உலக சாதனை: கிஷோர் கட்டாரியா வெளியிட்ட “108 தெய்வீக மகாவேல்”

 

புகழ்பெற்ற நகை வியாபாரியும், ஆன்மீகத் தொலைநோக்காளருமான,  மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா,  “108 தெய்வீக மகாவேல்” என்ற உலகின் முதல் முயற்சியாக, முருகப்பெருமானின் 108 தனித்துவமான, ஆய்வுசெய்யப்பட்ட வேல்களை தங்கம் மற்றும் வெள்ளியில் உருவாக்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 



உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட,  இந்த அபூர்வமான ஆன்மீக–கலை முயற்சியை,  பொன் மற்றும் வெள்ளியில் உருவாக்கப்பட்ட 108 மகாவேல்கள் ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இன்று தனியார் அரங்கில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, 108 பொன் வேல்களின் திருவிழாவை துவக்கி வைத்தார்.


மேலும், A2B (Adyar Ananda Bhavan) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்களான திரு. K. T. வெங்கடேசன் மற்றும் திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் மரியாதைக்குரிய விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் 108 வெள்ளி வேல்களின் திருவிழாவை திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா அவர்கள் துவங்கி வைத்தார்.


மேலும்  இந்த நிகழ்ச்சியில்,

The Jewellers & Diamond Traders Association-வின் தலைவர் திரு. ஜெயந்திலால் சல்லாணி – மகாவேல் வேல் லோகோவினை வெளியிட்டார் .


Government of Tamil Nadu-வின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) – மகாவேல் இணையதளத்தினை  துவங்கி வைத்தார். 



இந்நிகழ்வினில் 


மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா பேசியதாவது..,

இந்த 108 தெய்வீக வேல்கள் தங்கம்–வெள்ளியில் உருவான நகைகள் மட்டுமல்ல, உலகத்திற்கு வழங்கப்படும் தெய்வீக ஆசீர்வாதங்கள். பத்து குகையில் முருகப்பெருமானின் அருள் பெற்றதும், இப்போது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதும், 108 மகாவேலுக்கு அளவற்ற ஆன்மீக சக்தி, நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை வழங்குகிறது. இது உலகெங்கும் உள்ள முருக பக்தர்களுக்கான எங்களின் பணிவான அர்ப்பணிப்பு.  இங்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றி. 


திரு. T. S. ஜவஹர், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) பேசியதாவது…, 

வேல் என்றால்,  தெய்வீக சக்தி, ஞானம் மற்றும் பாதுகாப்பு. தமிழ் நாட்டில் எல்லோரும் முருக பக்தர்கள் தான். ஒரு ராசிக்கு ஒரு வேல் என 108 தனித்துவமான வேல்களை ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக உருவாக்கியிருக்கிறார் கிஷோர் கட்டாரியா. மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு சென்று  ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளார். இவரின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள். 


திரு. ஜெயந்திலால் சல்லாணி பேசியதாவது.., 

கிஷோர் கட்டாரியாவின் குல தெய்வம் முருகர் அல்ல, கும்பிடும் தெய்வமும் முருகர் அல்ல, ஆனால் முருகன் மீதான பிரியத்தால், பெரிய ஆராயச்சிகள் செய்து, இந்த 108 வேலை உருவாக்கியிருக்கிறார். இது கின்னஸ் ரெக்கார்டுக்கு தகுதியான சாதனை.  அவரது ஆன்மீக பயணம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள். 


