அங்கம்மாள் திரை விமர்சனம்

 

அங்கம்மாள் ஜாக்கெட் போடமா சுருட்டை புடிச்சிகிட்டு ஊர்ல யார் பேச்சையும் கேக்காம கெத்தா இருக்குற ஒரு ஆளு. அவங்களுக்கு இரண்டு மகன்கள், அதுல ஒருத்தன் Doctor, அந்த பையன் எனக்கு புடிச்ச மாதிரி அம்மா இருக்கணும்னு ஆசைப்பட்டு சில விஷயங்களை மாத்தணும்னு முயற்சி எடுக்குறான். அங்கம்மாள் மாறுனங்களா ? இல்லையா ? படத்தின் மீதிக்கதை 


அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் நடித்தது, சுருட்டு பிடிப்பது என தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு அதிகமாக உழைத்திருக்கிறார். சரண் இப்படத்தில் இன்னும் பலபடி மெருகேறி அசத்தியுள்ளார். நாடோடிகள் பரணிக்கு நின்று நிலைக்கக் கூடிய ஒரு கேரக்டர். புகுந்து விளையாடியுள்ளார். நாயகி முல்லையரசி, தென்றல் ரகுநாதன், உள்ளிட்ட எல்லாக் கேரக்டர்களும் நல்ல நடிப்பின் மூலமாக அங்கம்மாளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசையும், அன்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு நல்ல சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்து, அதை ஆகத்தரமாக மேக்கிங் செய்த விதத்தில் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் ஜெயித்திருக்கிறார்.

0 comments:

Pageviews