திரௌபதி 2 திரை விமர்சனம்
இந்தியா இஸ்லாமியர்கள் ஆட்சி அதிகார வசமிருந்த காலகட்டத்தில் இந்து மதத்தினர் வித விதமாக தாக்கப்பட்டது பற்றியும், மத மாற வலியுறுத்தி நடந்த கொடுமைகள் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதலாம். நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் எடுக்கலாம். அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜி, தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த மன்னர் வீர வல்லாளர் பற்றியும், அவரது ஆட்சிக்காலத்தில் அந்த பகுதிக்குட்பட்ட இந்து மதத்தினர் இஸ்லாமிய அதிகார ஆளுமைகளிடம் சிக்கிச் சீரழிந்த வேதனையான வரலாற்றையும் சற்றே கற்பனை கலந்து உருவாக்கியிருக்கிறார்.
வீரசிம்ம காடவராயர் பாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, இந்த பாத்திரத்துக்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. வல்லாள மகராஜாவாக நடித்திருக்கும் நட்டியின் வசன உச்சரிப்பில் தமிழ் சுத்தமாக இருக்கிறது. நாயகியாக திரெளபதி தேவி கதாபாத்திரத்தில் வரும் ரக்ஷனா இந்துசூடன்தான் படத்தின் ஹைலைட். அந்த மிடுக்கான அழகு எடுப்பாக இருக்கிறது. முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிராக் ஜானியின் தோற்றமே அவரது வில்லத்தனத்தை சொல்லி விடுகிறது. ஆகாதவர்களைக் கொன்று அவர்களை சமைத்து அதைக் கொடுத்து கொல்லப்பட்டவரின் உறவினர்களை உண்ண வைப்பது கொடூரம்.
இந்த நியாயமான பட்ஜெட்டுக்குள்ளேயே ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர், பிரம்மாண்ட படத்தின் நேர்த்தியை கொடுத்திருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார்.
நடந்த வரலாற்றை கையில் எடுத்துக்கொண்டு அதில் கற்பனையையும் சேர்த்து படமாக கொடுத்திருக்கும் மோகன் ஜி சின்ன பட்ஜெட்டில் இப்படியொரு வரலாற்று-சமூக கதையை சொல்ல முயற்சித்திருப்பது ஒரு வகையில் பாராட்டத்தக்கது. திரைக்கதை இன்னும் சரியாக அமைத்திருந்தால் திரௌபதி 2 ஒரு நல்ல படமாக வந்திருக்கும்.











0 comments:
Post a Comment