தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் திரு.AVM. சரவணன் அவர்களின் மறைவு - இரங்கல் அறிக்கை

 

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.AVM. சரவணன் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது.


தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கோலோச்சி வரும் AVM Productions-ன் நிறுவனர் திரு.ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன், தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார். 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் பல முக்கிய, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். 1980-களில் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, வணிக ரீதியில் பல வெற்றி படங்களை உருவாக்கியவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் K. பாக்யராஜ் என பல முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர். எளிமைக்கும், பண்புக்கும், நட்புக்கும், தூய்மையான எண்ணங்களுக்கும் சொந்தக்காரர். தமிழ் நாட்டின் பல முதலமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தவர். சென்னை நகரின் SHERIFF-ஆக பணியாற்றியவர்.


இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் (Film Federation of India) தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். தனது  தூய்மையின் அடையாளமாக வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்தவர். 


திரைப்பட தயாரிப்பு துறையை பற்றி தெரிந்து கொள்ள அவர் எழுதிய 'நானும் சினிமாவும்' மற்றும் 'முயற்சி திருவினையாக்கும்' போன்ற புத்தகங்களையும், அவரின் பேட்டிகளை பார்த்தாலே போதும். அப்படிப்பட்ட ஒரு மாமனிதரை இழந்து வாடும் AVM குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,


T.G. தியாகராஜன், T. சிவா.

தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள்

0 comments:

Pageviews