கான் சிட்டி திரை விமர்சனம்

 

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'கான் சிட்டி' (Con City).


சென்னையில் வெவ்வேறு பணப் பிரச்சினைகளால் தவறிழைத்து, சட்டம் மற்றும் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க கர்நாடகாவின் முல்கி பகுதிக்கு ஓடி வரும் ஒரு குழுவே கதையின் நாயகர்கள். அங்கு ஒரு உணவகத்தை நடத்தி வரும் சரவணன் (அர்ஜுன் தாஸ்), மித்ரா (அன்னா பென்), ஜாக்கி (யோகி பாபு), ஜானகி (வடிவுக்கரசி), மற்றும் ஜீவா (அகிலன்) ஆகியோர் சூழ்நிலை காரணமாக ஒரு போலி குடும்பமாக வாழ்கின்றனர். அன்னா பென் குழந்தை கடத்தப்படும்போது, அவசரத் தேவைக்காக இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு பெரிய மோசடியைத் திட்டமிட்டு அரங்கேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இறுதியில் குழந்தையை கடத்தியது யார்? எதற்காக ? அன்னா பென் குழந்தையை அர்ஜுன் தாஸ் காப்பாற்றினாரா ? இல்லையா? என்பதே ‘கான் சிட்டி ’ படத்தின் மீதிக்கதை.


எப்போதும் மிரட்டலான வில்லன் அல்லது சீரியஸான கதாபாத்திரங்களில் தோன்றும் அர்ஜுன் தாஸ், இதில் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் புதுமையாகத் தெரிகிறார். அன்னா பென் தனக்குக் கொடுக்கப்பட்ட எமோஷனல் மற்றும் த்ரில்லர் காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். வடிவுக்கரசி மற்றும் யோகி பாபுவின் காமெடி டைமிங் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.


அரவிந்த் விஸ்வநாதனின் விறுவிறுப்பான ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்தின் டார்க் காமெடி த்ரில்லர் உணர்வைக் கூட்டுகின்றன.


ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதை மைய கருவாக வைத்து ஒரு முழு நீள காமெடி கலந்த குடும்ப திரைப்படத்தை உருவாகியிருக்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இத்திரைப்படத்தில் மூன்று குடும்பங்கள் வெவ்வேறு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இவர்கள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைவது போல கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.

0 comments:

Pageviews