ஆழி திரை விமர்சனம்

 

ஒருவர் மீன்பிடி படகுகளை சரி செய்யும் மெக்கானிக் தொழிலை செய்து வருகிறார், அந்த வேலையை ஒரு பக்கமும் மற்றொரு பக்கம் போதைப் பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் அவள் கல்லூரியில் பயின்று வருகிறாள், இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் உடன் படிக்கும் ஒரு மாணவனை காதலிக்கிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த அவனும் மற்றும் தன் மகளுள் காதல் செய்யும் விஷயம் அவனுக்கு தெரிய வருகிறது. அவனை கடலுக்கு நடுவே கூட்டி சென்று கொலை செய்ய நினைக்கிறான், இதன் பின் என்ன ஆனது என்பதை சொல்வதே இந்த ஆழி படத்தின் மீதிக்கதை. 


சரத்குமார் பல படங்களில் அப்பா வேடத்தில் நடித்துள்ளார், எனினும் இதில் ஒரு புதுமையை காட்டியுள்ளார். வழக்கமான பாசக்கார அப்பா ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் கொடூரமான வில்லன் என இரண்டையும் நன்றாக கையாண்டுள்ளார், 

 இதில் இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். மரண பயத்தை காட்டிய காதலியின் தந்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு நம்மை ஆட்கொள்கிறது, மேலும் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார். அவருக்கான கதாபாத்திரம் குறைவாக என்றாலும் அதை நிறைவாக செய்து பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்.


அதே போல் வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா ஆகியோர் சிறு சிறு வேடங்களில் நடித்து தான் நடித்த கதாபாத்திரத்துக்கு ஆவண செய்துள்ளனர். 


 படம் முழுக்க கடலில் நடப்பது போல இருந்தாலும் நமக்கு சலிப்படையாமல் காட்சியை உருவாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர், அதே போல் ஜாஸி கிப்ட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் . வில்லியம் பிரான்சிஸின் பின்னணி கொடுத்துள்ளார் இரண்டும் நன்றாக இருந்தது. 


 ஆழ்கடலில் பயணப்படும் மீன்பிடி படகு ஒன்றில் கதை நடப்பதால் படத்திற்கு ‘ஆழி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஒரு மீன்பிடி படகு, அதில் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான மனம் மற்றும் உடல் ரீதியான போராட்டங்களை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தை இயக்குநர் மாதவ் ராமதாசன் கடத்தியிருக்கிறார். 


மொத்தத்தில், ‘ஆழி’ படத்தை திரையில் கண்டிப்பாக பார்க்கலாம்.

0 comments:

Pageviews