அனந்தன் காடு திரை விமர்சனம்

 

1989-ல் நடக்கும் கதை தமிழீழ போராளியான ஆர்யா இலங்கை படையினரால் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அதன் பிறகு கேரளா வருகிறார். அம்மாநில முதலமைச்சர் தனக்கு எதிராக செல்படுபவர்களை சிறிய கூலிப்படை  கும்பலை வைத்து கொலை செய்கிறார்.  அந்த கும்பலில் ஆர்யா போய் சேர்கிறார். அந்தக் கூலிப்படைக்கு முதலமைச்சருக்கு  இன்னொரு வரை கொலை செய்யும் வேலையைக்  கொடுக்கிறார். அதை ஆர்யாவே முன்னின்று செய்கிறார்.   ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன்னை பற்றி அனைவருக்கு  தெரிய வரும் என்று எண்ணும் முதல்வர் ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்.  இறுதியில் ரவுடி கூட்டத்தை என்கவுண்டரில்  இருந்து ஆர்யா காப்பாற்றினாரா? இல்லையா? முதல்வரின் உண்மையான முகம் வெளியே தெரிந்ததா ? இல்லையா?  என்பதே  ‘அனந்தன் காடு’ படத்தின் மீதிக்கதை.


ஆர்யா தனது வழக்கமான மாஸ் ஹீரோ பாணியைத் தாண்டி, அமைதியான மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் அச்சுறுத்தலான, வித்தியாசமான தோற்றத்தில் வரும் இந்திரன்ஸ், ஒட்டுமொத்தப் படத்திற்கும் மிகப்பெரும் பலமாக அமைந்து ரசிகர்களின் கைதட்டலைப் பெறுகிறார். முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத், சுனில், விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற வேடங்களில் நடத்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் பரபரப்பான மற்றும் சீரியஸான காட்சிகளை நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் திரையில் கடத்தியுள்ளது. இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.


உண்மை சம்பவத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை நகரத்து சென்றிருக்கும்  இயக்குநர்  ஜியேன் கிருஷ்ணகுமார்  இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றிருக்கிறார். 


ஆர்யா மற்றும் இந்திரன்ஸின் சிறந்த நடிப்புக்காகவும், அழுத்தமான சில அரசியல் காட்சிகளுக்காகவும் அனந்தன் காடு படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

0 comments:

Pageviews