முத்து என்கிற காட்டான் இணைய தொடர் விமர்சனம்

 

ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பாறையின் மீது வெட்டப்பட்ட முத்து என்கிற காட்டான் தலை மர்மமான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. உடலைக் காணவில்லை. அந்தத் தலையைச் சுற்றி நிறைய பணமும் சிதறிக் கிடக்கிறது. அந்த உடல்  எங்கே? அவரை கொன்றது யார்?  என்ற கேள்விகளுடன் கதை தொடங்குகிறது. முத்து என்கிற காட்டான் யார்? அவர் ஒரு கொலைகாரனா, அல்லது பாதிக்கப்பட்டவனா? என்பதே 'முத்து என்கிற காட்டான்' தொடரின் கதைக்களம்.

 

 

எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விஜய் சேதுபதி, இதில் காட்டான் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். ஒரு கட்டுக்கதையாகவும், உண்மையாகவும் வலம் வரும் அவரது கதாபாத்திரம் தொடருக்கு மிகப் பெரிய பலம். ஒரு பழிவாங்கும் கதையை வெறும் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷனாக மட்டும் காட்டாமல், கிராமத்து பின்னணியில் மனித இயல்புகள் குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளுடன் மிக நேர்த்தியாகக் கொடுத்துள்ளார். மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், மற்றும் கிராமத்து மனிதர்களாக வரும் பல நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் ஆகியோர் ஒளிப்பதிவும், ராஜேஷ் முருகேசனின்  மண் சார்ந்த பின்னணி இசையும் கதையின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்கின்றன.



முத்து என்கிற காட்டான் வெறும் பழிவாங்கும் கதை மட்டுமல்ல, அது மனித வாழ்வின் நோக்கத்தையும், குற்றத்தின் பின்னணியையும் அலசும் ஒரு அழுத்தமான படைப்பு. 

0 comments:

Pageviews