திரு. K. T. ஸ்ரீனிவாச ராஜா பேசியதாவது.., 

இந்த நாளை வடிவமைத்து தந்த இறைவனுக்கு நன்றி. இந்த நாளின் சிறப்பாக முருகன் தெரிகிறார். திருச்செந்தூர் முருகன் தான் அனைத்துக்கும் துணை நிற்கிறார். நான் முருகரின் தீவிர பக்தன் ஆனால் எனக்கே தெரியாத பல விசயங்களைத் தேடி,  இப்படி 108 வேலை வடிவமைத்து,  ஒரு புதிய முயற்சியை செய்துள்ள கிஷோர் கட்டாரியா ஆச்சரியப்பட வைக்கிறார்.  அவருக்கு என் வாழ்த்துகள்.  ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான கடவுளான முருகனுக்கு, இப்படி ஒரு அஞ்சலி செய்துள்ள உங்கள் குடும்பத்திற்கு ஆசிர்வாதம் கிடைக்கட்டும். இன்னும் சிறப்பாக பல சாதனைகள் நீங்கள்  செய்ய வேண்டும். 



South Asia Book of Records சார்பில், திரு பாலவிநாயகம் பேசியதாவது…, 

South Asia Book of Records சார்பில் எவ்வளவோ பேருக்கு விருது வழங்கியுள்ளோம். ஆனால் இவ்விருதை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 


வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசியதாவது.., 

மகாவேல் விழாவிற்கு அழைத்ததற்கு என் நன்றிகள். முருகனை மிக ஆழமாக நேசித்து, சிந்தித்து, இந்த சாதனையை செய்துள்ள நண்பர்  கிஷோர் கட்டாரியா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.  என் தந்தை பேர் கதிர்வேலன் சினிமாவில் நடித்த பிறகு, ஐசரி வேலன் என மாறியது. அப்பாவின் பேரில் ஆரம்பிக்க வேண்டும்  என்றுதான் வேல்ஸ் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டது. 58 கல்வி நிலையங்கள் வெளிநாடு முதலாக நடத்தி  வருகிறோம். அதற்கு காரணம் நான் ஒரு முருக பக்தன். அது மட்டுமல்ல என் அப்பா பெயருடன் முருகன் பெயரும் உள்ளது தான் காரணம். என்னை எப்படி கிஷோர் அழைத்தார் எனத் தெரியவில்லை. 108 வேல் பற்றி அவர் விளக்கி சொன்ன விசயம் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. முருகருக்கு உகந்த இந்த நன்நாளில் இவ்விழா நடப்பது மகிழ்ச்சி.  கிஷோர் அவர்களின் முயற்சி உலகம் போற்றும் பெரிய முயற்சியாக மாற என் வாழ்த்துகள். 



இந்த சாதனையின் ஆன்மீகப் புனிதத்தன்மையை மேலும் உயர்த்தும் வகையில், 108 தெய்வீக வேல்களின் முழுத் தொகுப்பும், மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்து குகை (Batu Caves) ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 29.12.2025 அன்று சிறப்பு பூஜைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது. இந்தியா வெளியே உள்ள மிக சக்திவாய்ந்த முருகன் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் பத்து குகை, இந்த முயற்சிக்கு மிகுந்த தெய்வீக மகிமையைவழங்குகிறது.

108 தெய்வீக மகாவேல் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு வேலும் தனித்தனியாக ஆன்மீக ஆய்வுகளுடன் வடிவமைக்கப்பட்டு, ஆலய ஆசீர்வாதம் பெற்றதாகவும், புனித எழுத்துகள், ரத்தினங்கள், ராசி குறியீடுகள் மற்றும் புராண அர்த்தங்களுடன் அலங்கரிக்கப்பட்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்தத் தொகுப்பு, இந்துத் தத்துவம், ஜோதிடம், வானியல்மற்றும் ஆன்மீக அறிவியலில் மிக முக்கியமான “108” என்ற புனித எண்ணை அடிப்படையாகக் கொண்டது.


இந்த புனிதமும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க நிகழ்வு, பக்தி, தெய்வீகம்  மற்றும் அசாதாரண கைவினைத் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. 108 மகாவேல்கள் ஆன்மிக உலகில் ஒரு புதிய மைல்கல்லாக உருவெடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 108 வேல்கள்  பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

0 comments:

Pageviews