சிறை திரை விமர்சனம்

 

வேலூர் சிறையில் கொலைக் குற்றவாளியாக இருக்கும் அப்துல் ரவுஃபை (எல்.கே. அக்‌ஷய் குமார்), சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக காவல்துறை அதிகாரி கதிரவன் (விக்ரம் பிரபு) அழைத்துச் செல்கிறார். இந்த நீண்ட பயணத்தில் (Long Escort) அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், எதிர்பாராத திருப்பங்களும், அந்தப் பயணத்தின் இறுதியில் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களுமே படத்தின் கதை.


​​விக்ரம் பிரபு கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அடக்கி வாசித்திருக்கிறார். 'டாணாக்காரன்' படத்திற்குப் பிறகு இது இவருக்கு ஒரு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. ​அறிமுக நடிகர் எல்.கே. அக்‌ஷய் குமார் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு கைதி கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரியங்கா மோகன் விக்ரம் பிரபுவின் மனைவியாக, ஒரு இக்கட்டான சூழலில் தனது கணவன் எடுக்கும் தார்மீக முடிவிற்குத் துணையாக நிற்கும் வலுவான பெண்ணாக நடித்துள்ளார்.


'டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் கதை என்பதால், காவல்துறை நடைமுறைகள் மற்றும் அவர்களின் வலிகள் மிகவும் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகளைச் சரியாகக் கடத்துகிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு ஒரு பயணத்தின் அலுப்பையும், விறுவிறுப்பையும் திரையில் கொண்டு வந்துள்ளது.


இன்றைய சூழலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படும் நிலையில், சட்டத்தைக் காக்கும் இடத்திலும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையுடன் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர் சுரேஷ் இராஜ்குமார் மிகவும் துணிச்சலாகவும், எதார்த்தமாகவும் பதிவு செய்துள்ளார்.​


​'சிறை' - ஒரு நேர்மையான மற்றும் உணர்ச்சிகரமான பயணம்.

0 comments:

Pageviews