காதல் ரீசெட் ரிபீட் திரை விமர்சனம்

 

மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் இருவரும் ஸ்காட்லாந்தில் இருக்கின்றனர். ஜியாவிற்கு தலையில் அடிபட்டதால், அவருக்கு ஆன்டோகிரட் அம்னீசியா இருக்கிறது. நடந்தது எதுவும் ஞாபகம் இல்லாமல் போகிறது. ஜியாவை ஒருதலையாகக் காதலிக்கும் மதும்கேஷ், அவரைத் தன் பராமரிப்பில் வைத்துக்கொள்கிறார். இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார் எம்.எஸ். பாஸ்கர் உதவியாக இருக்கிறார். ஜியாவின் உண்மையான காதலன் யார்? மதும்கேஷின் தியாகக் காதல் வென்றதா அல்லது ஜியாவின் நினைவுகள் திரும்பியதா? என்பதே மீதிக்கதை.


அறிமுக நாயகன் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் அசோகன் இரண்டாம் பாதியில் நகைச்சுவை மற்றும் கலகலப்பைத் தருகிறார். எம்.எஸ். பாஸ்கர் தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.


ஹாரிஸ் ஜெயராஜின் இசை மென்மையாகவும், பழைய நினைவுகளைத் தூண்டும் வகையிலும் உள்ளது. பாடல்கள் இனிமையாக இருந்தாலும், சில இடங்களில் அவரது பழைய பாடல்களின் சாயல்  அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்து நாட்டின் இயற்கை காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.


கதையில் சின்ன சின்ன குழப்பங்களை கொடுத்திருந்தாலும், அழகான ஒரு காதல் கதையை கொடுக்க இயக்குனர் விஜய் தவறவில்லை.

0 comments:

Pageviews