போலீஸ் பேமிலி திரை விமர்சனம்
சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் சரவணன் தனது மகனுக்காக ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை மதுரையில் வாழ்த்து வருகிறார். இதற்கிடையில் ஒருநாள் இரவில் இரு சக்கர வாகனத்தில் வரும் வாலிபரை கஞ்சா கடத்தியதாக போலீஸ் கைது செய்கிறார்கள்.
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அந்த இளைஞரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் கடுமையாக தாக்குகிறார்கள். மயக்க நிலையில் இருக்கும் இளைஞரை ஊருக்கு வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டுவிடுகிறார்கள்.
மறுநாள் அந்த இளைஞர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாகவும் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது அப்பா சரவணனுக்கு தெரிய வருகிறது. தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க நினைக்கும் சரவணன், சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார்.
ஒவ்வொரு போலீஸ் குடும்ப உறுப்பினரை கொலை செய்யும் சரவணன் கடைசியாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாவின் இரண்டு மகள்களை கொலை செய்ய முயற்சிக்கிறார். இறுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா சரவணனிடம் இருந்து தனது மகள்களை காப்பாற்றினாரா? இல்லையா? சரவணன் மகனை கொலை செய்தது யார்? என்பதை கண்டுபிடித்தாரா ? இல்லையா? என்பதே ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜா மலைசாமி, கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். இரண்டு பெண்களுக்கு அப்பாவாகவும் தன்னுடன் வேலை பார்ப்பவர்களை காப்பாற்ற எடுக்கும் முயற்சி, பாசம், ஏக்கம், தவிப்பு என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சியில் மிரட்டுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சரவணன் பாசக்கார அப்பாவாக , மிரட்டும் வில்லனாகவும் வேறுபட்ட நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். போலீசாக நடித்திருக்கும் காதல் சுகுமார் கதை நகர்விற்கு துணை நிற்பதோடு யாரும் யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிஷா தூபே , சுரேகா , ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற வேடங்களில் நடித்த னைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பக்க பலமாக உள்ளது. ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு கதை விறுவிறுப்பாக செல்ல கொடுத்தால் பலமாக உள்ளது.
காவல்துறைக்கும் ரவுடிக்கும் இடையே நடக்கும் மோதலை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இயக்குநர் பாலு.எம், இத்திரைப்படத்தில் எதிர்பாராத சம்பவத்தால் காவல்துறை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
Cast details:
1. Raja Malaisamy as S I Raja Hero
2. Paruthiveeran Saravanan AS Dhana Villain
3. Nisha Dubey AS Anitha– HEROINE
4. Sureka R AS Viji Daughter
5. Kadhal Sukumar AS Suresh Ettu
6. Rojan Leon as Karthi – Anti HERO
7. Rathinam AS Inspector Kannan
8.Doss Santhakumar AS MLA Murthy
9. MS Selva as Kalli – Villains Assistant
crew details:
1. PRODUCTION HOUSE :ON THE TABLE PRODUCTIONS
2. PRODUCED BY -.Malaisamy A M Raja
3. WRITTEN & DIRECTED BY -Balu .M
4. DOP -Jayakumar Thangavel
5. EDITOR - M S Selva
6. ART - Mohan
7. MUSIC - Jaya K Doss
8. LYRICS -Mahamuni and So Pa Vasanth
9. STUNTS - Dragon Josh
10. COSTUMER - SELVAM
11.SOUND DESIGNS - Sonic Studios Siva
12. VFX - Govind
13. DI - Cuviyam Studios
14. MAKEUP - Vinoth
15. CO-DIRECTOR - Raja Malaisamy, Jeyaraj
16. CHIEF ASSOCIATE - Murugesh
17. PRODUCTION EXECUTIVE - Arun
18. STILLS - Vinoth R
19. PRO - John A
20. PUBLICITY DESIGNS - Selva
21. CO.PRODUCER - Suresh Santhagunam and Bosco Vaz











0 comments:
Post a Comment