தேசிய தலைவர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தேவரின் ஆன்மீக வாழ்கையை படமாக்கும் ஜெ. நஷீர் சுல்தான்
தேசிய தலைவர் தேவர்பெருமான் திரைப்படம் கடந்த அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் 50வது நாள் விழா வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தேசிய தலைவர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தேவரின் ஆன்மீக வாழ்கையை இரண்டாம் பாகமாக பசும்பொன் சித்தர் என்ற தலைப்பில் டிரன்ட் சினிமா நிறுவனம் சார்பில் ஜெ. நஷீர் சுல்தான் தயாரிக்க இணைந்து தயாரிக்கிறார் கோவை RS புரம் ஆர்.ராதாகிருஷ்ணன்.
இதில் தேவராக பஷீர் நடிக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கம்: R.அரவிந்ராஜ், BA., D.F.Tech., இசை: தேனிசை தென்றல் தேவா. முக்கிய கதாபாத்திரங்களில் பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆன்மிக வாழ்க்கையையும் முருகக் கடவுளின் மறு அவதாரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்பதையும் கூறும் திரைக்காவியம் முக்குலத்தோர் பெரியவர்களின் வழிகாட்டுதலுடன் மதுரை ரத்தினவேல் பாண்டியன் ஒருங்கிணைப்புடனும் விரைவில் பசும்பொன்னில் துவங்க உள்ளது.











0 comments:
Post a Comment