ஸ்வீட்டி நாட்டி கிரேசி திரை விமர்சனம்
கல்லூரியில் படிக்கும் நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் நட்பாக பழகி வருகிறார்கள். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாற ஒரு கட்டத்தில் காமத்தில் போய் முடிகிறது.
இந்நிலையில் நாயகன் த்ரிகுண் தான் ஏற்கனவே அக்கா வயதுடைய டியூஷன் டீச்சர் மற்றும் ஆண்டி வயதுள்ள ஒரு பெண்ணுடம் உடலுறவு வைத்துக் கொண்ட உண்மையை காதலியிடம் கூறுகிறார்.
இதனால் கோபமடையும் காதலி ஸ்ரீ ஜீத்தா வேறு வழியின்றி த்ரிகுணை திருமணம் செய்து கொள்கிறார். தன் கணவர் த்ரிகுணை கோத்தகிரியில் உள்ள தன் வீட்டிற்கு நாயகி அழைத்து செல்கிறார்.
யாரும் இல்லாத தனக்கு, தன் மனைவி மூலம் கிடைக்கும் உறவுகளை காண ஆவலோடு செல்லும் த்ரிகுண் , அங்கு தன் மனைவியின் அக்கா இனியா மற்றும் அம்மா ராதாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் நாயகன் த்ரிகுண் அதிர்ச்சி அடைய காரணம் என்ன? நாயகன் த்ரிகுணை நாயகி குடும்பம் ஏற்றுக்கொண்டதா ? இல்லையா? என்பதே ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ படத்தில் மீதிக்கதை.
கதை நாயகனாக நடித்திருக்கும் த்ரிகுண் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். காதல், காமம், காமெடி, ஆட்டம், பாட்டம் என்று படம் முழுவதும் அமர்க்களம் பண்ணியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், நடிப்பை காட்டிலும் கவர்ச்சிக்கு முக்கியத்தும் கொடுத்திருக்கிறார். டியூஷன் டீச்சர் நடித்திருக்கும் இனியா வழக்கமான நடிப்பபை கவர்ச்சியில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘சுந்தாரா டிராவல்ஸ்’ படத்தில் நாயகியாக நடித்த ராதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆண்டியாக வந்து அதிரடி கவர்ச்சி காட்டியிருக்கிறார்.தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு துணை நிற்கிறது. சி.விஜயின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.











0 comments:
Post a Comment