காளிதாஸ் 2 திரை விமர்சனம்
ஒரு பிரம்மாண்ட அபார்ட்மெண்ட். அங்கே ஒரு சூட்கேஸில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்படும் சிறுமியின் சடலம். இந்தக் கொடூரக் கொலையின் பின்னணியைத் தேடி களம் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் காளிதாஸ். ஒருபுறம் அஜய் கார்த்திதான் கொலையாளி என அடித்துச் சொல்லி விசாரணையை ஒரு பக்கம் திருப்புகிறார் பவானி ஸ்ரீ. காளிதாஸின் விசாரணை சூடுபிடிக்கும் வேளையிலேயே, அதே குடியிருப்பில் அடுத்தடுத்து அரங்கேறும் மரணங்கள் அதிர வைக்கின்றன. இந்த கொலைகளை யார் செய்வது ? எதனால் நடக்கிறது ? என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் அஜய் கார்த்தி அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, நேர்மையான அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள சங்கீதா, தனது முதிர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கிஷோரும், பிரகாஷ் ராஜும் தங்களின் கேமியோ மூலம் திரையை ஆக்கிரமிக்கிறார்கள். சிறியவேடம் என்றாலும் கவனிக்க வைக்கும் வேடமேற்றிருக்கிறார் அபர்ணதி
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் விதத்தில் உள்ளது.
சிறுமி கொலை சம்பவத்தை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை யார் ? கொலைகாரன் என்று யூகிக்க முடியாத விதத்தில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
காளிதாஸ் 2 - சூப்பர் சஸ்பென்ஸ் த்ரில்லர்











0 comments:
Post a Comment