‘கந்தனின் புகழ் மாலை’ ஆடியோ வெளியீட்டு விழா: மறைந்த இசையமைப்பாளரின் கனவை நனவாக்கிய நெகிழ்ச்சியான நிகழ்வு.kandan pugaz maalai
வேலன் ஆடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் "விக்ரம் வருண்" இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கந்தனின் புகழ் மாலை’ பக்தி ஆல்பத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சினிமா துறையில் ‘கொம்பன்’, ‘குட்டி புலி’, ‘வீர சிவாஜி’, ‘தகராறு’, ‘பானா காத்தாடி’,"முதல் இடம் "போன்ற முன்னணி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும் ‘eyeballfilm Ad Film Agency"’ மூலம் 70க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியவருமான "விக்ரம் வருண்"
இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார்.
இந்த ஆல்பத்திற்கு திரு. எம்.எஸ். பாரதி இசையமைத்துள்ளார். பாரம்பரிய மற்றும் நவீன இசைக்கருவிகளைத் தொழில்நுட்ப ரீதியாக மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி ஐந்து பாடல்களையும் மிக வித்தியாசமான முறையில் அவர் உருவாக்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த ஆல்பம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் காலமானார். அவரது வாழ்நாள் கனவை நனவாக்கும் வகையில் தயாரிப்பாளர் M.முருகன் அவர்களின் முழு ஆதரவோடு இந்த விழா அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் தமிழ் திரையுலகின் முன்னணிப் பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீவர்த்தினி (இசையமைப்பாளர் தமன் மனைவி), சுருமுகி மற்றும்
வி.எம். மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர். எடிட்டிங் பணிகளை
எம்.எஸ். கோபியும், கேமரா பணிகளை கிறிஸ்டோ பாப்பும் கவனித்துள்ளனர். நடன அமைப்பை மாஸ்டர் மோகன் பரமா,மேக்கப் வரலக்ஷ்மியும்,பரத நடனத்தை லோஹிதா மற்றும் சுஷ்மிதா இருவரும் நடன இயக்குநர் மோகன் பரமாவுடன் இணைந்து
அமைத்துள்ளனர்.
விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய இயக்குநர் விக்ரம் வருண்
"இது முருகப் பெருமானின் அருளால் அமைந்த ஆல்பம். எனது தயாரிப்பாளர் M.முருகன் அவர்கள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கிப்ட். மறைந்த இசையமைப்பாளர் பாரதி அவர்களின் கனவை நனவாக்கப் பாடுபட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கூறினார்.
#கந்தனின்புகழ்மாலை #murugandevationalsong #MSBharathi #mudicdirectorMSBharathi #directorvikramvarunn #producerMMurugan
#eyeballfilmadagency #velanaudios #anbazhagan #DOPChristobob #choreographymohanparama
#editingMSGopi #sivaprfactory #prosivakumar #ActressAnukrishna #anuradhasriram #singersrivarshini #smuruki
#vikramvarunn










0 comments:
Post a Comment