ஓ பட்டர்பிளை திரை விமர்சனம்
திருமணமான கௌரி (நிவேதிதா சதீஷ்) தனது கணவர் அர்ஜுனுடன் (அட்டுல்) கொடைக்கானல் செல்கிறார். அங்கு தனது பழைய காதலைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியாமல் மனப்போராட்டத்தில் இருக்கிறார். இந்த உளவியல் ரீதியான சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை.
நிவேதிதா சதீஷ் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தைத் தாங்குகிறார். அட்டுல் மற்றும் சிபி சந்திரன் தங்கள் பாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். நாசர் சிறிய பாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார்.
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் குறைவாக இருந்தது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.அதெ போல் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் காட்சிகளை நுட்பமாக கையாண்டுள்ளார்.
ஒரு பெண்ணின் மன உலைச்சல் அந்தப் பெண்ணை எந்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்பதே முக்கிய கரு. அவளின் சிந்தனை மாறி மாறி ஒரு சமயத்தில் அனைத்திற்கும் பொறுப்பை அவள் தலையில் போட்டுக் கொள்கிறாள். அனைத்து செயல்களும் தற்செயலாக நடக்கிறதே தவிர அதற்கு யாரும், எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்பதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விஜய் ரங்கநாதன்.
ஓ பட்டர்பிளை திரைப்படம் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் .











0 comments:
Post a Comment