ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் சென்னையில் அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் டிஜிட்டல்

 

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் விற்பனையாளரான ரிலையன்ஸ் டிஜிட்டல், இன்று சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை சிறப்பு சலுகைகளுடன் அறிமுகப்படுத்தியது. ஓப்போவின் இந்த புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல் சென்னையின் முதல் அதிகாரப்பூர்வ அறிமுகமாகும்.


14 மாடலின் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ், இந்த பிராண்டின் நவீன தொழில்நுட்பத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த வரிசையில் ஓப்போ ரெனோ 15, ஓப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் முற்றிலும் புதிய ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி என மூன்று மாடல்கள் உள்ளன. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூம்களில் இவை முன்கூட்டியே கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த புதிய ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி போன்களை ரூ.45,999/- என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இத்துடன் ஏராளமான கூடுதல் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் டிஜிட்டல் வழங்குகிறது. 


சென்னை நெக்ஸஸ் விஜயா மாலில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான வெளியீட்டு விழா, ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. ஓப்போவின் இந்த புதிய ஸ்மார்ட்போனை நேரில் பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மிர்னாளினி ரவி கலந்து கொண்டார். இது அங்குள்ள அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.


இது வெறும் தயாரிப்பு அறிமுக விழாவாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பகுதிகளில், வாடிக்கையாளர்கள் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் போன்களை பயன்படுத்திப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் இந்த போனின் சிறந்த கேமரா வசதி, டிஸ்பிளே மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்ற. பரிசோதித்துப் பார்த்தனர். அதே சமயம், ரிலையன்ஸ் டிஜிட்டலின் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், கூகுள் ஜெமினி மூலம் இயங்கும் 'AI Portrait Glow', 'AI Pop Out', 'AI Eraser 2.0' மற்றும் 'AI Mind Space' போன்ற சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை விளக்கிக் காட்டினர்.


அறிமுக விழாவில் ஓப்போ நிறுவனத்தைச் சேர்ந்த வில் லி கூறுகையில், "இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான ஓப்போ பயனர்கள் உள்ளனர். சிறந்த கேமராக்கள், எளிமையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மாறி வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். ரெனோ 15 சீரிஸ், மேம்படுத்தப்பட்ட இமேஜிங், சிறந்த செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் முழுமையான செயல்திறனுடன் இந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. சென்னை போன்ற பரபரப்பான, தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ள நகரத்தில் இதை அறிமுகப்படுத்துவது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.


இதில் பேசிய நடிகை மிர்னாளினி ரவி, "என்னைப் பொறுத்தவரை, ரிலையன்ஸ் டிஜிட்டல் என்பது எப்போதும் புதிய மற்றும் நம்பகமான தொழில்நுட்பத்தைக் காணக்கூடிய ஒரே இடமாகும். இன்று இங்கு ஓப்போ ரெனோ 15 5ஜி-யை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த அழகிய புதிய போனின் சிறப்பு அம்சங்களை வந்து பார்க்குமாறு அனைவரையும் அழைக்கிறேன்," என்று கூறினார்.



ஓப்போ ரெனோ 15 இப்போது அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ், அஜ்மல் பிஸ்மி, ஜியோ மார்ட் டிஜிட்டல் மற்றும் www.reliancedigital.in இணையதளத்திலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ரூ.10,000 மதிப்புள்ள பரிசுகள், முன்னணி வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் எளிதான தவணைமுறை வசதிகளையும் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் போனை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியும் கிடைக்கும்.

0 comments:

Pageviews