பைக்கர் திரை விமர்சனம்

 

முன்னாள் மோட்டார்  பைக் பந்தய வீரராக  இருக்கும் டாக்டர் ராஜசேகர்   தன்னைப் போலவே தன்னுடைய மகனான ஷர்வானந்த்தை உருவாக்க நினைக்கிறார். அதற்காக கடுமையான பயிற்சி கொடுக்கிறார் .  ஷர்வானந்த்தும் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருகிறார்.


இதனையடுத்து ஷர்வானந்த் பல போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெறுகிறார். இதே சமயம் நாயகி மாளவிகாவுடன் காதல் ஏற்படுகிறது. திடீர்  என மாளவிகாவை திருமணம்  செய்து கொண்டு அப்பா ராஜசேகரை விட்டு பிரிந்து செல்கிறார்.


இந்நிலையில் ஷர்வானந்த்தை ஒப்பந்தம் செய்த நிறுவனம் ராஜசேகரிடம் பணத்தை திருப்பி கேட்கிறது. தந்தையின் கௌரவத்தை காப்பாற்ற ஷர்வானந்த் சர்வதேச அளவில் நடக்கும் பைக் ரேஸ் போட்டியில்  கலந்து கொள்ள நினைக்கிறார். ஆனால் அப்பா ராஜசேகர், ஷர்வானந்த்திற்கு பயிற்சி கொடுக்க மறுக்கிறார்.


இறுதியில் அப்பா ராஜசேகர் மகனுக்கு பயிற்சி கொடுத்தாரா? இல்லையா? சர்வ தேச போட்டியில் ஷர்வானந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்றாரா ? இல்லையா? என்பதே  ’பைக்கர்’   படத்தின் மீதிக்கதை.


மோட்டார் பைக் பந்தய வீரராக நடித்திருக்கும்  ஷர்வானந்த்  அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். காதல், அப்பா பாசம், சண்டை, செண்டிமெண்ட் , எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பைக் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக எடுக்கும் பயிற்சி  அவரது  கடின உழைப்பு தெரிகிறது.


நாயகியாக நடித்திருக்கும் மாள்விகா நாயர், இயல்பான நடிப்பால் கவர்கிறார். காதலியாக சாகசத்திற்கு ஆதரவு கொடுப்பதும் , ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் போது  அதே சாகசத்தை பார்த்து பயப்படும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  


நாயகனின் அப்பாவாக  நடித்திருக்கும் ராஜசேகர், அனுபவ நடிப்பால் நிஜ பயிற்சியாளரை போல இருக்கிறார். கண்டிப்பு மிக்க பயிற்சியாளராகவும் , பாசத்தை வெளிகாட்டிக் கொள்ளாத அப்பவாகவும் , மாணவனை  வெற்றி பெற வைக்க நினைக்கும் குருவாகவும் தன் திறமையை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.


தொழிலதிபராக நடித்திருக்கும் அதுல் குல்கர்னி. நாயகி அம்மாவாக நடித்திருக்கும் துளசி,  என படத்தில் மற்ற கதாபத்திரத்தில் நடித்த அனைவரும்  கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஜிப்ரான், இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது. ஜெ.யுவராஜ்,  ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.


உண்மை  சம்பவத்தை மைக்கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி, இத்திரைப்படத்தில்   பைக் பந்தயம், அப்பா – மகன் பாசம், காதல்.  லட்சியம் என அனைத்தையும் கலந்து ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.  குறிப்பாக பைக் பந்தய போட்டி படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பிரமாண்ட அனுபவத்தை கொடுக்கும்  

0 comments:

Pageviews