BP 180 திரை விமர்சனம்

 

அரசு மருத்துவமனையில் நேர்மையான மருத்துவராக பணியாற்றுகிறார் தன்யா ரவிச்சந்திரன். அப்போது சென்னையின் முக்கிய புள்ளியான பாக்கியராஜின் மகள் விபத்தினால் உயிரிழக்கிறார். அவரின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் கேட்கிறார் பாக்கியராஜ். தன்யா ரவிச்சந்திரன் முறைப்படி போஸ்ட்மார்ட்டம் செய்தே அனுப்புவேன் என்கிறார். பாக்கியராஜ் பிரபல ரவுடியும் தனது சிஷ்யனுமான டேனியல் பாலாஜியிடம் உதவி கேட்கிறார். டேனியல் பாலாஜி தன்யா ரவிச்சந்திரனை மிரட்டி போஸ்ட் மார்ட்டம் வேண்டாம் என்கிறார். அதையும் மீறி தன்யா ரவிச்சந்திரன் போஸ்ட் மார்ட்டம் செய்ய டேனியலின் ஈகோ சீண்டப்படுகிறது. அதன் பின் நடக்கும் ஹீரோயின் வில்லன் மோதலே மீதிக்கதை


படத்தின் தலைப்பிற்கேற்ப முதல் பாதியில் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இடைவேளைக்கு முன் கதாநாயகி தன்யா பேசும் மாஸ் வசனம் புதுமையாகவும், ரசிக்கும்படியும் உள்ளது. மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி வில்லனாக மிரட்டியுள்ளார். MLAவாக வரும் அருள்தாஸ், கமிஷனராக வரும் தமிழ் ஆகியோரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.


ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு தேவையான பதற்றத்தை கூட்டுகிறது. ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், இளையராஜா சேகரின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. இயக்குனர் JP ஒரு பழிவாங்கும் கதையை வித்தியாசமான முறையில் கொடுக்க முயற்சி செய்து, அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளார்.


DIRECTED BY : JP


Production : Radiant international films & Atul India Movies


Distributor:

Uthraa productions (Hari Uthraa)



CAST :

1.Tanya S Ravichandran as Thangam

2.Daniel Balaji as Arnold

3.K.Bhagyaraj as Lingam

4.Aruldoss as MLA

5.Tamizh as Commissioner 

6.Nayana sai as Jenifer

7.SwethaDorathi as Selvi

8.JackArunachalam as Ranjith (social activist)

9.Ranga as Stalin


Music : Ghibran Vaibodha

DOP : Ramalingam

Editing : Elayaraja Sekar

Costumes : Sathya

Makeup : Rambabu

Art Director : Arunkumar

Stunt : Ramkumar

Choreographer: Harikiran

VFX : G.E.Ashok kumar

Production Executive : G.Thiruneelagandan

Digital PR : Ahmed Asjad

PRO : Suresh Chandra/Abdul A Nassar


Producers : Pratik D chhatbar &

Atul M Bosamiya


0 comments:

Pageviews