சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " M G 24 " அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார்
ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு " M G 24 " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசையா சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில் ஆகியோர் வில்லன்களாக நடிக்க இவர்களுடன் பிம்மிசிவா, அர்ஜுன் கார்த்திக், பிரபாகரன் நாகராஜன், யுவராஜ்.S, காளியப்பன், சுரேஷ் பாலஜி, பார்பர் பாலு, ஜெயஸ்ரீ ஸ்ரீதரன், சீனு, ரவி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
B. பாலாஜி & நவீன்குமார் இருவரும் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் உதவியாளராக பணியாற்றிய சதாசிவ ஜெயராமன் இந்த படத்திற்கு இசையமைக்க, பிரியன், பித்தன் வெங்கட்ராஜ், பூவிழி மூவரும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
பிரபல கலை இயக்குனர் V.K.நட்ராஜ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். பாலுமகேந்திரா பட்டறையின் மாணவர் நவீன்குமார் எடிட்டிங் செய்துள்ளார். வி.தனசேரன் கதை விவாதம் மற்றும் CG பணிகளை மேற்கொண்டுள்ளார். அருண்கார்த்திக் நடனம் அமைக்க, பிரவீன், ரஞ்சித் இருவரும் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.
மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் - ஜே ஆர் சினி வேர்ஸ்
தயாரிப்பு - ஜெயபால் சுவாமிநாதன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக்.
இவர் ஜிவி பிரகாஷ் நடித்து சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் படத்தில் அனைவரையும் மிரட்டிய மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் இயக்குனர் பயர் கார்த்திக் பேசியதாவது...
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக இதை உருவாக்கியுள்ளோம்.
உதவி இயக்குநராக இருக்கும் கதையின் நாயகனும்,அவன் நண்பர்களும் சென்னையில் இருந்து பாலக்காட்டில் இருக்கும் ஒரு வீட்டை வாங்குவதற்காக, அதன் மதிப்பை சரி பார்க்க நேரில் செல்கின்றனர். அங்கே எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்க அதிலிருந்து எப்படி தப்பித்தார்களா, அவர்களுக்கும், அந்த வீட்டில் இருந்தவர்களும் என்ன நடந்தது? என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.
பாலக்காட்டில் உள்ள ஒரு வீடு மகிழ் கோமான் என்ற பழைய ஜமீனுடையது அந்த வீட்டின் நம்பர் 24. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில் நடப்பதால் ஜமீனுடைய பெயரையும் வீட்டின் எண்ணையும் இணைத்து இந்த படத்திற்கு " M G 24 " என்று பெயர் வைத்துள்ளோம் என்கிறார் இயக்குனர் பயர் கார்த்திக்
படப்பிடிப்பு சென்னை,பாலக்காடு, கோவை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
படம் வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக இருப்பதால் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்று படக்குவினர் தெரிவித்துள்ளனர்.











0 comments:
Post a Comment