"எல்லோரையும் நம்பாதே" என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.Ravi mohan


SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி முதல் பொன்னியின் செல்வன் வரை, ரவி மோகன் பல வேடங்களில் நடித்திருக்கிறார், இப்போது அவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால், மனதளவில் தான் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் ஒரு திரைப்பட மாணவர் என்றே அவர் குறிப்பிடுகிறார். பள்ளிக்காலத்தில் அவர் முன்வரிசை மாணவராக இருந்திருக்காவிட்டாலும், கல்லூரிக்காலம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. "எனக்கு எதன் மீது உண்மையான ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக நான் எனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்; எனக்கு அந்த விஷயம் 'சினிமா'தான்," என்று, தன்னைத் தொடர்ந்து இயங்க வைக்கும் உந்துசக்தி குறித்துப் தொகுப்பாளர் ஜகனிடம் பகிர்ந்துகொண்டார்,

மேலும், திரையுலகில் தனது பயணம் ஒரு ஸ்பாட் பாயாக (spot boy) எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றி ஜெகனிடம் அவர் மனம் திறந்து பேசினார், அத்துடன் தான் வளரக் காரணமான சினிமாவுக்கு ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியையும் செலுத்தினார். "என் தந்தை திரைப்படங்களை அவற்றின் சுவையை வைத்தே அடையாளம் காண்பார்," என்று ரவி மோகன் அன்போடு நினைவுகூர்ந்தார். ரவி மோகன் குறித்து இணையத்தில் எப்போதும் பலவிதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில கமெண்டுகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் வாயடைக்க வைத்தது என்றே கூறலாம். அதில் ஒரு கமெண்டுக்கு, "அவனை கொஞ்சம் இங்க வர சொல்லு'' என்று ரவி மோகன் கலகலப்பாக கூறினார்.

பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பைஸியான 'காரசாரம் சேலஞ்ச்' செக்மென்ட் வந்தது. அதில் ரவி மோகன் எந்தவித தயக்கமும் இல்லாமல் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், "எனக்கே கார சாப்பாடா?" என்று குறும்பாக கேட்ட விதம், உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் நினைவுகூறலாக அமைந்தது. ஆனால் அந்த எபிஸோட், ரவி மோகனால் மட்டுமே பதிலளிக்கக்கூடிய கேள்விகள் பலவற்றால் நிறைந்திருந்தது. 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை (sequel) அவர் ஒருபோதும் உருவாக்காததற்கான ஒரே காரணம் என்ன? தன் படங்களில், இதில் ஏன் நடித்தோம் என்று அவர் வருந்தும் ஒரே படம் எது? மேலும், தான் ஒருபோதும் இணைந்து நடிக்கவே கூடாது என்று அவர் எண்ணும் ஒரே நடிகர் யார்? போன்ற சிக்கவைக்கும் பல கேள்விகளுக்கான பதில்களை அறிய, நீங்கள் அந்த அவசியம் இந்த எபிஸோடைப் பார்த்தே ஆக வேண்டும்.

இறுதியாக, மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்: எந்த ஒரு நடிகரின் நடிப்புத் திறன் அவருக்கு மகிழ்ச்சியையும், அதே சமயம் சற்றும் பொறாமையையும் ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு , ரவி மோகன் ஒரு கணம் கூடத் தயங்காமல் பதிலளித்தார். அந்த நடிகர் வேறு யாருமல்ல; அவருடைய மகனான ஆரவ் ரவிதான். திரையுலகைச் சேர்ந்த நண்பர்களில், அவர் முழுமையாக நம்பும் நண்பர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கான பதிலும் அவரிடம் இருந்து மிக இயல்பாகவே வெளிவந்தது, அவர் வேறு யாருமல்ல, கார்த்திதான். "மேலும், என்னைப் பற்றியும் அவரும் இதே கருத்தைத்தான் கூறுவார் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

இரண்டு பதில்கள், அவை இரண்டும் அவர் மனதில் இருந்து வந்தவை, அப்படியே அவர் அந்த அறையில் இருந்த அனைவரின் இதயத்தையும் மீண்டும் ஒருமுறை உருக வைத்தார். தனது பிரபலமான ஹிப்-ஹாப் பாடலான 'மக்கமிஷி'யை ஒரு முழுமையான பரதநாட்டிய பெர்பாமென்ஸாக மாற்றி, பின்னர் தொகுப்பாளர் ஜெகனுக்கு அதே ஸ்டெப்களை பொறுமையாகக் கற்றுக் கொடுத்ததோடு, அந்த எபிஸோட் ஒரு இனிமையான தருணத்துடன் நிறைவடைந்தது. இது ரவி மோகனால் மட்டுமே சாத்தியம்.

உங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களான ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், ஐஸ்வர்யா ராஜேஷ், டிஎஸ்பி ஆகியோரை SUN NXT-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' எபிஸோட்களில் காணுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும், SUN NXTஇல் மட்டும் இதன் புதிய எபிஸோட்கள் வெளியாகின்றன.

SUN NXT பற்றி...

SUN NXT என்பது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளவாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் நாலாயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களையும், 44க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்குகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், லைவ் டிவி மற்றும் டிவிக்கு முன்பே பார்க்கும் வசதி கொண்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள SUN NXT, உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தாயகமாக திகழ்கிறது.

0 comments:

Pageviews