்கு மக்கள் எவ்வாறு ஆளாகிறார்கள், இத்தகைய மோசடிகளால் ஏற்படும் உணர்வுபூர்வமான மற்றும் நிதி ரீதியான பாதிப்புகள் மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றை கதை வடிவில் சித்தரிக்க வேண்டும்.
ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் இதற்கான பிரத்யேக இணைப்பைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தங்களின் படைப்புகளை வரும் ஜூலை 15-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக 98400 15719 என்ற எண்ணிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
வெற்றி பெறும் சிறந்த குறும்படத்திற்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அத்துடன், அந்த குறும்படம் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளத்தில் அவர்களின் கதை சொல்லும் திறமையை உலகறியச் செய்யும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும்.
குறுகிய கதைகள் மூலம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை உருவாக்குவதில் 'கதை ஷார்ட்ஸ்' நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தத் தளம் சமீபத்தில் 'தி அவுட்லாஸ்' என்ற குறு-நாடகத் தொடரை வெளியிட்டது. டிஜிட்டல் அரெஸ்ட் பிரச்சனை குறித்தும், அப்பாவி மக்கள் எவ்வாறு இதுபோன்ற மோசடிகளுக்கு எளிதில் ஆளாகிறார்கள் என்பது குறித்தும் இந்தத் தொடர் விளக்குகிறது. விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான கதை சொல்லும் முறையைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், இந்த முக்கியமான பிரச்சனை குறித்த தங்களின் பார்வையை வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தப் படைப்பாளிகளை 'கதை கிளப்' ஒன்றிணைக்கிறது.
மொபைல் போன்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதால், மக்கள் கதைகளைப் பார்க்கும் விதம் மாறி வருகிறது. இதனால், இது ஒரு சக்திவாய்ந்த கதை சொல்லும் ஊடகமாக உருவெடுத்துள்ளது. இது, படைப்பாளிகளை தங்களின் எளிமையான கதைகள் மூலம் பார்வையாளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. இது போன்ற முயற்சிகள் மூலம், இளம் படைப்பாளிகளை உருவாக்குவதோடு மட்டுமின்றி, சமூகத்திற்குத் தேவையான முக்கியமான விவாதங்களை இந்த தளத்தின் மூலம் கொண்டு செல்லவும் 'கதை கிளப்' திட்டமிட்டுள்ளது.
கதை கிளப் பற்றி: கதை கிளப் என்பது 'கதை ஷார்ட்ஸ்' நிறுவனத்தின் வெர்டிக்கல் சினிமா படைப்பாளர்களுக்கான சமூக தளமாகும். வெர்டிக்கல் கதை சொல்லும் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றல், வழிகாட்டுதல், புதிய வாய்ப்புகள் மற்றும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் மேடையை வழங்கி, வளர்ந்து வரும் வெர்டிக்கல் பொழுதுபோக்கு உலகின் ஒரு அங்கமாக அவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.











0 comments:
Post a Comment