வித் லவ் திரை விமர்சனம்

 

சென்னையில் டிசைனர் வேலை பார்க்கும் நாயகன் அபிஷன் ஜீவந்திற்கு அவருடைய அக்கா திருமணத்திற்காக பெண் பார்க்கிறார். பெண்ணை பற்றி எந்த தகவலும் கூறாமல் பெண்ணை சந்தித்து வருமாறு கூறுகிறார்.


இதனையடுத்து ஒரு காபி ஷாப்பில் அபிஷன் அனஸ்வரா சந்தித்து பேச  அப்போதுதான்  இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. இந்நிலையில் இருவரும் தங்களுடைய முதல் காதலை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.


அப்போது அனஸ்வராவிற்கு ஒரு யோசனை வர இருவரும் தங்களுடைய முதல் காதலைத் தேடி செல்லலாம் என்று கூறுகிறார். இந்த பயணத்தின் போது அபிஷன் அனஸ்வராவை காதலிக்கிறார்.


இறுதியில் அபினவ் காதலை அனஸ்வரா ஏற்றுக்கொண்டாரா? இல்லையா?  இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே  ‘வித் லவ்’ (With Love) படத்தின் மீதிக்கதை.


சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த்   பள்ளிப் பருவம் மற்றும் வாலிப பருவம் என இரண்டு தோற்றத்திலும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பள்ளி பருவத்தில் செய்யும் குறும்புகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.  சொல்லாத காதலுக்காக வருந்துவது, பள்ளி ஆசிரியரை தவறுக்காக புரிந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்பது, அப்பாவின் ஆசையை நிறைவேற்றி வைப்பது என அனைத்திலும் அசத்தலான நடிப்பபை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.


மோனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன் அழகு தேவதையாக தோன்றுகிறார்.  பள்ளி பருவத்தில் துறுதுறுவென நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். காதல், பாசம், உணர்வு, நடனம் என அனைத்திலும் உணர்வு ஊர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்.


சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர்  சசிகுமார், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன் எதிர்த்த நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். அபிஷன் ஜீவிந்த் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன் உணர்வு பூர்வமான நடிப்பு, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி என மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை  கதையோடு பயணிக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு மறந்த நினைவுகளை நினைவுபடுத்துகிறது

.

முதல் காதலை தேடி செல்வதை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் மதன் இத்திரைப்படத்தில் , முதல் காதல். சொல்லாத காதல் , சொல்ல மறந்த காதல் ஆகியவற்றை அழகாக கையாண்டுயிருக்கிறார்.  இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் ரசிக்கும் வகையில்  கதையை கொண்டு சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

0 comments:

Pageviews