இரவின் விழிகள் திரை விமர்சனம்
முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காரில் வரும் யூடியூப் பிரபலம் ஒருவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்கிறார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் இருவரும் கொலைகாரனை தேடி அங்கு வருகிறார்கள். மறுபக்கம் நாயகன் மகேந்திரா, நாயகி நீமா ரே இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சில நாட்களிலேயே இருவரும் பிரபலம் அடைகிறார்கள். இந்நிலையில் இருவரையும் புதிய கடையை திறந்து வைக்க அழைப்பு வருகிறது. இந்நிலையில் புதிய கடையை திறந்து வைப்பதற்காக மகேந்திரா, நீமா ரே இருவரும் அந்த அடைந்த காட்டு வழியாக செல்லும் போது கார் விபத்துக்குள்ளாகிறது. நாயகன் மகேந்திரா மயக்கத்தில் இருக்க நாயகி நீமா ரேவை முகமூடி அணிந்த மர்ம நபர் தூக்கி சென்றுவிடுகிறார். முடிவில் முகமூடி மனிதரிடம் இருந்து நாயகி நீமா ரேவை மகேந்திரா காப்பாற்றினாரா ? இல்லையா ? முகமூடி அணிந்த மர்ம மனிதர் யார் ? அந்த மர்ம மனிதர் யூடியூப் பிரபலங்களை கொலை செய்வதற்கான காரணம் என்ன ? என்பதே படத்தின் மீதிக்கதை.
கர்ணா கதாபாத்திரத்தில் மஹேந்திரன், முதல் படமே என்றாலும் நிச்சயமாக கவனிக்க வைக்கும் நடிப்பை கொடுத்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் போன்ற அனுபவசாலிகள் தங்கள் வேடங்களில் நம்பகத்தன்மையை கூட்டியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாஸ்கர் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. இயக்குநர் – சிக்கல் ராஜேஷ் சோசியல் மீடியா புகழுக்காக எல்லை மீறும் இளைஞர்களின் போக்கை கண்டிக்கும் வலியமான கருத்தை அதிரடி த்ரில்லர் வடிவில் சொல்லியிருக்கிறார்.











0 comments:
Post a Comment