ரெட் லேபில் திரை விமர்சனம்
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இதில் சட்டமன்ற உறுப்பினரான ஆர்.வி உதயகுமாரின் மகனான பாண்டியன் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ரோஹித் என்ற மாணவன் போட்டியிடுகிறார்
பாண்டியன் கல்லூரியில் செய்யும் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஆசிரியர்கள் ரோஹித் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர் நாயகன் லெனிடம் உதவி கேட்கிறார்கள்.
இந்த கல்லூரியில் படித்த காலத்தில் அடிதடி என்று இருக்கும் நாயகன் லெனின் தற்போது திருந்தி இருக்கும் நிலையில் மீண்டும் கல்லூரி தேர்தலில் அடிதடி வேண்டாம் என்று தவிர்க்கிறார், இதே கல்லூரியில் படிக்கும் தன் காதலி அஸ்வின் வேண்டுகோளை ஏற்று ரோஹித்திற்கு உதவி செய்ய கல்லூரிக்கு வருகிறார்
இந்நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் ஆர்.வி.உதயகுமாருக்கு தெரிய வர அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் . கல்லூரிக்கு வரும் நாயகன் லெனின் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
இறுதியில் நாயகன் லெனின் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தாரா? இல்லையா? நாயகி அஸ்மினை திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே ‘ரெட் லேபில்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் லெளின் அறிமுக நாயகன் போல இல்லாமல் இயல்பான நடிப்பபை கொடுத்த்திருக்கிறார். காதல், குடும்பம், நட்பு , காதல், சண்டை என அனைத்திலும் சிறப்பான நடிப்பபை கொடுத்து கவனத்தை ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஸ்மின் கல்லூரி மாணவியாக எதார்த்த நடிப்பபை கொடுத்திருக்கிறார். நாயகனை உருகி உருகி காதலிப்பது, நாயகனுக்காக இறுதிக்காட்சியில் இவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வித்யாசமான வில்லத்தனத்தை அழகாக கையாண்டுயிருக்கிறார்.முனீஷ்காந்த், அனுமோகன், கல்லூரி ஆசிரியர்கள், பாண்டியன், ரோஹித என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
கல்லூரி காதல், சஸ்பென்ஸ் , திரில்லர் ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.வினோத் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.











0 comments:
Post a Comment