மார்க் திரை விமர்சனம்
பெரிய ரவுடியான நவீன் சந்திரா, தனது தம்பி விக்ராந்த் ஒரு பெண்ணுடன் ஓடி விட்டதை அறிந்து மிகுந்த கோபம் கொள்கிறார். அவரை தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார். பணத்திற்காக குழந்தைகளை கடத்தி, யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து விடுகிறார் விக்ராந்த். குழந்தைகளை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான கிச்சா சுதீப். அதே நேரம், விடிந்தால் முதல்வராக பதவியேற்கும் அரசியல்வாதியின் கொலை வீடியோ ஒன்று கடத்தப்பட்ட சிறுவனிடம் இருக்கும் போனில் இருக்கிறது. அதற்காக அந்த சிறுவர்களை கொல்ல போலீஸ் படையை அனுப்புகிறார் அரசியல்வாதி. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
சுதீப் தனது அதிரடியான நடிப்பு மூலம் முழு படத்திலும் பரபரப்பை பற்ற வைக்கிறார். படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி விடுகிறார். இவரது தந்தையாக ஜி.எம் குமார், தம்பியாக விக்ராந்த் தனித்துவ நடிப்பால் தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். கொஞ்சம் காமெடி கலந்த வில்லனாக சோமசுந்தரம் தன் பங்குக்கு சிக்சர் அடிக்கிறார். மற்றொரு காமெடியனாக யோகி பாபு வந்து போகிறார்.
இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் மாஸையும், ஹீரோயிஸத்தையும் தெறிக்க விட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் தெரிய வைத்திருக்கிறார்.
விஜய் கார்த்திகேயா எழுதி இயக்குகிறார். தொடக்கம் முதல் இறுதிவரை நாயகன் கிச்சா சுதீப்பை கொண்டாடும் வகையில் காட்சிகள் வசனங்கள் பில்டப்கள் எல்லாம் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.











0 comments:
Post a Comment