My Lord திரை விமர்சனம்
சென்னையில் வசிக்கும் மத்திய அமைச்சரான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடி வருகிறார். இதனையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் அவரது குடுமபம் தீவிரம் காட்டி வருகிறது. இதே சமயம் ஆஷா சரத் உலகத்திற்கு தான் ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார்.
இதனையடுத்து அரிதான இரத்தப் பிரிவை சார்ந்த ஆஷா சரத்துக்கு மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த சசிகுமாரின் கிட்னி சரியாக இருப்பதை அறிந்து அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சி செய்கிறார்கள்.
மறுபக்கம் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சசிகுமார் மனைவி சைத்ராவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சைத்ராவிற்கு உடலில் இரத்தப் போக்கு எற்பட தனியார் மருத்துவ மனையில் சேர்கிறார். மருத்துவ செலவிற்காக ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்க மிகப்பெரிய சிக்கலில் சசிகுமார் மாட்டிக்கொள்கிறார்.
இதனையடுத்து சசிகுமாருக்கு உதவி செய்வதாக கூறி ஆஷாசரத் ஆள் சென்னைக்கு அழைத்துச் செல்கிறார். மருத்துவ மனையில் தான் எதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை அறிந்துகொள்ளும் சசிக்குமார் தன் மனைவியுடன் அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
இறுதியில் மத்திய அமைச்சர் ஆஷாசரத்திற்கு அறுவை சிகிச்சை நடந்ததா? இல்லையா? சசிகுமார் கிட்னி கொடுத்தாரா? இல்லையா? என்பதே ’மை லார்ட்’ படத்தின் மீதிக்கதை.
முத்துச்சிற்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மனைவி மீது காட்டும் அன்பு, அக்கறை , தன்னை ஏமாறுகிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கும் ஓடி சென்று உதவும் மனது, என்று எதார்த்த நடிப்பபை அழகாக வெளிப்படுத்தி அனைவரின் மனதை கவர்கிறார்.
சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சைத்ரா ஜே.ஆச்சார், இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். குறிப்பாக சைத்ராவின் அப்பா ஆவி தன்னுள் புகுந்து கொண்டதாக சொல்லி செய்யும் அலப்பறை ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது.
மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆஷா சரத், பார்வையாலே மிரட்டிக்கிறார். படத்தின் இறுதிக்காட்சியில் காட்சியில் பாராட்டை பெறுகிறார். பத்திரிகையாளராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் நியாயத்திற்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் ரசிக்க முடிகிறது. நீதிபதியாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக நடித்திருக்கும் இயக்குநர் கோபி நயினார், என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உளள்து. நீரவ் ஷா ஒளிப்பதிவு அழகு
கிட்னி திருட்டை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன் இத்திரைப்படத்தில் பணம் படைத்தவர்கள் எளியவர்களை எந்த வகையில் எல்லாம் ஆட்டிப்படைகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எளியவர்களின் குரலாக ஒளித்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
.jpg.jpeg)










0 comments:
Post a Comment