ஆரோமலே திரை விமர்சனம்
பள்ளியில் படிக்கும் சக மாணவியை காதலிக்க ஆரம்பிக்கிறார் கிஷன் தாஸ். அவரும் தன்னை காதலிக்கிறார் என நினைக்கிற வேளையில் ‘நீ என்னை தொந்தரவு பண்ணாதே, பிளீஸ்’ என்று ஒரு பர்த்டே பார்ட்டியில் முகத்திற்கு நேராக அந்த பெண் சொல்லிவிடுகிறார். கல்லுாரியில் படிக்கும்போது இன்னொரு மாணவியை காதலிக்க, அதுவும் புஸ். அப்புறம் படிப்பை முடித்துவிட்டு ஒரு மேட்ரிமோனியல் கம்பெனியில் வேலைக்கு சேருபவர், அங்கே மானேஜராக இருக்கும் ஷிவாத்மிகாவுடன் சில விஷயங்களில் முரண்படுகிறார், சண்டை போடுகிறார். அவரையும் ஒரு கட்டத்தில் காதலிக்கறார். இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
கிஷன் தாஸ் இயல்பான நடிப்பால் நாயகனின் உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். ஷிவாத்மிகா தன்னம்பிக்கையுடன், குளிர்ந்த குணம் கொண்ட கதாநாயகியாக பிரமாதமாக நடித்திருக்கிறார்.
ஹர்ஷத் கான் தனது நகைச்சுவையால் படத்தின் ஓட்டத்தை உற்சாகமாக்குகிறார், விடிவி கணேஷ் தனது அனுபவத்தால் கதைக்கு வலிமை சேர்க்கிறார்.
படத்தின் முக்கிய சிறப்பாக சிலம்பரசனின் (STR) குரல் விளங்குகிறது — ஆரம்பம் முதல் முடிவு வரை காதலின் மென்மையை அவரது வாய்ஸ் ஓவர் அழகாக வெளிப்படுத்துகிறது.
இயக்குனர் சாரங் தியாகு, கதாபாத்திரங்களை உயிரோடு வடிவமைத்து, சினிமா காதல் மற்றும் நிஜ காதல் இடையேயான வித்தியாசத்தை நிதானமாக காட்டியுள்ளார். காட்சிகளும், எடிட்டிங்கும் சீராக அமைந்துள்ளன.
ஆரோமலே ஒரு இனிமையான, யதார்த்த உணர்வுகளை கொண்ட காதல் படம்,











0 comments:
Post a Comment